.
கதைகள் கூறுவது காலம் காலமாக தொடர்ந்து வருவரும் மரபு. கதைகள் மூலமாக சிறந்த அறிவு, நற் பண்புகள் இளம் சிறார் முதல் பெரியவர்களுக்கும் எடுத்துக் கூறப்பட்டு வருகிறது. பஞ்சதந்திர கதைகள், ஈசாப் கதைகள் இந்த மரபிலே தோன்றியவையே. இங்கு நான் கூறுவது
வெறும் புனைவு கதையல்ல, இது சில சம்பவங்கள் ஆனாலும்
சிந்தனையை தூண்டுவது மட்டுமல்ல,தமிழரான , நமது பண்புகள் உயர்ந்தது என்ற எண்ணம் எம்
மனதில் உண்டு, ஆனால் எம்மை வியப்பில் ஆழ்த்தும் சில கலாசார பண்புகளும் உண்டு. நான்
அறிந்தவை சில, அவற்றை பகிர்கிறேன்.
இது சிட்னியில் நடந்தவை. எனது சினேகித்களில் ஒருவர்
தனது குடும்பத்துடனும், தகபன் தாயாருடனும் வாழ்ந்து வருகிறார். தகபனார் நல்ல உடற்கட்டும்
உயரமும் கொண்டவர். இவர் வெய்யில் காலத்தில் நல்ல வெள்ளை வேட்டி சம்பிரதாய நாஷனல் மேல்சட்டை
அணிந்து ‘வென்வத்தில்’ தெருகளிலே உலாவி வருவார். அங்கு பல தமிழர்கள் வாழ்வதால் பலரையும்
கண்டு சுகம் விசாரிப்பார். எம்மவர் சொந்த ஊரையும் உறவுகளையும் இழந்து வந்தவர்கள், இவர்களுக்கெல்லாம்
இவரை பார்பதால் தம் உறவுகளை உற்றாரை பெற்றவரை பார்பதுபோல உணர்வு வருவது இயற்கையே.
இவருக்கு 16 வயதிலே ஒரு பேத்தி மிக கலகலப்பாக பளகும்
சுபாவம் கொண்டவள். இவள் கூறினாள் தனது பாடசாலை மூலம் பிற பண்படுகளை அறிவதற்கு வெளி
நாட்டு மாணவியர் வருவதும், அவர்கள் இங்கு வாழும் மாணவியர் வீடுகளில் தங்கி அவர்கள்
பண்பாடு, உறவு முதலியவற்றை புரிந்து கொள்ளும் திட்டம் உண்டு. அதன்படி தங்கள் குடும்பத்துடன்
தங்க ஒரு ஜப்பானிய பெண் வர இருப்பதாக கூறினாள். அவள் வந்து போனபின் அவள் எப்படி இருந்தாள்,என்ன
எல்லாம் நடந்து என ஆர்வமாக கேட்டேன்.
அவள் வருமுன் தனது குடும்பத்தில் அனைவரை பற்றியும்
அக்கறையாக விசாரித்தாளாம். வந்தவுடன் முதலில் இவள் தாத்தாவை பார்க்க வேண்டும் என தாத்தாவும்
வந்தார். அவருக்கு பரிசு கொடுத்து ஜப்பானிய
முறையில் வணக்கம் தெரிவித்தாள்.
அந்த பரிசு பொருள் தான் அவள் கொண்டு வந்தவையில் மிக
உயர்ந்த பொருளாம், வீட்டில் மூத்தவர்களுக்கே முதல் மரியாதை செலுத்த வேண்டும் என்ற பண்பாட்டை
இந்திய, சீன, ஜப்பானியர்கள்ளிடமும் மட்டுமல்ல இலங்கை வாழ் பௌத்த மதத்தினரான சிங்களவர்களிடமும்
உண்டு.
இனி ஆபிரிக்க கண்டத்திற்கு வருவோம். டன்ஸேனியா நாட்டில்
எமது நண்பர் ஒருவர் விவசாய திணை களத்தில் வேலை பார்த்தார். அவரது அலுவல்லகத்திற்கு
ஒரு ஆபிரிக்கரே தலைவர். இவரது அறையை செப்பனிட்டு பெருக்கி துடைப்பதவற்கு வயது முதிர்ந்தவர்
ஒருவர் வருவார் அப்பொளுது, தலைவர் இருக்கையில் இருந்து எழுந்து பெரியவரே காலை வணக்கம்,என
கூறி,பெரியவரே உமது பாதங்களை தொட்டு வணங்குகிறேன் என்பார், பெரியவரும் உனக்கு எனது
ஆசீர்வாதங்கள் என்பார், என்ன ஆச்சரிய படுகிறீர்களா? எம்மைவிட உயர்ந்த பண்பாடு கொண்டவர்கள்
உலகின் பல பாகங்களிலும் வாழ்கிறார்கள்.
நாம் சென்னையில் வாழ்ந்த காலத்திில், லண்டனில் வசிக்கும்
நண்பர், இந்திய பண்பாட்டை அறியும் ஆர்வம் கொண்ட தனது மகளை,ஆறு மாதங்கள் எமதுவீட்டில்
வாழ அனுப்பிவைத்தார். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தை தரிசித்து அங்கு உள்ள சிற்பங்களையும்
காட்ட அவளை மதுரைக்கு அழைத்து போக எண்ணிநேன். எமது நண்பர் ஷண்முகம் இதை அறிந்ததும்,
தனது தந்தையார் குடும்பத்துடன் அங்கு வாழ்கிற அவர்கள் வீடு கோயிலின் அருகாமையிலேயே
உண்டு, எம்மை அங்கு தங்கலாம், அவர்கள் எம்மை அன்பாக உபசரிப்பார்கள் எனவும் கூறி வற்புறித்தினார்.
நாமும் மகிழ்வாக அங்கு செல்ல சம்மதித்தோம். நாம் அதிகாலை அவர்கள் வீட்டை அடைந்தோம்,
நண்பர் தம்பி, மனைவி, தாயார் என எல்லோரும் எம்மை அன்பாக வரவேற்று சுடசுட நல்ல காப்பி
எல்லாம் தந்து பிரமாதமாக உபசரித்தார்கள். ஆனால் நாம் தங்க போகும் அறை எது என காட்டபடவில்லை.
தந்தையார் காலை நடைக்கு போனவர் வந்துவிடுவார் என கூறினார்கள், என்னுடன் வந்த சிவானி
நாம் இங்கு தங்க முடடியாது போலும்,விடுதிக்கு போவோம் என காதுள்ளே நச்சரிக்க ஆரம்பித்து
விட்டாள்.
நானோ வந்த நாங்கள் பெரியவர் வருவார் என்கிறார்கள்.
அவரை மரியாதைக்கு பார்து விட்டு போக வேண்டியது தான் என எண்ணினேன், பெரியவரும் வந்தார்.
மரியாதைக்கு சுகம் விசாரித்து மகனிடம் தம்பி இவர்கள் அறையில் பெட்டிகளை வைத்துவிடு,
அம்மா நிர்மலா இவர்களுக்கு நம்ம விருந்தாளிகள் அறையில் வேண்டிய சோப்பு துவாய் எல்லாம்
இருக்கா பார் அவங்களை கவனிஅம்மா என்றார். எம்மை பார்த்து களைத்திருப்பீர்கள் குளித்து
சாப்பிட்ட பின் கோயிலுக்கு போகலாம் என்றார். அப்போதான் நமக்கு புரிந்தது, வீட்டிற்கு
வந்தவரை சம்பிரதாயமாக வரவேற்பது பெரியவரேதான் செய்ய வேண்டும். அவரின் பின்தான் மற்றவர்கள்.
அவர்இருக்க மற்றவர் அதை செய்ய கூடாது என்ற சம்பிரதாயமே அது. இதுதான் அங்கு நடந்தது.
சிவானி மட்டுமல்ல நானும் அன்று ஒரு பண்பாட்டை, மூத்தோருக்கு கோடுக்கும் அன்புகலந்த
மரியாதையை அறிய முடிந்தது.
எமது நண்பர் தெய்வநாயகம் எதையும் ஆராய்து பேசுபவர்,
எனது மகன் பல்கலைகழக விடுமுறைக்கு வந்த போது அவரிடம் போயிருந்தோம்., அவனிடம் பேசும்போது
அவர் கூறினார், வயதில் பெரியவர்கள் இந்த உலகில் நீண்ட நாள் வாழ்ந்து அனுபவம் என்ற பாடத்தில்
பலதையும் கற்று உணர்ந்தவர்கள். அவர்கள் பெற்ற அனுபவத்தை எந்த கல்லூரியும் உனக்கு அளித்து
விடமுடியாது. அந்த அனுபவம் என்பது கல்லூரிகள் அளிக்கும் பட்டங்களிலும் உயர்ந்தது. அதற்கே
நாம் தலை வணங்குகிறோம் என்றார். அதை நாம் யாவரும் உணர்ந்து நடத்தல் அவசியம்.
“முதுவக்க மும்மதிப்பச்
செய்யான்
வடுவற்கு வைப்பான்
பயன் “
-
குறள்
மூத்தோரை மதிக்காமல்
பேசும் ஒருவன், தன் அழிவுக்கே வழிவகுப்பான்.
இன்றோ சமூகம் வெகு வேகமாக மாறிவருவதை நாம் அவதானிக்க
முடிகிறது. இதை மேற்கத்திய நாகரீகம் என கருதுகிறார்கள். எனது உறவினர் அவருக்கு 65 வயதிருக்கலாம்.
அவரது தம்பி மகன் அவரை பாரக்க லண்டனில் இருந்து இலங்கை வந்திருந்தான். பெரியப்பா உயர்
கல்வி கற்று நல்ல வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர். தனது தம்பி மகனிடம் “How is your dad” என கேட்டார்.
பையனோ “Old man is fine’ என்றான்.
பேரியவருக்கு பொறுக்க முடியவில்லை தந்தையை மதியாது Old man என்று கூறியது, அவர் சிறிது அதட்டலாகவே பையனை திரும்வும் கேட்டார், அவன் சர்வ சாதாரணமா
மீண்டும் Old man எனவே
கூறினான், பொறுக்க முடியாத அவர் பையனை ஓங்கி அறைந்துவிட்டார். அங்கு இருந்தவர்கள் நிலமையை
சமாளித்தார்கள். லண்டனில் இருந்து வந்தவன் தான் பெரியவனாக வளர்ந்து விட்டதால் தந்தையை
Dad என குறிப்பது சிறு பிள்ளை தனமான செயல் என எண்ணுபவன்.
அவன் வளர்ந்த சமுதாயத்தில் இருந்து அவன் கற்றுக்கொண்டது. தோழுக்கு மேல் வளர்ந்தவனை
நாம் தோளன் என்பதில்லையா? இங்கு நாம் கண்டது ஒரு பண்பாட்டு சிந்தனையின் மாறுபாட்டையே.
இதில் நாம் எங்கே என்பதுதான் எம்போன்றோரை துளைக்கும்
கேள்வி. புலம் பெயர்ந்து வாழும் எமது சமூகம் இழந்தவை பல இழக்கப் போபவையும் சில என எம்மை
நாமே தேற்றுவோம்.
No comments:
Post a Comment