அமைதியும் இன்பமும்

.


                                  சித்தாந்தரத்தினம்,    கலாநிதி க. கணேசலிங்கம்

உலக வாழ்வில் இன்பத்தை நாடுவதும் துன்பத்தைத் தவிர்ப்பதும் மனித இயல்பாக உள்ளது. வாழும் காலத்தில் புகழ் செல்வம் போன்றவற்றைச் சேர்ப்பது முக்கியமானது, அதுவே இன்பம் பெறும் வழி என எண்ணிப் பலர் செயற்படுகின்றனர்.

வாழ்வை இன்பமயமாகக் கண்டு மகிழ்வது அல்லது துன்பத்தைக் கண்டு அமைதியற்றுத் துயருறுவது பலரின் பண்பாக இருக்கிறது. இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. ஆயினும் வாழுங்காலத்தில் அமைதியாகவும் இன்பமாகவும் வாழலாம். இதற்குச் சைவசமயம் வழிகாட்டுகிறது.

இன்பம் அல்லது துன்பம்

உலகம் இன்மயமானது@ இன்பம் துய்ப்பதே பிறவி எடுத்ததன் பயன், என்று உலகாயதர் நம்புகின்றனர். புலனின்பமே வாழ்வின் குறிக்கோள் என்புது அவர்களின் கருத்து. படிப்பதற்கு நல்ல கவிதை நூலும், குடிப்பதற்கு மதுவும், கூடிக்களிப்பதற்கு கன்னிப்பெண்ணும் இருந்தால், அதுவே பரமானந்தம் என்று பாரசீகக் கவிஞன் ஓமர் கயாம் பாடுகிறான். உலகாயதரின் இயல்பைக் குறிப்பன இக்கவிஞனின் பாடல்கள்.

உலகம் துன்பமயமானது. உலகில் பிறந்தவர் பெறுவது பெருந்துன்பம். பிறவாதவர் பேரின்பத்தில் திளைப்பார்கள். பிறப்பே துன்பம்தான். அதன்; காரணம் பற்று. அதிலிருந்து விடுதலை பெறுவது இன்பம். இதற்குக் கரரணமாக இருப்பது பிறவாமை. இவை பௌத்த மதக் கருத்துக்கள். பௌத்த நூலான மணிமேகலை இவற்றைப் பின்வருமாறு விளக்குகிறது.

‘பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் பெறுவது பெரும்பேர் இன்பம்
துன்பம் தோற்றம்@ பற்றே காரணம்
இன்பம் வீடே பிறப்பிலி காரணம்’.

உலகியலில் காணும் துன்பியல் நிகழ்வுகளால் மனம் நொந்து, குடும்பத்தைப் பிரிந்து, துறவறம் மேற்கொண்டவர் கௌதம புத்தர். அவர் பெற்ற ஞானம் துக்க நிவிர்த்தி தொடர்பானது.

அறியாமையின் விழைவு

சிந்திக்கத் தெரிந்தவன் மனிதன். மனத்தெழு சிந்தனையின் வழியிலே அவன் பேச்சும் செயலும் அமைகின்றன. எண்ணமே வாழ்வாக அமைகிறது. இன்பமோ துன்பமோ எதுவானாலும் அதனை அமைதியாக ஏற்கும் மனநிலை வேண்டும். அப்பொழுதுதான் வாழ்வு அமைதியாகவும் இன்பமாகவும் அமையும்.

மனத்தெழும் உணர்வுகள் இன்ப துன்ப அனுபவங்களாக வருகின்றன. இன்பத்தில் மூழ்கி மனவெழுச்சி கொள்வதும் துன்பத்தில் சோர்ந்து மனமுடைதலும் அறியாமையின் விளைவாக வருபவை. வாழ்க்கையில் நல்லதும் நடக்கும்., தீயதும் நடக்கும். நல்லது நடக்கும் போது மகிழ்ந்து வரவேற்பவர் தீயது நடக்கும் போது அல்லற்படுவது ஏன் என்று திருவள்ளுவர் கேட்கிறார்.

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்’.

நல்லறிவு அல்லது மெஞ்ஞானம் கைவரப் பெற்றவனுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பார்க்கும் மனப்பக்குவம் உண்டாகும். நல்லறிவு பெறுவதற்கு அறிவே வடிவான பரம்பொருளை நாடுதலே ஒரே வழி. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் முற்றறிவினன்@ அறிவு வடிவானவன், என்று ஞானிகளும் அருளாளரும் இயம்புகின்றனர்.

‘அகர உயிர்போல் அறிவாகி எங்கும்
நிகரில் இறைநிற்கும் நிறைந்து’ – (திருவருட்பயன்)

‘அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே’.
அறிவின் தேற்றனே’.
‘அறிவே போற்றி’. – (திருவாசகம்)

அறிவு வடிவான இறைவனை வழிபட்டால் அறியாமை நீங்கும். திருவள்ளுவர் அவனை வாலறிவன் என்று போற்றி, அவனின் திருவடிகளைத் தொழாதிருப்பின் நாம் கற்றறிந்ததால் என்ன பயன் என்று கேட்கிறார்.

‘கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்’.



சச்சிதானந்தம்

எமது செயல் ஒவ்வொன்றுக்கும் அதற்கேற்ற பலனுண்டு. செயல்களின் பலன்களாக வருபவை நாம் nபுறும் இன்ப துன்ப அனுபவங்கள். இதனை விளக்குவது சமயங்கள் கூறும் வினைக் கொள்கை. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்ற சங்கத் தமிழ்த் தொடர் இதனை விளக்குகிறது.

இறைவன் எம்மைப்போல் வினை செய்து அதன் பலன்களால் தாக்குறுபவனல்லன். அவன் வினைத்தொடர்பற்ற அறிவாகிய பரம்பொருள். ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்’ அவன் என்று பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியம் விளக்குகிறது. வினைத்தொடர்பற்ற இறைவன் என்றுமுள்ள மாற்றமற்ற நிலையான ஒருவன்@ அறிவு வடிவானவன்@ பேரின்பப் பொருளானவன். அதனால் அவனைச் ‘சச்சிதானந்தம்’ (சத்+சித்+ஆனந்தம்) என்று உபநிடதங்கள் அழைக்கின்றன. (சத் - மாற்றமற்ற நிலையான பொருள்;@ சித் - அறிவான பொருள்@ ஆனந்தம் - பேரின்பப் பொருள்). இத்தகைய பரம்பொருளைச் சிவம் எனச் சைவம் போற்றுகிறது.

எதனைச் சார்ந்து வாழ்கிறோமோ அதுபோல் எமது வாழ்வும் அமைகிறது. உயிரின் இயல்பு சார்ந்ததன் வண்ணமாக இருப்பது என்று சைவசித்தாந்நம் கூறுகிறது. இன்ப துன்பம் தோய்ந்த உலகியலில் உழன்று, விடுதலை பெறும் உணர்வற்ற மூடமனிதரைச் சேர்ந்து கெட்டழிந்த தன் வாழ்வை மாற்றி உய்வித்த இறையருளை எண்ணி மாணிக்கவாசகர் உருகுகிறார். ‘முத்திநெறி அறியாத மூடரொடு முயல்வேனை…’ என்ற திருவாசகப் பாடல் இது தொடர்பானது.

உலகைச் சார்ந்து வாழ்வதால் நாம் அடையும் இன்னலும் இடரும் நோய்போல் எம்மைப் பிணிக்கின்றன. நாம் சார வேண்டிய பொருள் சச்சிதானந்தமான இறைவனே. இதனை உணர்ந்து, உலகைச் சாரும் நிலையை விட்டு, .இறையைச் சார்ந்து நின்றால் எம்மைப் பிணித்த நோய் விலகிவிடும். இதனை உணர்த்தும் பின்வரும் திருக்குறட்பாடல் சிந்தனைக்குரியது.

‘சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்’.

அகத்தின் அழகும் இன்பமும்

குழந்தைப் பருவத்தில் காணும் அழகும் இனிமையும் மாறி இளமைப் பருவம் வருகிறது. அதுவும் மாறி முதுமைப் பருவம் வருகிறது. வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் அழகும் இனிமையும், இன்பமும் துன்பமும், நல்லதும் கெட்டதும் மாறிமாறி வருகின்றன. மனித வளர்ச்சியில் இத்தகைய மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. மாற்றமில்லையேல் வளர்ச்;சியில்லை.

உடலுரனும் உள்ளத்துறுதியும் கொண்ட இளமைக்காலம் அழகும் இன்பமும் மிக்குத் தோன்றும். முதுமை என்றவுடன் துன்பம் மிக்கதென்று பலர் எண்ணுவதுண்டு. இது தவறான எண்ணமாகும். இளமைப் பருவமும் அது தரும் இன்பமும் என்றும் நிலையானதல்ல. ‘இளமை இனிது, முதுமை நன்று’, என்று மகாகவி புhரதியார் ஒருமுறை உரைத்தார். இது நாம் வாழும் வாழ்க்கை முறையால் அமையும்.

எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டாலும் வாழ்வை அமைதியாக, இன்பமாகக் கழிக்க முடியும். அதற்கேற்ற மனநிலையை நாமே உருவாக்க வேண்டும். நல்ல சிந்தனைகளை வளர்க்கவேண்டும். உள்ளத்தின் அழகே உண்மையான அழகு. அதுவே அமைதிக்கும் இன்பத்திற்கும் அடித்தளம் அமைக்கும். நல்ல உள்ளம் கொண்டவரின் ஆழுமையும் அழகும் முதுமையிலும் நீடிக்கும்.

அகத்தின் அழகை வளர்த்து அமைதியும் இன்பமும் பெறும் வழிகள் பலவுண்டு. நல்ல கவிதை, இலக்கியம், ஓவியம் போன்ற கலைகளில் ஆர்வம் கொண்டு அனுவிப்பது ஒரு வழி. இயற்கைக் காட்சியில் இன்பங் காண்பதும், கற்பனை வளத்தைப் பெருக்குவதும் இன்னொரு வழி. இவற்றை உணர்த்துவதாக ஞானசம்பந்தப்பெருமானின் தேவாரப் பாடல்களில் இயற்கை அழகு பலவாறு வர்ணிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு ஒரு பாடல் கீழே தரப்பட்டுள்ளது.


‘தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டி
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை அணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே’.

மரங்கள் அடர்ந்த சோலையை உடையது திருவண்ணாமலை. உயர்ந்து வளர்ந்த மாமரத்து உச்சியிலுள்ள தீஞ்சுவைக் கனியொன்றைப் பறிக்க ஆண்குரங்கொன்று முயல்கிறது. மாங்கனிபை; பிடித்து இழுக்க, மாங்கொம்பு கீழ்நோக்கி வளைந்து வருகிறது. இறுதியில் மாங்கனியின் காம்பு அறுந்து பழம் குரங்கின் கைக்கு வருகிறது. காம்பு அறுந்ததனால் கீழ்நோக்கி வளைந்த கொம்பு விசையுடன் மேலெழுந்து தாழ்ந்திருந்த மழைமுகிலை அடிக்கிறது. மழைத்துளிகள் வீழ்கின்றன. மழை வந்துவிட்டதென அஞ்சி மான்பிணைகள் திருவண்ணாமலையில் இருக்கும் சோலைக்குள் ஓடி ஒதுங்குகின்றன. மழை புகாத அடர்ந்த சோலை அது. இத்தகைய சோலையையுடைய திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணலின் பூங்கழலை இடைவிடாது எண்ணுபவர் வினைப்பலனால் இடருறுவதில்லை. மேற்கண்ட பாடலின் பொருள் இது.
இப்பாடலில் காணும் கவிதை அழகும் கற்பனை வளமும் இயற்கை எழிலும் படிப்பவர் மனத்தைக் கவர்ந்து அமைதி தோய்ந்த இன்பத்தை ஊட்டுவன. உலகியலில் அமைதியும் இன்பமும் காணும் உள்ளத்தினால் இறையருளையும் கண்டு துன்பமின்றி வாழலாம் என்று சம்பந்தப் பெருமான் உணர்த்துகின்றூர்.

இறை சார்ந்த இன்பம்

புகழும் பணமும் தரும் இன்பம் நிரந்தரமல்ல. பலவேளைகளில் அவை மன அமைதியைக் கெடுத்து, தவறான வழியில் செல்லவும் தூண்டுகின்றன. ஆன்மீக வளர்ச்சிக்கும் இவை தடையாக இருப்பதுண்டு. இதனாலேயே அருளாளர்கள் பொன் பொருள் புகழில் நாட்டமில்லாமல் இருந்தனர். மாணிக்கவாசகர், ;வேண்டேன் புகழ், வேண்டேன் பொருள்’, என்று பாடுகிறார்.

உலகியற் சார்பை நீங்கி, ஆனந்தப் பொருளான இறைவனைச் சார்தலொன்றே அந்தமில்; இன்பமும் அமைதியும் அளிக்கும். அருளாளரின் வாழ்வும் வாக்கும் இதனை உணர்த்துகின்றன. பிறைசூடிய பெருமானின் திருவடிகளை கும்பிட்டதனால் மண்ணில் வந்த பிறவி புனிதமும் இன்பமும் ஆனது, என்று சுந்தரர் பெருமான் ஆனந்தக் கண்ணீர் பெருக்குவதாகச் கே;கிழார் பாடுகிறார்.

வசதியாக வாழ்ந்த அப்பரடிகள் எது நடந்தாலும் அது அவன் செயல் என்று அமைதியாக ஏற்று மகிழ்பவர். இறைவனுக்கு அடிமை பூண்டு தொண்டு n;சய்வதில் அமைதியும் இன்பமும் கண்டவர் அவர். அதனால் அவர். வாழ்வு என்றும் இன்பமாக இருந்தது. ‘இன்பமே என்னாளும் துன்பம் இல்லை’, என்று அவர் பாடுகிறார்.

வாழ்வில் காணும் துன்பியல் நிகழ்வுகளில் தோயாமல் இன்பமாக வாழ முடியும் என்று சைவ அருளாளர் அனைவரும் உணர்த்துகின்றனர். சீர்காழிப்பதியில் உமையம்மையுடன் வீற்றிருக்கும் சிவபெருமான் ஞானசம்பந்தரின் சிந்தை நிறைந்த தெய்வம். அம்மையப்பராக இருக்கும் அவனை நம்பி வழிபடுபவர் மண்ணில் நலமாக வாழலாம், அவர்களுக்கு நல்ல கதி உண்டு, எண்ணியது கிடைக்கும். இவ்வாறு கூறும் சம்பந்தப்பெருமான் அமைதியும் இன்பமும் இணைந்த நல்வாழ்வுக்கு உறுதியவிக்கிறார்.

மண்ணில்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில்நல் லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே’.

No comments: