இலங்கைச் செய்திகள்


*   ஆச்சரியத்தை தராத தேர்தல் முடிவுகள்
* ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஷ்மன் உட்பட மூவர் துவக்குச் சூட்டில் பலி துமிந்த சில்வா எம்.பி.யுடன் 15 பேர் காயம்; முல்லேரியாவில் ஊரடங்கு

* வடக்கில் சேதமடைந்த 79 பாடசாலைகளை புனரமைக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றது 187 மில்லியன் ரூபா செலவிட ஒப்பந்தம் கைச்சாத்து

* உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாழ்ப்பாணத் தமிழன் தேசவழமைச் சட்டத்துக்கு உட்பட்டவன்' எவரும் குடாநாட்டில் காணியை கொள்வனவு செய்யத் தடையில்லை


ஆச்சரியத்தை தராத தேர்தல் முடிவுகள்

Monday, 10 October 2011

எதிர் பார்க்கப்பட்டதைப் போன்றே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 23 உள்ளூராட்சி சபைகளில் 21 ஐக் கைப்பற்றியுள்ளது. அதே சமயம் கல்முனை மாநகர சபையை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிஸும் கொழும்பு மாநகர சபையை பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வும் தம்வசமாக்கியுள்ளன.

குப்பை கூளங்களை அகற்றுதல், நீர் முகாமைத்துவம், தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்களை கையாளுவதற்கான அதிகாரங்களை குறித்த வரையறைக்குள் இந்த உள்ளூராட்சிச் சபைகள் கொண்டிருக்கின்ற போதிலும் இடம்பெற்ற தேர்தல் பிரசாரங்களும் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் கையாண்ட தேர்தல் உபாயங்களும் மிகவும் ஆச்சரியப்படத்தக்கவையாக காணப்பட்டன.

சமூகங்களின் தலைவிதியையே இந்த குட்டித் தேர்தல் மாற்றிவிடும் என்ற தொனியில் ஆளும் தரப்பும் எதிரணியும் ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரங்களை முன்னெடுத்திருந்தன.

மூன்றாவது கட்டமாகவும் இறுதிக் கட்டமாகவும் சனிக்கிழமை இடம்பெற்ற 23 உள்ளூராட்சி சபைகளில் பெரும்பாலானவை மாநகர சபைகளாகும். அதிலும் தலைநகரான கொழும்பு மாநகர சபைத் தேர்தலிலேயே கட்சிகள் தமது முழுப்பலத்தையும் பிரயோகித்து போட்டிக் களத்தில் சமராடின. ஆயினும் வழமைபோன்று ஐக்கிய தேசியக் கட்சியே கொழும்பு மாநகர சபையை கைப்பற்றியுள்ளது. ஆனால் 58 வருடங்களாக தன்வசம் வைத்திருந்த கண்டி மாநகர சபையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் ஐ.தே.க. இழந்துவிட்டது.

இந்தக் குட்டித் தேர்தல் மாணவர்களுக்கு பாடசாலைகளில் நடத்தப்படும் தவணைப் பரீட்சைகளைப்போன்று அதாவது அவர்களின் பெறுபேறுகளை கண்டறியும் சோதனை போன்று இந்தத் தேர்தல் அமைந்திருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இத் தேர்தலில் பாரிய வெற்றி பெற வேண்டும் என்பது கௌரவம் சம்பந்தப்பட்ட விடயமாகும். அதேவேளை பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வின் தலைமைத்துவத்துக்கு "இருப்பினை' கேள்விக்குறியாக்கும் விடயமாக தற்போதைய சூழ்நிலை உள்ளது.

22 சபைகளிலும் ஐ.தே.க.தோல்வி கண்டாலும் தனது கோட்டையான கொழும்பு கையைவிட்டுப்போகவில்லையென்று சிறிதளவு ஆறுதல் மூச்சை விடுவதாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.அதே சமயம் தென்னிலங்கையின் மூன்றாவது அரசியல் முகாமாக நோக்கப்பட்ட ஜே.வி.பி.பாரிய தோல்வியை தொடர்ந்து எதிர் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள உட் கட்சி மோதல்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலைமையில் இந்தத் தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமையும் என்பது எதிர்பார்க்கப்பட்ட விடயம் தான்.

வட,கிழக்கைத் தவிர்த்து நாட்டின் ஏனைய பகுதிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வாக்கு வங்கி சரிந்து விடவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன. ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் மக்கள் கொண்டிருக்கும் முழுமையான நம்பிக்கையின் வெளிப்பாடே என்று ஆளும் கட்சி அமைச்சரான நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். ஆனால் உட்கட்சி மோதல்களால் எதிரணி சிதறுண்டு இருப்பதே அரசின் பாரிய வெற்றிக்கான முதன்மைக்காரணம் என்பதை உறுதிபடக் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

தலைநகரில் மூன்றாவது அரசியல் சக்தியாக மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி மேலெழுந்து வந்திருக்கிறது. சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அக்கட்சி கொழும்பில் 6 இடங்களை கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாவதன் மூலம் அரசியல் உரிமைகளை பெற்றுவிட முடியும் என்று எண்ணுவது நடைமுறைச் சாத்தியமற்ற குழந்தைத் தனமான கருத்தாக அமைந்தாலும் சமூகங்கள் மத்தியிலான இனப்பிளவு விரிவடைந்திருப்பதற்கான அறிகுறியாகவும் இதனைக்கொள்ள முடியும். கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் அதிக ஆசனங்களை கைப்பற்றுவதன் மூலம் பேரம் பேசும் சக்தியாக தனது கட்சியை உருவாக்க முடியும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியிருந்தார். அவரின் கட்சிக்கு கொழும்பில் 6 ஆசனங்கள் கிடைத்துள்ளன. சபையில் மூன்றாவது அணியாக அவரின் கட்சி உறுப்பினர்கள் அமரவுள்ளனர். இந்த வெற்றி தேசிய நல்லிணக்கத்தை வென்றெடுப்பதற்கான ஜனநாயக வழி முறையென்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகம் அரச கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசமே சென்றிருக்கும் நிலையில் இவற்றில் எதிர்க்கட்சிகளின் "செயற்பாட்டு வலு' வெளிப்படையாகத் தெரிந்ததொன்றேயாகும்.

கொழும்பு மாநகர சபையை ஐ.தே.க. கைப்பற்றியுள்ள போதிலும் பெரிய நகரங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அரசாங்கம் ஐ.தே.க. நிர்வாகம் தனது பணியை முன்னெடுக்க எவ்வளவு தூரத்திற்கு அனுசரணையாக இருக்கும் என்பதும் சந்தேகத்திற்கு இடமானதேயாகும்.

இந்தக் கள நிலை யதார்த்தத்தை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடிமட்டத்திலிருந்து ஜனநாயகத்தை வளர்த்தெடுக்க வேண்டிய கடப்பாட்டை நிறைவேற்ற வேண்டும் என்பதே சாதாரண பொது மகனின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி தினக்குரல்

ஜனாதிபதியின் ஆலோசகர் பாரத லக்ஷ்மன் உட்பட மூவர் துவக்குச் சூட்டில் பலி துமிந்த சில்வா எம்.பி.யுடன் 15 பேர் காயம்; முல்லேரியாவில் ஊரடங்கு

Sunday, 09 October ௨௦௧௧

 முல்லேரியாவில் நேற்று சனிக்கிழமை மாலை ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களிடையே இடம்பெற்ற கடும் துப்பாக்கிச் சமரில், முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவும் அவரது இருமெய்ப்பாதுகாவலர்களும் கொல்லப்பட்டதுடன், கொழும்பு மாவட்ட ஆளுந்தரப்பு எம்.பி. துமிந்தசில்வாவும் அவரது சகாக்கள் பத்துப் பேரும் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து நேற்று மாலை ஐந்து மணிமுதல் முல்லேரியா பகுதியில் அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு நீக்கப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.

முல்லேரியா பகுதியில் வாக்களிப்பு நிலையமொன்றுக்கு அருகில் நேற்று மாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

கொலன்னாவ பிரதேச சபைக்கான நேற்றைய தேர்தலில் ஆளுந்தரப்பு உறுப்பினரிடையே விருப்பு வாக்கிற்குக் கடும் போட்டி நிலவியது. இந்தப் பகுதியைச்சேர்ந்த ஆளும் தரப்பின் பிரபல அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவாளர்களை இங்கு களமிறக்கியிருந்ததுடன் அவர்களில் யார் அதிக விருப்பு வாக்கைப் பெற்று சபைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதற்காக பல்வேறு வழிமுறைகளையும் கடைப்பிடித்தனர். இதனால் கடந்த ஒரு வாரமாக இப் பிரதேசத்தில் ஆளுந்தரப்பு வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களிடையே கடும் முறுகல் நிலை நிலவியதுடன் ஆங்காங்கே மோதல்களும் இடம்பெற்று வந்தன.

இந்த நிலையில் நேற்று தேர்தல் நடைபெற்று வாக்களிப்பு முடிவுறும் தருவாயில் பாரத லக்ஷ்மன்

பிரேமச்சந்திர தனது ஆதரவாளர்கள் சகிதம் முல்லேரியா பகுதிக்கு வந்திருந்தார்.

இவ்வேளையில் துமிந்த சில்வா எம்.பி.யும் தனது ஆதரவாளர் சகிதம் அப் பகுதிக்கு வரவே இரு தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி பின்னர் மோதல் நிலைக்குச் சென்றது.

இதன் போது இரு தரப்பு ஆதரவாளர்களும் துப்பாக்கிகள் சகிதம் மோதிக் கொண்டனர். சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர அவரது மெய்ப்பாதுகாவலர்களும் ஆதரவாளர்களும் துப்பாக்கிச் சூடுகளுக்கு இலக்காகி படுகாயமடைந்த அதேநேரம் அதன் பின்னர் இடம்பெற்ற பலத்த துப்பாக்கிச் சூட்டில் துமிந்த சில்வா எம்.பி.யும் அவரது ஆதரவாளர்கள் பத்துப்பேரும் படுகாயமடைந்தனர்.

இதனால் அந்தப் பகுதிபெரும் யுத்தகளமானதுடன் அப்பிரதேசத்தில் பெரும் அல்லோலகல்லோல மேற்பட்டது. தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களால் அனைவரும் நாலாபுறமும் சிதறியோடவே பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

இவ்வேளையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரத்தவெள்ளத்தில் கிடந்தவர்களை அவர்களது சகாக்கள் அவசர அவசரமாக வாகனங்களில் ஏற்றிக் கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுர ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்த நிலையில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர சம்பவ இடத்திலே நினைவின்றிக் கிடந்த நிலையிலேயே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது மெய்பாதுகாவலர்கள் இருவரும் அதே நிலையிலேயே இருந்தனர்.

ஜெயவர்த்தனபுர ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்ட இவர்கள் உடனடியாக அவரசர சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டனர்.

இதேநேரம் துமிந்த சில்வாவும் அவரது ஆதரவாளர்கள் பத்துப்பேரும் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் ஜெயவர்த்தனபுர ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

தலையிலும் மார்பிலும் படுகாயமடைந்த துமிந்த சில்வாவுக்கும் அவரது சகாக்கள் மூவருக்கும் உடனடியாக அவசர சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவும் அவரது மெய்ப்பாதுகாவலர் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்தச் செய்தி கொலன்னாவ, முல்லேரியா பகுதியெங்கும் பரவவே அப்பிரதேசங்களில் பெரும் பதற்றமும் கொந்தளிப்பும் ஏற்பட்டது. அவரது ஆதரவாளர்கள் வீதிகளிலிறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அங்கு வந்த பொலிஸ் ஜீப் ஒன்றையும் தீக்கிரையாக்கினர்.

இங்கு இடம்பெற்ற மோதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளையடுத்து அப்பகுதிக்கு இராணுவத்தினரும் விசேட அதிரடிப் படையினரும் கலகமடக்கும் பொலிஸாரும் பெருமளவில் அனுப்பப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் விசேட அதிரடிப் படையினருடன் மோதல்களில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க படையினரும் பொலிஸாரும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டதுடன் நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்காக முல்லேரியா பிரதேசத்தில் மாலை ஐந்து மணி முதல் பொலிஸ் ஊரடங்கு அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இன்று காலை 6 மணி வரை இது அமுலிலிருக்குமெனவும் பொலிஸார் அறிவித்தனர்.

பொதுமக்களை வீடுகளுக்குள் இருக்குமாறும் வெளியே வரவேண்டாமெனவும் அப்பகுதியெங்கும் பொலிஸார் ஒலிபெருக்கி மூலமும் அறிவித்தனர்.

இதற்கிடையில் தலையில் அவசர சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட துமிந்த சில்வா ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக ஜெயவர்தனபுர வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஏ.கே.கமகே தெரிவித்தார். எனினும் வேறு மூவரது உடல்நிலை கவலைக்கிடமாயிருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தனர்.

நன்றி தினக்குரல்

காணி மீள்பதிவு நடவடிக்கை ஓர் இனவாத செயற்பாடு: ரஞ்சன் மாத்தாயிடம் த.தே.கூ தெரிவிப்பு
10/10/2011

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் மட்டும் காணிகளை திடீரென மீள்பதிவு செய்யும் நடவடிக்கையானது இனவாத செயற்பாடாகும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மாத்தாயிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மாத்தாயை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் நேற்று கொழும்பில் சந்தித்துள்ளனர். சுமார் ஒரு மணிநேரமாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது, இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நிறைவடையாத நிலையில் உள்ள மீள்குடியேற்றம், திடீரென மேற்கொள்ளப்படும் காணிப்பதிவுகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ்ப்பகுதிகளில் சிங்கள உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை உருவாக்க முயற்சி போன்ற பலதரப்பட்ட பிரச்சினைகளை முன்வைத்துள்ளதாகவும் இப்பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக மாத்தாய் கூறியதாகவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ___
நன்றி வீரகேசரி
வடக்கில் சேதமடைந்த 79 பாடசாலைகளை புனரமைக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றது 187 மில்லியன் ரூபா செலவிட ஒப்பந்தம் கைச்சாத்து Wednesday, 12 October ௨௦௧௧
வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் யுத்தத்தால் சேதமுற்ற 79 பாடசாலைகளை புனரமைக்கும் பொறுப்பை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் இதற்காக 187 மில்லியன் ரூபாவையும் செலவிடவுள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கை கடந்த 10 ஆம் திகதி திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டது.

இந்த உடன்படிக்கையில் இலங்கை அரசு சார்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இந்திய அரசுசார்பாக இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் எச்.ஈ.அசோக் கே.காந்தாவும் கைச்சாத்திட்டனர்.

இவ்வுடன்படிக்கைக்கு அமைவாக பின்வரும் பாடசாலைகள் திருத்தவேலைகளுக்காக இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டம் பிரிவு கல்வி வலயம் பாடசாலையின் பெயர்

கிளிநொச்சி கரைச்சி கிளிநொச்சி கிநொ/அழகாபுரி அ.த.பா

கிளிநொச்சி கரைச்சி கிளிநொச்சி கிநொ/பெரியபுலம் ஐனார் அ.த.பா

கிளிநொச்சி கரைச்சி கிளிநொச்சி கிநொ/செல்வநகர் அ.த.பா

கிளிநொச்சி கரைச்சி கிளிநொச்சி கிநொ/சிவபத கலையகம் அ.த.பா

கிளிநொச்சி கரைச்சி கிளிநொச்சி கிநொ/வட்டக்கச்சி அ.த.பா

கிளிநொச்சி கரைச்சி கிளிநொச்சி கிநொ/சாந்தபுரம் கலைமகள் அ.த.பா

கிளிநொச்சி கரைச்சி கிளிநொச்சி கிநொ/யூனியன்குளம் அ.த.பா

கிளிநொச்சி கரைச்சி கிளிநொச்சி கிநொ/கண்ணகைபுரம் அ.த.பா

கிளிநொச்சி கரைச்சி கிளிநொச்சி கிநொ/ஒட்டுப்பள்ளம் அ.த.பா

கிளிநொச்சி கரைச்சி கிளிநொச்சி கிநொ/ஆனைவிழுந்தான் குளம் அ.த.பா

கிளிநொச்சி கரைச்சி கிளிநொச்சி கிநொ/மாயவனூர் அ.த.பா

கிளிநொச்சி கரைச்சி கிளிநொச்சி கிநொ/பன்னன் கண்டி உ.த.பா

கிளிநொச்சி கரைச்சி கிளிநொச்சி கிநொ/கனகபுரம் மா.வி

கிளிநொச்சி கண்டாவளை கிளிநொச்சி கிநொ/கட்டைக்காடு அ.த.பா

கிளிநொச்சி கண்டாவளை கிளிநொச்சி கிநொ/குமாரசாமிபுரம் அ.த.பா

கிளிநொச்சி கண்டாவளை கிளிநொச்சி கிநொ/ முரசுமோட்டை அ.த.பா

கிளிநொச்சி கண்டாவளை கிளிநொச்சி கிநொ/புளியம் பொக்கணை நாகேந்திர வித்தியாலயம்

கிளிநொச்சி கண்டாவளை கிளிநொச்சி கிநொ/களவெட்டித்திடல் நாகேஸ்வரா வித்தியாலயம்

கிளிநொச்சி கண்டாவளை கிளிநொச்சி கிநொ/புண்ணைநீராவி அ.த.பா

கிளிநொச்சி கண்டாவளை கிளிநொச்சி கிநொ/இராமநாதபுரம் கிழக்கு அ.த.பா

கிளிநொச்சி கண்டாவளை கிளிநொச்சி கிநொ/தம்பிராசபுரம் அ.த.பா

கிளிநொச்சி கண்டாவளை கிளிநொச்சி கிநொ/கண்டாவளை ம.வி

கிளிநொச்சி கண்டாவளை கிளிநொச்சி கிநொ/பரந்தன் அ.த.பா

கிளிநொச்சி கண்டாவளை கிளிநொச்சி கிநொ/பூநகரி நல்லூர் ம.வி

கிளிநொச்சி பூநகரி கிளிநொச்சி கிநொ/சுன்னாவில் அ.த.பா

கிளிநொச்சி பூநகரி கிளிநொச்சி கிநொ/கரியாலஜ நாகப்ப தேவன் NO: 3அ.த.பா

கிளிநொச்சி பூநகரி கிளிநொச்சி கிநொ/செல்லையாதீவு அ.த.பா

கிளிநொச்சி பூநகரி கிளிநொச்சி கிநொ/குமுழமுனை அ.த.பா

கிளிநொச்சி பூநகரி கிளிநொச்சி கிநொ/வலைப்பாடு றோ.க.த.பா

கிளிநொச்சி பூநகரி கிளிநொச்சி கிநொ/வினாசிஓடை அ.த.பா

கிளிநொச்சி பூநகரி கிளிநொச்சி கிநொ/ முக்கொம்பன் அ.த.பா

கிளிநொச்சி பூநகரி கிளிநொச்சி கிநொ/செம்பன்கிணறு அ.த.பா

கிளிநொச்சி பூநகரி கிளிநொச்சி கிநொ/சமிபுலம் அ.த.பா

கிளிநொச்சி பூநகரி கிளிநொச்சி கிநொ/பரமன் கிரங் அ.த.பா

முல்லைத்தீவு கரைப்பற்று முல்லைத்தீவு முதீ/ முள்ளியவளை நோ.க. அ.த.பா

முல்லைத்தீவு கரைப்பற்று முல்லைத்தீவு முதீ/ வற்றாப்பளை ம.வி

முல்லைத்தீவு கரைப்பற்று முல்லைத்தீவு முதீ/ தண்ணீர் ஊற்று எச்.பி.த.பா

முல்லைத்தீவு கரைப்பற்று முல்லைத்தீவு முதீ/வித்தியானந்தா கல்லூரி

முல்லைத்தீவு கரைப்பற்று முல்லைத்தீவு முதீ/ முள்ளியவளை த.வி

முல்லைத்தீவு கரைப்பற்று முல்லைத்தீவு முதீ/சிலாவத்தை த.வி

முல்லைத்தீவு கரைப்பற்று முல்லைத்தீவு முதீ/ குமுழமுனை ம.வி

முல்லைத்தீவு கரைப்பற்று முல்லைத்தீவு முதீ/ தண்ணீர் ஊற்று மு.வி

மாவட்டம் பிரிவு கல்விவலயம் பாடசாலை யின் பெயர்

முல்லைத்தீவு கரைப்பற்று முல்லைத்தீவு முதீ/ தண்ணீர் ஊற்று சி.சி.த.பா

முல்லைத்தீவு கரைப்பற்று முல்லைத்தீவு முதீ/ செம்மலை ம.வி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு முதீ/ விஸ்வமடு ம.வி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு முதீ/நெத்தலியாறு த.வி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு முதீ/பாரதி வித்தியாலயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு முதீ/தேராவி அ.த.பா

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு துணுக்காய் முதீ/மல்லாவி மத்திய கல்லூரி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு துணுக்காய் முதீ/யோகபுரம் ம.வி

நன்றி தினக்குரல்


உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாழ்ப்பாணத் தமிழன் தேசவழமைச் சட்டத்துக்கு உட்பட்டவன்' எவரும் குடாநாட்டில் காணியை கொள்வனவு செய்யத் தடையில்லை
Wednesday, 12 October

 தமிழனாக இருந்து யாழ்ப்பாணத்தில் பிறந்த எந்தவொரு நபரும் தேசவழமைச் சட்டத்திற்குள் உள்வாங்கப்படுவரெனக் கூறியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஆர்.சுரேந்திரன் யாழ்ப்பாணத்தைச் சேராதவர்களுக்கும் அங்கு காணியை கொள்வனவு செய்வதற்குத் தடை விதிக்கும் எந்தவொரு சட்டமும் அமுலில் இல்லையெனவும் தெரிவித்தார்.


வட மாகாண உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்குமான சட்ட அறிவூட்டல் கருத்தரங்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றபோது உரை நிகழ்த்துகையிலேயே ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஆர்.சுரேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

தேசவழமைச் சட்டம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

தேச வழமை என்பதை தேசத்தின் வழமையென கருத்தில் கொள்ளலாம். தேசவழமைச் சட்டம் சட்டங்களில் மிகவும் முக்கியமானதொரு சட்டமாகும்.

தேசவழமைச் சட்டம் வாழ்வின் எத்தனையோ சந்தர்ப்பங்களில் எம்மைத் தொட்டுச் செல்கின்றது. குறிப்பாக வடக்கில் அதிலும் யாழ்ப்பாணத்திலுள்ள சட்டங்களில் தேசவழமைச் சட்டம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தேசவழமைச் சட்டம் எவ்வாறு சட்டமாக்கப்பட்டது என்பதனை ஆராய்ந்தால் யாழ்.மக்களால் தொன்று தொட்டு பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒழுக்க முறைமைகளைத் தொகுத்தே தேசவழமைச் சட்டம் உருவாக்கப்பட்டது.

1707 ஆம் ஆண்டில் தேச வழமை சேவையென உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம் 1800 களில் சட்டமாக ஒழுங்கமைக்கப்பட்டு தேசவழமைச் சட்டமாக உருப்பெற்றது.

மகா தேசாதிபதி ஜோன் சைமன் தேசவழமைச் சட்டம் நாட்டின் வழமையெனக் கூறியுள்ளார்.

இத் தேசவழமைச் சட்டம் எத்தனையோ மாறுதல்களுடன் வாழ்வின் எந்தவொரு அத்தியாயத்தையும் தொட்டுச் செல்கின்றது. 1869 இல் தேசவழமைச் சட்டத்தை கற்றுக் கொண்ட அப்போதைய பிரதம நிதியரசர் அலெக்சான்டரா ஜொனாதன் தேசவழமைச் சட்டத்தை மக்கள் வழங்கும் மரியாதை எனவும் வட பகுதி மக்களால் புனிதமாகப் போற்றப்படும் ஒரு சட்டம் எனவும் அச்சட்டத்தினை மேலைத்தேய நீதிபதிகளும் கற்று அதன் பிரகாரம் தீர்ப்பு வழங்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.

இன்று நாம் நாளாந்தம் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றோம். ஒருவர் இறந்தால் சொத்துக்களை எவ்வாறு பிரிப்பது, எவருடைய பெயரிற்கு மாற்றுவது என்பன உள்ளிட்ட பல பிரச்சினைகள் உண்டு.

அதேவேளை பிள்ளைகள் அற்ற பெற்றோர் இறந்தால் அந்தச் சொத்துக்களை எவ்வாறு பிரிப்பது என்பன குறித்தும் பல பிரச்சினைகள் எழுவதுண்டு. கணவன் இறக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் சரிசமமாக சொத்துக்கள் பிரிக்கப்படவேண்டும். 50 வீதம் மனைவிக்கும் 50 வீதம் பிள்ளைகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.

தேடிய தேட்டம், முதுசொம், சீதனம் என சொத்துக்கள் மூன்று வகைப்படும். தேடிய தேட்டம் கணவன், மனைவியின் இல்லற வாழ்வின் போது கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள். இதற்கு கணவனும் மனைவியும் பங்குதாரர்கள் முதுசொம் பரம்பரை பரம்பரையாக வரும் சொத்துக்கள். மற்றையது சீதனச் சொத்துக்கள்.

தேசவழமைச் சட்டத்தின் அடிப்படையில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சர்வானந்தா கந்தசாமி எதிர் மாணிக்கவாசகர் என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பு சிறந்த உதாரணமாகும்.

இல்லறத்தின் போது மனைவியோ கணவனோ சொத்தினை கொள்வனவு செய்தால் இருவருக்குமே அதில் சம உரிமை உண்டு. கணவன் கொள்வனவு செய்யும் சொத்தில் மனைவிக்கும் மனைவி கொள்வனவு செய்யும் சொத்தில் கணவனுக்கும் சம உரிமை உண்டு.

கணவன் மனைவிக்கு எழுதப்பட்ட ஆதனத்தையோ அல்லது மனைவிக்கு எழுதப்பட்ட ஆதனத்தையோ மனைவியின் அனுமதியின்றி கணவன் அடகு வைக்க முடியும். ஆனால் விற்பனை செய்ய முடியாது. திருமணத்தின் பின்னர் கணவன்,மனைவியின் ஒரு பிரதிநிதியாகவே செயற்படுவார். இதனால் கணவன் சுயேச்சையாக செயற்பட முடியும்.

ஆனால் மனைவிக்கு எழுதியிருந்தாலும் அந்த ஆதனத்தை மனைவியால் மாத்திரம் ஒப்பமிட்டு விற்பனை செய்யவோ அடகு வைக்கவோ முடியாது. பெண்ணியம்,சம உரிமை குறித்து நாம் இன்று பேசிக் கொண்டாலும் திருமணத்தின் பின்னர் பெண்கள் தேசவழமைச் சட்டத்திற்கு உட்பட வேண்டும்.

அதேவேளை, கணவன் வெளிநாட்டில் இருந்தால் குறித்த ஆதனத்தை விற்பனை செய்வதற்கு எவ்வாறாயினலும் கணவனின் ஒப்பத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லாதுவிடின் அந்த சொத்துக்களை விற்பனை செய்ய முடியாது.

ஆனால் சில குறித்த சந்தர்ப்பங்களில் மனைவி நீதிமன்றம் சென்று கணவர் ஆதனப்பத்திரத்தில் கைச்சாத்திட சரியான காரணம் எதுவும் இன்றி மறுப்புத் தெரிவிக்கின்றார் என வழக்குத் தாக்கல் செய்தால் வழக்கை விசாரித்த பின்னர் அந்த சொத்தினை விற்பனை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கும்.

அதேவேளை கணவனும் மனைவியும் இணைந்து ஆதனங்களை அனுபவிக்கின்ற சில விடயங்களில் கட்டுப்பாடுகள் உண்டு. இல்லற வாழ்வின் போது மனைவியால் தனியாக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது. அதேவேளை மனைவிக்கு எதிராக ஒருவர் வழக்குத் தாக்கல் செய்தால் கணவனும் மனைவி சார்பில் கட்சிக்காரராகின்றார். கணவனும் கட்சி தாரராக இணைக்கப்படவேண்டும்.

அதேவேளை இல்லறத்தின் போது மனைவியோ கணவரோ தமது ஆதனத்தின் அல்லது சொத்தின் பெறுமதியின் 50 வீதத்திற்கும் குறைவானதையே தேடி தேட்ட ஆதனத்தில் பிள்ளைகளுக்கு நன்கொடையாக கொடுக்கலாம்.

அதேவேளை மனைவி இறந்தால் மனைவியின் சொத்தில் 25 வீதம் பிள்ளைகளுக்கும் 25 வீதம் கணவனுக்கும் சென்றடையும். கணவன் இறந்தால் மனைவிக்கு பிள்ளைகள் இல்லாவிடின் 75 வீதமான சொத்துக்கள் வந்தடையும்.

அதேவேளை கணவன் தேசவழமைச் சட்டத்திற்கு உட்படாதவராக இருந்தால் மனைவிக்கு 50 சதவீதமும் கணவனின் சகோதரர்களுக்கு 50 வீதமும் சொத்துக்கள் சென்றடையும்.

தமிழனாக இருந்து யாழ்ப்பாணத்தில் பிறந்த எந்தவொரு நபரும் தேசவழமைச் சட்டத்திற்கு உட்பட்டவராவார். குறித்த ஒரு நபர் யாழ்ப்பாணத்தில் பிறந்து வெளிநாட்டில் அந்நாட்டின் குடியுரிமையை பெற்றிருந்தாலும் யாழ்ப்பாணத்துடன் பூர்வீகத் தொடர்புகளை பேணுமிடத்தில் அவர் தேச வழமைச் சட்டத்திற்கு உட்பட்வராவார்.

அதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள காணிகளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு தான் விற்பனை செய்ய வேண்டுமென எந்தச் சட்டமும் கூறவில்லை. சொந்தக் காணியாக இருந்தால் ஏனைய பங்குதாரர்கள் கொள்வனவு செய்யாதவிடத்து அக்காணியை பிறருக்கு விற்பனை செய்ய முடியும்.

சிறுபான்மையினர் தமது கலாசார மரபுகளை பேணிப் பாதுகாத்து வளர்த்துக் கொள்வதற்கே தேசவழமைச் சட்டம் வழி வகுக்கின்றதென வெளிநாட்டவர்களால் கூறப்படுகின்றது எனத் தெரிவித்தார்.
நன்றி தினக்குரல்

No comments: