சுழலும் தமிழ் உலகம் நூல்வெளியீட்டு விழா என் பார்வை

.
                                                                                                           கவிஞர் செ.பாஸ்கரன்.

சுழலும் தமிழ் உலகம் நூல்வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை ஹோம்புஸ் உயர் பாடசாலையில் இடம் பெற்றது. 5.30 மணிக்கு ஆரம்பமாகும்; என அழைப்பிதழில் போடப்பட்டிருந்தபோதும் 6.10 இற்கு நிகழ்ச்சி ஆரம்பமானது.


            நூலாசிரியர் சந்திரலேகாவிடம் வானொலி மாமா நா.மகேசன் பிரதி வாங்குகிறார்



நிகழ்வை ஆரம்பித்து வைக்க செல்வி ஜதுகிரி லோகதாசன் மேடைக்கு வந்தார் மங்கல விளக்கேற்றல், தமிழ் மொழிவாழ்த்து, என்பன இடம் பெற்றது. தமிழ் மொழி வாழ்த்தையும் பாரதி பாடல் ஒன்றையும் யதுகிரி பாடியது மிக அருமையான ஆரம்பமாக இருந்தது.


தொடர்ந்து நிகழ்ச்சித் தொகுப்பாளராக திருமதி ஞானா அசோகன் புன்னகையோடு பொன் மொழிகளையும் சேர்த்து அறிவிப்பை நடாத்தினார் முதலில் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமாறு பிரபல பேச்சாளரும் எழுத்தாளருமான திருமதி பாலம் லக்சுமணஜயர் அவர்களையும் நூலைப்பற்றி உரையாற்ற கவிஞர் வைதீஸ்வரன், திருமதி. பாமதி சோமசேகரம், திருமதி.யசோதா பத்மநாதன், கம்பன் கழக பேச்சாளர் திரு திருநந்தகுமார் ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டார்கள்.



   திருமதி பாலம் லக்சுமணஜயர் அவர்களின் தலைமையுரை

தலைமையுரையில் திருமதி பாலம் லக்சுமணஜயர் அவர்கள் சுழலும் தமிழ் உலகம் என்ற பெயர்ப்பொருத்தம் பற்றி நூலாசிரியர் கொடுத்திருந்த விளக்கத்தை கூறினார். அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று பிரிட்டிஸ் சாம்ராஜ்யம் இருந்தது ஒரு காலம் இன்று சுழன்றுகொண்டிருக்கும் தமிழனுக்கு அஸ்தமிக்காத சூரியனனை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது, ஏதோ ஒரு பகுதியில் தமிழன் உறங்காது ஏதோ செய்து கொண்டிருக்கின்றான். ஏன்று நூலாசிரியர் குறிப்பிட்டிருந்ததை தன் அழகு தமிழில் கூறினார். அந்தப்பொழுதுகளில் நெஞ்சம் கனத்தது. புலம் பெயர்ந்து உலகம் முழுவதும் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழன்வாழ்வு அவலமா? ஆனந்தமா? ஏன்ற விடைகிடைக்காத கேள்வி எழத்தான் செய்தது. சில நாட்களின் பின் மீண்டும் திருமதி பாலம் லக்சுமணஜயர் அவர்களின் சொற் பிரவாகங்கள் நல்லதமிழை தந்ததுமட்டுமல்லாமல் நூலாசிரியரின் ஆழமான பார்வையையும் சமூகத்தின் பால் அவர் கொண்டுள்ள ஆதங்கத்தையும் மிக அழகாக சொல்லி வைத்தார்.

அவர் உரையாற்றி முடிந்ததும் மீண்டும் நிழச்சி தொகுப்பாளர் வந்து அவருடைய உரையைப்பற்றி சிறிது கூறிவிட்டு அடுத்த பேச்சாளரான கவிஞர் வைதீஸ்வரனை அறிமுகப்படுத்தி உரையாற்றுமாறு அழைத்தார். ஏனக்கு இது சற்று வித்தியாசமாக இருந்தது. அந்த அரங்கிற்கு தலைமை தாங்குவதற்கு தமிழிலும் பேச்சிலும் வல்லமைமிக்க அம்மையார் திருமதி பாலம் லக்சுமணஜயர் அவர்கள் இருக்கும்போது. ஏன் விழா அமைப்பாளர்கள் இடையில் நிகழ்ச்சித் தொகுப்பாளரை கொண்டு வந்தார்கள் என்பது எனக்குள் ஒரு வினாவாகவே இருந்தது. வழமையாக அரங்கின் தலைவரே அரங்கை நடாத்திச்செல்வார் அது ஆழமான கருத்தாடலாகவும் இருக்கும், அதற்காகத்தானே தலைவராக விமர்சன ஞானம் உள்ளவர்கள் சிறந்த பேச்சாளர்கள் அறிஞர்களை தேர்ந்து அழைப்பது. ஆனால் இப்படித்தான் செய்ய வேண்டும் என்பது நியதி இல்லை என்பதை ஏற்றுக்கொள்கின்கின்றேன், பழையன கழிதலும் புதியன புகுதலும் ஆரோக்கயமாக இருந்தால் செய்யவேண்டியதே.

           சபையினரில் ஒரு பகுதியினர்
நகரச்சுவர்கள் என்ற கவிதைத் தொகுதிமூலம் என்னை கவர்ந்து என்னோடு அறிமுகமான கவிஞர் வைதீஸ்வரன் அவர்கள் உரையாற்றும்போது அவருக்கே உரிய பாணியில் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு உரையாற்றினார். வானொலியில் நிகழச்சியாக பதிந்ததை நூலாக வெளிக்கொண்டு வரும்போதுகூட தமிழில் எந்தவித தடங்கலோ கலப்போ இல்லாமல் அழகாக அமைந்திருப்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.

அடுத்த பேச்சாளராக திருமதி பாமதி சோமசேகரம் அவர்கள் நூலைப் பற்றி பேசும்போது இது வருங்காலச் சந்ததியினருக்கு தமிழர்களின் புலப்பெயர்வு வாழ்வின் தடயங்களாக இருக்கும் என்று மிக அருமையான எடுத்துக் காட்டுகளோடு பேசினார். எங்கள் மொழி தெரியாதவர்களுக்கும் நமது கலாச்சார அடையாளங்கள் பற்றி விளக்கம் கொடுக்க தேவையான நிறைய விடயங்கள் அமைந்துள்ள ஒரு நூல் என்று குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாது கதாசிரியர் தன்னோடு பழகிய விதத்தில் அவரது அவா இந்த சமூகத்திற்கு எப்படி பணிபுரியலாம் என்ற ஆர்வம் கொண்டவர் என்றும் அதனால்தான் சமூகத்தின் வேர்வரை சென்று அலசிஇருக்கின்றார் என்று எடுத்துக்காட்டினார். இவரது ஆழமான பேச்சை உன்னிப்பாக சபையோர்கள் செவி மடுத்துக்கொண்டிருந்தார்கள் அந்த வேளையிலே பேப்பர் சரசரக்கும் ஒலி சபை பக்கமாக கேட்டது திரும்பிப் பார்த்தேன் பேர்பர் பைகளில் போட்டு சிற்றுண்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மீண்டும் பேச்சை செவிமடுக்க திரும்பினேன் அந்த பேச்சின் ஆழத்தில் ரசிக்க முடியாத படி தொடர்ந்து கொண்டிருந்தது இந்த சரசரப்பு சத்தம். சில வெளியீடுகளில் சிற்றுண்டி சாப்பிட வேண்டும் போல் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் இங்கு பேச்சின் ஆழமோ நூலின் ஆழமோ தெரியவில்லை சத்தம் கேட்டது பொறுக்க முடியாத எரிச்சலைத்தந்தது. இதற்கு ஏதாவது மாற்றீடு உள்ளதா என்பதை அடுத்து வரும் வெளியீடுகளில் சிந்திப்பது நல்லது.

                                         சபையினரில் ஒரு பகுதியினர்
அடுத்த பேச்சாளராக வந்த யசோதா பத்மநாதன் தனக்கு பேச தெரியாது நான் வாசிக்கிறேன் என்று தொடங்கி நீண்ட நேரம் தன் கருத்துக்களை முன் வைத்தார். முன்னுரை பற்றி மிகவும் ரசனையாக குறிப்பிட்டார். ஒரு நூலுக்கு எப்படி முன்னுரை அமைய வேண்டும் என்றும் இந்த நூலின் முன்னுரை அமைந்த விதம் பற்றியும் அலசினார். அது மட்டுமல்லாது நூலில் சொல்லப்பட்ட விடயங்களோடு தொடர்பான சில விடயங்களையும் கொண்டு வருவதற்காக ஒரு சிறுகதையையும் வாசித்துக்காட்டினார். திருமணமான சில பெண்களின் தேவைகள் அவை கிடைக்காத போது குடும்பத்தில் ஏற்படு;ம் பிரச்சினைகள் அவற்றை தீர்ப்பதற்கான வழிவகைகள் போன்ற விடையங்களை அந்தக் கதைமூலம் சுட்டிக் காட்டிய யசோதா சமுதாயத்திற்கு பயந்து இவற்றை தொடாமல் நழுவிக்கொண்டு செல்லுகின்ற எழுத்தாளர்கள் அவற்றை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

தொடர்ந்து திரு திருநந்தகுமார் அவர்கள் தனது பேச்சை சற்று சுவாரசியமாக ஆரம்பித்து நீண்ட நேரம் இலக்கிய பேச்சை கேட்டுக்கொண்டிருந்தவர்களை சிரிக்கவைத்து தனது கம்பீரமான குரலிலே கோபத்தை பற்றி நூலாசிரியர் என்ன சொல்லி உள்ளார் என்றும் அதை ஆங்கில எழுத்தாளர் டீசழறn டீயசமநச எப்படிச் சொல்லியிருந்தார் என்றும் மிக நகைச்சுவையாக கூறியது பார்வையாளர்களை கவர்ந்திருந்தது. சபையை பார்த்து இது ஒரு கனமான சபை ஒருவர்கூட கதைக்காமல் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டார். உண்மையில் அன்றைய சபை இலக்கிய ரசனை உள்ள சபையாகவே காணப்பட்டது. இலக்கித்தோடு பரீட்சயமானவர்களே நிறைந்திருந்தார்கள். சில வாரங்களுக்கு முன்பு இதை நூலாசிரியர் சந்திரலேகா அவர்களுடன் கதைக்கும் போதும் குறிப்பிட்டிருந்தேன். அதிக எண்ணிக்கையான ஆட்கள் உள்ள சபைபை விட இலக்கியத்தை நுகரக்கூடிய சபையே பொருத்தமாக இருக்குமென்று. ஆனால் அன்றைய சபையோ இலக்கியத்தோடு சம்பந்தப்பட்டவர்களால் நிரம்பியிருந்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

கடைசியாக நிகழ்வின் நூலாசிரியர் கலாநிதி சந்திரலேகா வாமதேவா அவர்கள் ஏற்புரை ஆற்ற வந்தார். எட்டு வருடங்களாக அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வானைலையில் வெளிவந்த சுழலும் தமிழ் உலகம் என்ற இந்தக் கட்டுரைகள் நூல் உருவில் வெளிவந்திருக்கின்றது. தனக்கு இது வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டவர் தனக்காக எத்தனையோ பேர் முயற்சி எடுத்தார்கள் அவர்களே இதை நிறைவேற்றி வைத்தார்கள் என்று குறிப்பிட்டார். “இது எனக்கு ஒரு பொன்னான நாள் இப்படி ஒரு நாள் என் வாழ்நாளில் வரும் என்று நான் எதிர்பார்க்க வில்லை, நான் ஒரு நூலை வெளியிடுவேன் என்று நினைக்கவே இல்லை” என்று கூறியது உணர்ச்சி மயமானதாக இருந்தது. எழுத்துலகின் சிகரம், வெள்ளிப்பாதசரம் என்ற அற்புதப்படைப்பை தந்த இலங்கையர்கோன் அவர்களின் மகளல்லவா தரத்தில் உன்னதத்தை தரவேண்டும் என்று எண்ணுவது மிகப்பொருத்தமே. அந்தவகையில் இந்தப்படைப்பு அவரின் முயற்சிக்கு கிடைத்திருக்கும் முத்து என்பது திரு பத்மநாபஜயர் அவர்கள் இதை நூலுருவாக்க முன்வந்தமையே சான்றாகும். ஆம் பத்மநாபஜயர் இலக்கியத்தில் உன்னதத்தை படைத்துக்கொண்டிருப்பவர் என்பது இலக்கிய ஆர்வலர்கள் அனைவருமே அறிந்தது. (சென்ற வாரம் தமிழ்முரசு இதழில் பத்தமநாபஜயரின் பாராட்டு நிகழ்வு பற்றிய கட்டுரையை பகிர்ந்ததோடு அவரை பாராட்டியுமிருந்தோம். இந்த வேளையில் அதை என் பார்வைக்கு கொண்டுவந்த திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்களையும் நன்றியறிதலுடன் பார்க்கின்றேன்.) மென்மையான குரலில் நூலாசிரியர் தொடற்சியாக உரையாற்றிக்க்கொண்டு சென்றபோது மடைதிறந்த வெள்ளம்போல் வார்த்தைகள் வந்துகொண்டிருந்தது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு அழகாக அவர் உரையாற்றி நான் பார்த்ததே இல்லை. நிறைந்த ஞானம் அவருள் இருப்பதால் அவர் தழும்பாமல் இருக்கின்றார். அவரை நீண்ட காலமாக நான் அறிந்திருந்தாலும் அன்றய உரையில் இருந்து அவர் சமுதாயத்தைப்பற்றி எப்படி யெல்லாம் சிந்திக்கின்றார். இங்குள்ள பிள்ளைகளின் அடையாளங்கள் மறைந்து போவதால் அவர்கள் மனம் எப்படி எல்லாம் சிதைவடைகின்றது, அதை எப்படி மாற்றலுக்கு உட்படுத்தலாம் என்ற சிந்தனைகள் அவருள் உள்ளோடியிருப்பதை அறியக்கூடியதாக இருந்தது. வேரைத்தேடும் மனிதர்களாக வாழும் மனிதர்கள் சிலரது கதைகள் மூலம் நம் சந்ததியினரும் அப்படி வந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தை வெளிக்காட்டியது அவரது சமுதாயப்பார்வையை படம்பிடித்துக்காட்டியது.

 பேச்சாளர்கள் பாமதி சோமசேகரம், திருமதி.யசோதா பத்மநாதன், திருமதி பாலம் லக்சுமணஜயர்  கவிஞர் வைதீஸ்வரன், திரு திருநந்தகுமார் அறிவிப்பாளர்   திருமதி   ஞானா அசோகன்
நன்றி சொல்லவந்த சௌந்தரி ஒலிவாங்கியின் முன் நின்றுகொண்டிருக்க சுழலும் தமிழுலகத்தின் வானொலிக்கான Theme music  கை ரொனி செபரட்ணம் அவர்கள் சுழலவிட்டது நூலாசிரியரையும் அவர் படைப்பையும் அவுஸ்ரேலியத்தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தையும் ஒன்று சேர்த்த ஒரு பாலமாக இருந்தது. அதை தொடர்ந்து சௌந்தரியின் நன்றியுரை இடம்பெற்றது. அதில் அவர் குறிப்பிட்டது போல் இந் நிகழ்வில் ஒலிவாங்கிகள் ஒருவித இடைஞ்சலோ கூச்சல் குழப்பங்களோ செய்யாது ஒலியை தந்துகொண்டிருந்தது அதற்காக ரொணி செபரட்ணம் அவர்களுக்கு நன்றி மட்டுமல்ல பராட்டுக்களையும் தெரிவிக்க வேண்டும்.

கடைசியாக மீனாட்சி வெங்கடேசன் அவர்களின் இனிமையான குரலில் பாரதி பாடல்கள் பாடப்பட்டது நிறைவைத்தந்தது. இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று பாடல்கள் பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் பாடல்கள் தொடர்த போது சிலர் எழுந்து போகவேண்டி ஏற்பட்டதை தவிர்த்திருக்கலாம.; நூலாசிரியரின் சுழலும் தமிழ் உலகம் நூலையும் பிரபலமான அரசியல் ஆய்வார் மு.திருநாவுக்கரசு அவர்களின் “ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும்” என்ற நூலையும் மதுரா மகாதேவா வாயிலில் வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தார் நல்ல இரு நூல்களை பெறக்கூடியதாக இருந்தது. இரவு 9.15 மணிக்கு நிகழ்வு நிறைவு கொள்ள மனது நிறைந்த நினைவுகளோடு வெளியேறினோம். இனிமையான ஒரு இலக்கிய மாலையாக அமைந்ததற்கு திருமதி சந்திரலேகா வாமதேவாவிற்கும், அவருக்கு பக்கபலமாக நின்று எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொடுக்கும் திரு.வாமதேவா அவர்களுக்கும் நன்றி சொல்வது சாலப் பொருந்தும்.

சிற்றுண்டிக்காக ஒரு சிறு இடைவேளை கொடுத்திருந்தால் இலக்கிய நண்பர்களோடு அளவளாவி மகிழ்திருக்கலாம் அதையும் இருக்கையில் வைத்தே கொடுத்து எம்மை இருத்தியிருந்தது சிறு கஸ்டமாக இருந்தாலும் நேரத்தை சுருக்குவதற்கான முன்னேற்பாடு என்பதை கருத்தில் கொண்டு பொறுத்துக்கொள்ளவேண்டியிருந்தது.

சுழலும் தமிழுலக இலக்கிய மாலை நெஞ்சில் சுழன்று கொண்டிருக்கிறது.

15 comments:

Anonymous said...

$25 is tooooo much for this book.

kirukkan said...

$25 is tooooo much for this book.


அதுதானே கவிஞர் சொல்லிப்போட்டார் இலக்கிய ரசனை உள்ளோர் கூட்டம் என்று .ஆனபடியால் எல்லாம் விலை கூடவாகத்தான் இருக்கும்.விசயம் கூட விலையும் கூடும் .

நான் இப்படியான புத்தக வெளியீட்டுகளுக்கு போனால் எப்ப சிற்றூண்டி கிடைக்கும் என்று பார்த்துக்கொண்டு இருக்கிறனான்.அதுக்கும் ஆப்பு வைச்சிடுவார் போல கிடக்குது கவிஞர்.

Anonymous said...

விசயம் கூட...??? Ha... Ha... Ha...

Anonymous said...

Have you ever seen a book release like this in sydney. Very proffessional and punctual

kirukkan said...

சிட்னியில் என்று கேட்டு உங்கள் புகழை நீங்களே குறைந்துகொள்கின்றீர்கள்.

அவுஸ்ரெலியாவில் சீ சீ உலகத்திலயே தமிழ் புத்தகம் Very proffessional and punctual
ஆக வெளியிடப்பட்டது இங்குதான்

தமிழ் கற்றல் கற்பித்தல் said...

வணக்கம் பாஸ்கரன்
நல்ல ஒரு பார்வை
வாசித்து மகிழ்ந்தேன்.
திருநந்தகுமார்

Anonymous said...

>>சுழலும் தமிழ் உலகம் நூல்வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை ஹோம்புஸ் உயர் பாடசாலையில் இடம் பெற்றது. 5.30 மணிக்கு ஆரம்பமாகும்; என அழைப்பிதழில் போடப்பட்டிருந்தபோதும் 6.10 இற்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. <<

punctual...?

யசோதா.பத்மநாதன் said...

மிகவும் நேர்மையோடும் அக சுத்தியோடும் உங்கள் விமர்சனப் பார்வையைத் தந்திருக்கிறீர்கள் பாஸ்கரன்.

அதற்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

நீங்கள் குறிப்பிட்டது போல் வந்திருந்த சபை இது வரை காணக் கிடைத்திருக்காத அருமையான சபை.

கனமான சபை.இலக்கியம் சார்ந்த சான்றோர் சபையாக அது விளங்கிற்று.அதன் அமைதியும் ஒழுங்கும் ஒரு முன்மாதிரியாகவும் இருந்தது.

அது மிக மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தந்தது.

Giri said...

கவிஞரா?. ஆர் வைத்தது

kirukkan said...

May 6, 2010 10:51 AM
Giri said...
கவிஞரா?. ஆர் வைத்தது


நாலு சொல்லை அழகாக எழுதினாலும் கவிஞன் ,கிறுக்கினாலும் கவிஞன்,

கவிஞர் கிறுக்கன்

sona said...

கனமான சபை.இலக்கியம் சார்ந்த சான்றோர் சபையாக அது விளங்கிற்று.அதன் அமைதியும் ஒழுங்கும் ஒரு முன்மாதிரியாகவும் இருந்தது.


கம்பன்புகழ் நந்தகுமார் ஜயா,அம்மா லக்சமண்ஜயர், கவிஞர் வைத்தீஸ்வரன், வானொலிமாமா மகேசன் ஜயா போன்றோர் இல்லாமல் இதுவரை எந்த இலக்கிய சபாவும் நான் அறிந்தவகையில் சிட்னியில் நடந்ததாக தெரியவில்லை.சபாவுக்கு வந்தவர்களும் அதிகம் எல்லா சபாவிலும் காணக்கூடியவர்கள் தான்.அப்படியிருக்க இந்த சபாவை மட்டும் புகழ்வதன் காரணம்?

Ravi said...

சரி விடுங்ககிரிசார் ஆரும் சொன்னத திருப்பிச் சொல்லிப்போட்டு அரசியல் ஆய்வாளர்கள் எண்டுஉலகம் முழுக்க சொல்லிக்கொண்டு திரியுற இந்த காலத்துல இந்தாள் ஒவ்வொரு கிழமையும் சொந்தமா கவிiதையள் எழுதுதெல்லோ சொன்னா என்ன பிழயா. கவித எழுதுறவன் கவிஞன் கத எழுதுறவன் கதாசிரியன் கிறுக்கறவன்தான் கிறுக்கன் தத்துவம் எப்பிடீங்க?

Karuppy said...

Hello Giri

To understand kavithai you need some knowledge which you dont have. Listen ATBC every Thursday at 8pm, you may get some ideas of what is a kavithai and who can be a kavignan.

Anonymous said...

Hello baskaran
crawl before you walk, walk before you run. let the youngsters and new people lead and coordinate the programmes such as this event. The elders that you have mentioned, have done and coordinated so many events and programms back home and in australia. Welcome and encourage new faces.
The noise from the paper bags did not disturb the crowd as you mentioned.

Anonymous said...

Mailvaganam Balasubramaniam from Canberra 7 May 2010

I have seen and listened to IllankaiyarKoon Sivagnanasundaram's talks, in our village in Erlalai West and "London Kandiah", "Seerappar Kudumbam", the then famous Radio Ceylon serial dramas in mid 1960.
When I sit in the Homebush school auditorium, on 1 May 2010, I felt the same vibrations of Tamil and cultural articulations by this young Dr Chandralekaha Vamadeva as her father IllankairKoon did in our early days in our village.
Because of Illankaiyarkoon and other Tamil pundits, scholars and recently passed away Sanskrit and Tamil scholar Kandiah's tireless service to the Tamil, liturature, culture and relegion, the community in our village were elevated to the status of Tamil, Religious, and culture loving people in the Jaffna peninsula.
Dr Chandralekaha's, Solalum Tamil Ullagam Book, her ATBC programs and the atmosphere of this Book release will definitely encourage, and generate sincere Tamil and culture loving younger generations in years to come in Australia.
Well done Chandralekaha!