தமிழில் பக்திப் படங்களையும், புராணப் படங்களையும் இயக்கி
புகழ் பெற்றவர் ஏ. பி. நாகராஜன். சிவாஜியின் நடிப்பில் இவர் அடுத்தடுத்து தயாரித்து இடக்கிய பக்திப் படங்கள் காலத்தால் மறக்க முடியாதவை ஆகும். ஆனாலும் சிவாஜிக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட மனத்தாங்களாலும் , பின்னர் ராஜா ராஜா சோழன் படத்தின் தோல்வியினாலும் நாகராஜன் தன் கவனத்தை சமூகப் படங்களின் பக்கமும் திருப்பினார். அப்படி 1975ம் வருடம் அவர் உருவாக்கிய படம்தான் மேல் நாட்டு மருமகள் .
படத்தின் பேரே படத்தின் கதையை சொல்வது போல் அமைந்தது.
கல்வி கற்க பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் மோகன் திரும்பி வரும் போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து அழைத்து வந்து குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை அளிக்கிறான். தந்தை தாயின் எதிர்ப்பின் காரணமாக இருவரும் தனிக் குடித்தனம் போகிறார்கள். இதனிடையே மோகனுக்கு என்று தீர்மானிக்கப் பட்ட சுதா தன் காதலை மோகனின் தம்பி ராஜா பக்கம் திருப்ப , பெற்றோரின் சம்மதம் இன்றி அவர்களுக்கு திருமணமும் நடக்கிறது. இரண்டு மகன்களும் இப்படி செய்து விட்டார்களேயே என்று பெற்றோர்கள் குமுறுகிறார்கள். ஆனால் மேல்நாட்டு மருமகளாக வந்து மீனா என்று பேர் சூட்டிக் கொண்டவள் தமிழ் காலசாரப்படி வாழ முனைகிறாள் .

சீனியர் நடிகர்களையே நம்பி படம் எடுத்துக் கொண்டிருந்த ஏ .பி .என் . இந்த படத்தில் இரண்டு இளம் நடிகர்களை இயக்கியிருந்தார். சிவகுமார் , கமல்ஹாசன் என்று இரண்டு ஹீரோக்கள். சிவகுமார் அடக்கமாகவும், கமல் அட்டகாசமாக நடித்து அசத்தி இருந்தார்கள். குறிப்பாக கமலின் ஆட்டம், பாட்டம் , அலட்சியம் எல்லாம் ஜோர்.
கூடவே ஜூனியர் பாலையாவும் தன் பங்குக்கு சிரிப்புக்கு உதவுகிறார். பூர்ணம் விஸ்வநாதன், காந்திமதி, கே . டி . சந்தானம், அச்சச்சோ சித்ரா எஸ். வி. ராமதாஸ் ,சிவதணு , வி. கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர். இவர்களுடன் சோ, மனோரமா இருவரும் ஒரு காட்சியில் தேவை இன்றி வருகிறார்கள்.
படத்தில் இரண்டு ஹீரோயின்கள். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த
லாரன்ஸ் பவிசாக காட்சி தருகிறார். ஆர்ப்பாட்டமின்றி நடிப்பை வழங்குகிறார். அவருக்கு நேர் எதிராக ஜெயசுதா கவர்ச்சியை தெளிக்கிறார். ஏ .பி .என் . படத்திலும் கவர்ச்சியா என்று வாயை பிளக்கக் கூடாது. கால மாற்றத்துக்கு அவர் மட்டும் விதி விலக்கா என்ன!

இது போதாதென்று படத்தில் ஒரு காட்சியில் கமலுடம் ஆடிப் பாடுகிறார் வாணி கணபதி. மூன்றாண்டுகள் கழித்து இவரே கமலின் முதல் மனைவியாகி வாணி கமல்ஹாசன் ஆனார்.
படத்துக்கு நடனம் அமைத்தவர்கள் வேம்பட்டி சத்தியம், தங்கப்பன்
ஆகியோர். ஒளிப்பதிவை கே. எஸ். பிரசாத் கையாண்டார். படத்துக்கு இசையமைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். அவரின் இசையில் முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்குகிறேன் பாடல் இனித்தது. ஒரு காலத்தில் தனது பக்திப் படங்களில் கே பி சுந்தராம்பாளை நடித்து பாட வைத்த ஏ. பி .என் . இந்தப் படத்தில் பிரபல பாப் பாடகி உஷா உதுப்பை ஆங்கிலத்தில் பாப் பாடலைப் பாடி நடிக்க வைத்திருந்தார் . ஆஹா!

புதிய கதைக் கருவை அமைத்து படத்தை உருவாக்கியிருந்தார் ஏ .பி .என். படத்தில் மேல்நாட்டு பெண்ணின் பெருமையை சிறப்பிக்க வேண்டும் என்பதற்காக சில காட்சிகள் மிகைப்படுத்தப் பட்டிருந்தன . அதே போல் நாயகன் நாடு இரவில் பக்கத்தில் படுத்திருந்த மனைவியை காணவில்லை என்றவுடன் அவள் நடத்தை மீது உடனே சந்தேகப்படுவது அபத்தம். ஆனாலும் ஏ.பி.என். அமைத்த கதைக்கு அவர் எழுதிய வசனங்கள் பலம் சேர்த்தன. அவரின் அனுபவம் படத்தை திறம்பட இயக்க துணை நின்றது. ரசிகர்களும் மேல் நாட்டு மருமகளை ஏற்றுக் கொண்டார்கள்!
No comments:
Post a Comment