Published By: Rajeeban
13 Dec, 2024 | 01:51 PM
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இந்த மாதம் இலங்கையின் பாதுகாப்பு படையினர் இந்திய அமைதிப்படையினருக்கு எதிரான 60 தடைவேண்டுகோள்களை சமர்ப்பித்திருந்தது.
இலங்கையின் ஆயுதமோதலின் போதும் அதன் பின்னரும் இந்திய அமைதிப்படையினரும் இலங்கை பாதுகாப்பு படையினரும் இழைத்த மனித உரிமை மீறல்களிற்காக இந்த தடைவேண்டுகோள்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சமர்ப்பித்திருந்தது.
தமி;ழ் கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் ஐடிஜேபியின் நிறைவேற்று பணிப்பாளரும் மனித உரிமை சட்டத்தரணியுமான ஜஸ்மின் சூக்கா இலங்கைமீதான தடைகள் குறித்து தனது எதிர்பார்ப்புகளை வெளியிட்டுள்ளதுடன் சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்துவதை தான் எவ்வளவு தூரம் ஆதரிக்கின்றார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்கா பிரிட்டன் கனடா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு தடைகள் குறித்த மனுக்களை சமர்ப்பித்த ஓரிரு நாட்களிற்குள் இது குறித்து கருத்து தெரிவித்த அவர் இலங்கையில் யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான தி;ட்டம் ஆவணப்படு;த்தியுள்ளது,நாட்டில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த பெருமளவு ஆவணதொகுப்பை கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான பணியின் போது மிகவும் சவாலான விடயம் என்னவென்றால் இவ்வாறான ஆவணதிரட்டை, பாதிக்கப்பட்டவர்களிற்கு பொறுப்புக்கூறலை நீதியை உறுதி செய்வதற்கு நீங்கள் எவ்வாறு பயன்படுத்தப்போகின்றீர்கள் பொறுப்புக்கூறலிற்கான மாற்றுவழிமுறைகளை என்பதே என தெரிவித்துள்ள அவர் சர்வதேச மக்னிட்ஸ்கி தடைகளின் கீழ் தடைகளை சமர்ப்பிப்பது எங்களிற்கு உரிய பணி எனவும் தெரிவித்துள்ளார்.
2009 முள்ளிவாய்க்கால் படுகொலையே பொறுப்புக்கூறலிற்கான முக்கிய காரணம் என யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
' நான் பல உலக நாடுகளின் மோதல் தொடர்பான விடயங்களை கையாண்டுள்ளேன் ஆனால் யுத்தத்தின் இறுதியில் இலங்கைபாதுகாப்பு படையினர் பொதுமக்களை எவ்வாறு இலக்குவைத்தார்கள் என்பதே பயங்கரவமான விடயம் " என யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
'ஹைட்பார்க் அளவு பிரதேசத்தில் பாதுகாப்பு வலயத்தில் 300000 பேர் மிகநெருக்கமாக வாழவேண்டிய நிலை காணப்பட்டது, அந்த வேலை பாதுகாப்பு வலயத்தில் உள்ள மருத்துவர்கள் மனிதாபிமான பணியாளர்கள் எச்சரித்த போதிலும் அவ்வளவு பேர் அங்கு இருப்பதை மறுத்த இலங்கை படையினர் அவர்களை இலக்குவைத்து குண்டுவீசினார்கள் "எனவும் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
'பொதுமக்களிற்கு மருத்துவபொருட்களின் தேவையிருந்தது,மருத்துவர்கள் தங்களால் சாத்தியமான அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்த தயாராகயிருந்தார்கள்,பட்டினி என்ற பிரச்சினையும் காணப்பட்டது,இது எனக்கு காசாவை நினைவுபடுத்துகின்றது - இலங்கை நிலைமையை பார்க்கும்போது காசாவைநினைக்க தோன்றுகின்றது" என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தொகுத்துள்ள ஆவணங்கள் மூலம் மனித உரிமை மீறல்கள் தொடர்வதை அவதானிக்க முடிகின்றது இலங்கையில் சித்திரவதை பாலியல்வன்முறை போன்ற தொடரும்மீறல்களை அனுபவித்த பலர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் அவர்களின் அறிக்கைகள் உள்ளன என யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
தங்கள் அன்புக்குரியவர்களை இராணுவத்திடம் கையளித்த தமிழ்சமூகத்தவர்கள் அவர்களை பின்னர் காணவில்லை மேலும் அவர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகின்றனர் ,தங்கள் அன்புக்குரியவர்கள் எங்கே என கேள்வி எழுப்புவதற்காக துன்புறுத்தப்படுகின்றனர் என யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
சர்வதேச மன்னிப்புச்சபையின் அறிக்கையின் படி உலகில் அதிகளவானவர்கள் காணாமலாக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது என குறிப்பிட்டுள்ள ஜஸ்மின் சூக்கா இவ்வாறான தகவல்கள் இலங்கையை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டிய கடப்பாட்டை சர்வதேசசமூகத்திற்கு செலுத்துகின்றன என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது தடைகளை விதிப்பதற்கு பிரிட்டன் தயங்குவது குறித்து கேள்வி எழுப்பியவேளை இது குறித்து தான் ஏமாற்றமடைந்துள்ளதாக யஸ்மி;ன் சூக்கா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக பிரிட்டன் ஏன் தடைகளை விதிக்க மறுக்கின்றது என்பது புரிந்துகொள்வது கடினமாக உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் தடைகளை விதிக்கவேண்ய தேவை குறித்து கருத்துக்கள் அதிகளவு வெளியாவது பிரிட்டன் அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்க தூண்டும் தனது கடமைகளை நிறைவேற்ற தூண்டும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான பொருளாதார தடைகளை முழுமையாக ஆதரிப்பீர்களா என்ற கேள்விக்கு யஸ்மின் சூக்கா இந்த கேள்விக்கு பதிலளிப்பது கடினம் இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சியில் உள்ளதால் அவர்கள் வேறு விதமாக நடந்துகொள்ளக்கூடும் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்துவதை ஆதரிப்பீர்களா என்ற கேள்விக்கு அவர் நிச்சயமாக என பதிலளித்துள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment