நின்றேனும் கொல்லும் தீங்கு (05) - (திகில் தொடர்) - சங்கர சுப்பிரமணியன்.


- சங்கர சுப்பிரமணியன்.



"தம்பி சிவாஇங்க என் மக சிவகாமி மயங்கி விழுந்து பேச்சுமூச்சில்லாமல் இருக்காஎனக்கு கையும் ஓடல காலும் ஓடலகொஞ்சம் சீக்கிரம் வாங்க தம்பி." 

மதியின் மாமியார்அழுதபடியே சொன்னார்கள்.


தொலைபேசியை வைத்து விட்டு விபரத்தை 

மனைவியிடம்சொல்லி அவளையும் அழைத்துக் 

கொண்டு மதி வீட்டுக்குச்சென்றேன். சிவகாமியை 

அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிசென்று வேண்டிய 

சிகிச்சையைக் கொடுத்தோம்.

 

சிவகாமிக்கு கவலைப் படும்படி ஒன்றுமில்லை 

என்றாலும்குறைந்த இரத்த அழுத்தமும் ஓய்வு

இல்லாததாலும் தான் தலைசுற்றும் மயக்கத்துக்கும்

கரணம் என்று டாக்டர் சொன்னபின்தான் சிவகாமியின் தாய் சமாதானம் டைந்தார்கள்இருந்தாலும் சிவகாமிஇன்னும் கண்மூடியே இருந்ததால் என்மனைவி 

கற்பகத்தை அவர்களுக்கு துணையாக இருக்கும்படிச்சொல்லிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போதுதான்அந்த பயங்கர சம்பம் நடந்தது.

 

சுழன்று கொண்டிருந்த நினைவிலிருந்து மீண்டு வந்த 

என்காதில் காலிங் பெல் மணியின் சத்தம் கேட்கவே 

எழுந்து முன்கதவின் பக்கம் சென்று கதவைத் திறக்க அங்கே என் மனைவி நின்று கொண்டிருதாள்

 

"கற்பகம் உன்னை அவங்களுக்கு துணையாகத்தானே விட்டுவந்தேன்அதற்குள் நீ எப்படி இங்கு வந்தாய்?

யார் உன்னை அழைத்து வந்தார்கள்?

 

"முதல்ல வீட்டுக்குள்ள போங்கல்லத்தையும் 

வாசலிலேகேட்கணுமா?" என்றாள்.

 

"சரிஉள்ளே வாஎன்று அவளை வீட்டினுள் விட்டு 

கதவைத்தாளிட்ட பின்,

 

படுக்கை அறை நோக்கி நடந்தேன்ன்னைப் பின் தொடர்ந்துவந்தவள் நேரே சென்று கட்டிலில் 

படுத்தாள். என்னை என்றும்இல்லாதது போல் புதிதாகப்பார்த்தாள்ஏனெனில் நாங்கள் கணவன் மனைவி 

மாதிரி மனதாலும் உடலாலும் மிகவும்நெருங்கி 

வாழ்ந்ததில்லைகாரணம் நான் தான்அவள் மீது 

ஒன்றும் தவறில்லைபெற்றோரின் விருப்பத்துக்காக மட்டும்தான் கற்பகத்தை திருமணம் செய்து 

கொண்டேன்


நான் செய்ததுரோகம் திருமணத்தில் எனக்கு எந்தவித 

ஈடுபாட்டையும் ஏற்படுத்தவில்லை. மிகவும் ஏழ்மையான 

குடும்பத்தில் பிறந்துவளர்ந்த வளும் எங்கள்

குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டுவந்ததையே மிகவும்

பெரிதாக எண்ணினாள்எப்படியும் காலம்மாற்றிவிடும் நானும் மாறுவேன் என்ற நம்பிக்கையில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அன்பாகவே இருந்தாள்.

 

ஆனால் இன்று அவளது பார்வை என்றும் போல் 

இல்லாமல் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அவள் 

பார்த்த விதம்என்னைச் சுண்டி இழுக்கவே வேறு 

எதுவும் பேசாமல் நானும்கட்டிலில் சாய்ந்தேன்

எப்போதும் இல்லாத அளவுக்கு அந்தஇரவு எனக்கு 

மிகவும் புதிய அனுபவமாக இருந்ததுஅந்த 

இனிமையான தருணத்தில் அப்படியே வளை 

ஆசையாகப் பார்த்தபோது என் மூச்சே நின்று போவது 

போலிருந்தது.என்னருகே ஊர்மிளா டுத்திருந்தாள்.

 

"ஊர்மிளாநீ எப்படி இங்கு வந்தாய்நீ தான் அரளி

விதையை அரைத்துக் குடித்து இறந்து விட்டாயே?நீ உயிருடன்தான் இருக்கிறாயா?" என்று கேட்டுக் 

கோண்டிருந்தபோதே அவள்அந்த யூகலிப்டஸ் 

மரத்தினடியில் பார்த்ததைப் போலவெள்ளை நிற 

புடவையுடனும் விரித்த தலைமுடியுடனும் கண்களில் 

பிரகாசமான ஒளியுடனும் மாறி விகாரமாய்ச் சிரித்தாள்.

 

அப்போது அதிர்ச்சியில் பெரிதாகத் திறந்த எனது வாய்,

 

"ஊர்மிளா......ஊர்மிள்....... ............" என்றபடியே நின்றதுகண்கள் மிரண்டு அந்த மிரட்சியுடனேயே 

நின்றனமூச்சுதிணற மூக்கிலிருந்து தோ வடிய எனது

உடலிருந்து உயிர்

No comments: