காசாவில் இன்றுமுதல் தற்காலிக போர் நிறுத்தம்; இஸ்ரேல் இணக்கம்
காசா அமைதி திட்டம் : இஸ்ரேல் - ஹமாஸ் இணக்கம் ; ஐ.நா பொதுச்செயலாளர் வரவேற்பு
முடங்கியது அமெரிக்க அரச நிர்வாகம் : இலட்சக்கணக்கானோர் பாதிப்பு!
காசாவில் இன்றுமுதல் தற்காலிக போர் நிறுத்தம்; இஸ்ரேல் இணக்கம்
Published By: Digital Desk 3
10 Oct, 2025 | 10:24 AM
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 48 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தியது. 2 ஆண்டுகள் நடைபெற்ற இந்த போரில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 67 ஆயிரத்து 194 பேர் உயிரிழந்துள்லனர்.
இதனிடையே, பணய கைதிகள் விடுதலை, இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சி மேற்கொண்டார். அதன் பயனாக போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல், ஹமாஸ் சம்மதம் தெரிவித்தன.
ஒப்பந்தப்படி காசா முனை மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும். இதையடுத்து, 72 மணிநேரத்தில் இஸ்ரேலிய பணய கைதிகள் அனைவரையும் ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டும். அதன்படி, உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய பணய கைதிகள், கொல்லப்பட்ட 28 இஸ்ரேலிய பணய கைதிகளின் சடலங்களை ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு ஈடாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 2 ஆயிரத்து 250 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவர்.
இந்நிலையில், காசா முனையில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் அமைச்சரவை இன்று இணக்கம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, காசாவில் போர் நிறுத்தம் இன்றுமுதல் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது. தற்போதைய போர் நிறுத்தம் தற்காலிகமானதாகும். இரு தரப்பும் ஒப்பந்தப்படி அனைத்து விதிகளையும் பின்பற்றும் பட்சத்தில் தற்காலிக போர் நிறுத்தம் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும். ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஏதேனும் ஒரு தரப்பு மீறினாலும் மீண்டும் போர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
காசா அமைதி திட்டம் : இஸ்ரேல் - ஹமாஸ் இணக்கம் ; ஐ.நா பொதுச்செயலாளர் வரவேற்பு
Published By: Digital Desk 3
09 Oct, 2025 | 09:53 AM
காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளமையை ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார்.
காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
எகிப்தில் நடந்த அமைதி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையின் மூன்றாவது நாளில், ஹமாஸ் குழுவினர் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும், அதே நேரத்தில் இஸ்ரேல் தனது படைகளை திரும்பப் பெறும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலாளர் எக்ஸ் தளத்தில்,
"அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தின் அடிப்படையில், காசாவில் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன்,"
“இந்த மிகவும் தேவையான முன்னேற்றத்திற்கு மத்தியஸ்தம் செய்த அமெரிக்கா, கட்டார், எகிப்து மற்றும் துருக்கியின் இராஜதந்திர முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.
“சம்பந்தப்பட்ட அனைவரும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
முடங்கியது அமெரிக்க அரச நிர்வாகம் : இலட்சக்கணக்கானோர் பாதிப்பு!
01 Oct, 2025 | 02:58 PM
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், டிரம்ப் தலைமையிலான அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஒரு புதிய சட்டமூலத்தை கொண்டு வந்தது. இந்த சட்டமூலத்தில் பழைய திட்டங்களை தவிர்த்து, புதிய திட்டங்களுக்கு நிதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்திற்கு அமெரிக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலத்தை நிறைவேறுவதற்கு டிரம்ப் தலைமையிலான ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஜனநாயக கட்சியை சேர்ந்த 8 பேர் வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், இதற்கு ஜனநாயக கட்சி தலைமை சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இதில், டிரம்பின் சுகாதார திட்டங்கள் தொடர்பான மருத்துவ காப்பீட்டு சலுகைகளை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். ஆனால், இதனை டிரம்ப் ஏற்க மறுத்ததன் காரணமாக, அவர் கொண்டு வந்த புதிய சட்டமூலம் நிறைவேறாமல் தடைபட்டுள்ளது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 55 சதவீத வாக்குகளும், எதிராக 45 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த சட்டமூலம் நிறைவேற 60 சதவீத வாக்குகள் தேவை.எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ள நிலையில், அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.
இதனால், அமெரிக்க நேரப்படி புதன்கிழமை (ஒக்டேபர் 1) நள்ளிரவு 12.01 மணி முதல் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும். விமானப் போக்குவரத்து முதல் சிறு வணிக கடன் அலுவலகங்கள் வரை அனைத்தும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்காததால் அரசு செலவீனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க பாராளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான சட்டமூலத்திற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதன்காரணமாக, அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களைத் தவிர, ஏனைய அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
புதிய சட்டமூலம் நிறைவேறாமல் தடைபட்டுள்ளதால் அரசு உதவி பெறும் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில், அமெரிக்க இராணுவம் மற்றும் தபால் சேவை உள்ளிட்ட முக்கிய சேவைகள் மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா அரசு முடங்கி இருப்பதன் காரணமாக சுமார் 7.50 இலட்சம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி தடைபடும் என்றும், இதனால் அமெரிக்க அரசுக்கு ஒரு நாளைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நிதி வழங்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறாத நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க அரசு நிர்வாகம் தற்போது முடங்கியுள்ளது. இதனால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது தடை படுவதுடன், தாமதமாகும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவின் அரசு சேவைகள் முடங்கியுள்ளன. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment