அவுஸ்திரேலியா மெல்பேர்ன் மேதினப் பேரணி

.

அவுஸ்திரேலியாவின் விக்ரோரியா மாநிலத்தில் 02-05-2010 ஞாயிற்றுக்கிழமை மே நாள் பேரணி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அவுஸ்திரேலியாவின் ஏனைய பல்லின சமூகத்தினருடனும் தொழிலாளர் இணையங்களுடனும் இணைந்து அவுஸ்திரேலிய மெல்பேர்ன் தமிழ் சமூகத்தினரும் பங்குகொண்டனர்.




மதியம் ஒரு மணியளவில் விக்ரோரியா வீதி றசல் வீதி சந்தியில் ஆரம்பமான பேரணிகளில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். தத்தமது அரசியல் சமூக பிரச்சனைகளை முன்வைத்து பல்வேறு சுலோகங்களையும் பதாகைகளையும் தாங்கியவாறு மெல்பேண் நகர பகுதி ஊடாக நகர்ந்த பேரணியை ஆயிரக்கணக்கான மக்கள் வீதி வழியே நின்று பார்வையிட்டனர்.



அவுஸ்திரேலிய தமிழ் சமூகத்தை சேர்ந்த பலரும் பங்குகொண்டு தாயகத்தில் வாழும் மக்களின் நெருக்கடி நிலையை வெளிப்படுத்த கூடிய சுலோக அட்டைகளை தாங்கிச்சென்றனர். தமிழீழ தேசிய கொடிகளை ஏந்தியவாறு நகர்ந்த பேரணியில் தமிழ்ச்சமூக அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடியவாறு சேலைகளை அணிந்த பெண்களும் வேட்டிகளை அணிந்த இளையோர்களும் பங்குகொண்டனர்.

மெல்பேணின் முக்கிய பகுதிகள் ஊடாக சென்ற இப்பேரணியானது லைகோன் வீதி வர்த்தக மையத்தை அடைந்து அங்கு மேதின பொதுக்கூட்டம் இடம்பெற்றதோடு 3.30 மணியளவில் நிறைவுபெற்றது.

No comments: