கெலன்ஸ் பேர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் புத்தாண்டு

.

புத்தாண்டை வழிபாட்டு நாளாகவும் வருடத்தின் முதல் நாள் இறைவன் துணையோடு ஆரம்பிபக்க வேண்டும் என்றும் சிட்னி வாழ்மக்கள் சிட்னியில் உள்ள பல கோயில்களுக்கும் 1.11.11 அன்று சென்றுவந்தார்கள். கெலன்ஸ் பேர்க் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் மதிய பூசைக்கு பெருந்தொகையான மக்கள் திரண்டிருந்ததைகாணக்கூடியதாக இருந்தது. கார்ப்பார்க் நிறைந்து தெருவெங்கும் கார்கள் நிறுத்தியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இது என்ன திருவிழாவா காலமா என்று எண்ணும்படியாக பக்தர்கள் நிறைந்திருந்தார்கள்.
 உணவு சாலையில் உணவிற்காக நீண்ட வரிசையில் நின்றே உணவுப்பொருட்கனைபெறக்கூடியதாக இருந்தது இருந்தது மட்டுமல்லாது. பல உணவுவகைகள் முடிவடைந்து விட்டதாக அறிவித்துக்கொண்டிருந்ததையும் கேட்கக் கூடியதாக இருந்தது.


விஸ்னு ஆலயம் பிள்ளையார்சந்நிதி என்பவற்றில் தொடர்ச்சியாக அருச்சனைக்காக பக்தர்கள் வந்தவண்ணம் இருந்ததையும் அங்கே காணக் கூடியதாக இருந்தது.

No comments: