உலகச் செய்திகள்

 தென்கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சிறையில் உயிரை மாய்க்க முயற்சி

2024 இல் 104 ஊடகவியலாளர்கள் படுகொலை -சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்

சிரிய ஜனாதிபதி ஆசாத்தின் ஆட்சி வீழ்ந்தது – மேற்குலக நாடுகள் வரவேற்பு

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ரஸ்யாவில்

அசாத்திற்கு புகலிடம் வழங்குவது என்பது புட்டினின் தனிப்பட்ட முடிவு - கிரெம்ளின் பேச்சாளர்

இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பங்களாதேஷ்அரசிடம் இந்தியா வலியுறுத்தல் 


தென்கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சிறையில் உயிரை மாய்க்க முயற்சி

11 Dec, 2024 | 11:43 AM

தென்கொரியாவில் கடந்தவாரம் அறிவிக்கப்பட்டு பின்னர் மார்ஷல் சட்டம் நீக்கப்பட்டமையுடன் தொடர்புடைய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் யன் உயிரை மாய்க்க முயன்றார்  என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ஷல் சட்டத்திற்கு தான் பொறுப்பேற்பதாக அறிவித்திருந்த அமைச்சர்சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை உயிரை மாய்;ப்பதற்கு முயன்றார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்கொரியாவை உலுக்கிய மார்ஷல் சட்டத்தின் பின்னர் இவர் ஏனைய உயர் அதிகாரிகள் பலருடன் பதவியை இராஜினாமா செய்தார்.

பின்னர் இவரை அதிகாரிகள் கைதுசெய்தனர் தற்போது கிளர்ச்சி குற்றச்சாட்டுகளிற்காக இவர் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளார் இந்த நிலையிலேயே அவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.   நன்றி வீரகேசரி 




2024 இல் 104 ஊடகவியலாளர்கள் படுகொலை -சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்

11 Dec, 2024 | 07:37 AM

இந்த ஆண்டு முழுவதும் உலகின் பல பகுதிகளில் 104 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் காஸாவில் உயிரிழந்ததாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்தெரிவித்துள்ளது.

இருப்பினும் செய்தியாளர்களின் மரண ஆண்டாக வரலாற்றில் பதிவான 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு  கொல்லப்பட்டசெய்தியாளர்களின் எண்ணிக்கை குறைவு

எனசர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு 129  ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர் என சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அந்தோணி பெல்லங்கர் ஏஎஃப்பி செய்தி நிறுனத்திடம் கூறினார்.

இவ்வாண்டு கொல்லப்பட்ட 55 பேர் பாலஸ்தீனஊடகவியலாளர்கள்  . காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட மோசமான தாக்குதல்களின் விளைவாக அந்த மரணங்கள் நிகழ்ந்ததாக சம்மேளனம் குறிப்பிட்டது.

2023 அக்டோபர் 7ல் இஸ்ரேல்-காஸா போர் தொடங்கியது முதல் இதுவரை 138 பாலஸ்தீன செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர்எனசர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்தெரிவித்துள்ளது

மத்திய கிழக்கிற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு மிக மோசமான வட்டாரமாக ஆசியாஅமைந்திருப்பதாக அது கூறியது.

ஆசியாவில் இவ்வாண்டு 20 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.  பாகிஸ்தானில் ஆறு பேரும் பங்ளாதேஷில் ஐவரும் இந்தியாவில் மூவரும் கொல்லப்பட்டதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்தெரிவித்துள்ளது   நன்றி வீரகேசரி 





சிரிய ஜனாதிபதி ஆசாத்தின் ஆட்சி வீழ்ந்தது – மேற்குலக நாடுகள் வரவேற்பு 

08 Dec, 2024 | 08:10 PM

சிரியாவின் பசார் அல் ஆசாத்தின் ஆட்சியை வீழ்ச்சியை மேற்குலகநாடுகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

ஆசாத்தின் காட்டுமிராண்டி அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ளது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

சிரியமக்களிற்கும் அவர்களது துயரத்திற்கும் நிச்சயமற்ற சூழலில் அவர்களின் பொறுமைக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றேன்,அமைதி சமாதானம் ஐக்கியம்  ஆகியவற்றிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்,மத்திய கிழக்கில் அனைவரினதும் பாதுகாப்பு குறித்து பிரான்ஸ் அர்ப்பணிப்புடன் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசாத்தின் வீழ்ச்சியை சிறந்த செய்தி என தெரிவித்துள்ள ஜேர்மனியின் சான்சிலர் ஒலாப்ஸ்கோல்ப்ஸ் சிரியாவில் அரசியல் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பசார் அல் அசாத் தனது மக்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தினார்,அவரது மனச்சாட்சியில் ஆயிரக்கணக்கான உயிர்கள் உள்ளன ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக்கினார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசாத் அரசாங்கம் உண்மையில் வீழ்ச்சியடைந்துவிட்டது என்றால் பிரிட்டன் அதனை வரவேற்கின்றது என பிரிட்டனின் பிரதி பிரதமர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 





சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ரஸ்யாவில் 

09 Dec, 2024 | 06:40 AM

சிரியாவின் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பசார் அல் ஆசாத் ரஸ்யாவில் உள்ளதாகவும்ரஸ்ய அரசாங்கம் அவருக்கு அடைக்கலம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசாத் தனது குடும்பத்தினருடன் மொஸ்கோ வந்தார் என கிரெம்ளின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரஸ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.   நன்றி வீரகேசரி 

மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   நன்றி வீரகேசரி 






அசாத்திற்கு புகலிடம் வழங்குவது என்பது புட்டினின் தனிப்பட்ட முடிவு - கிரெம்ளின் பேச்சாளர் 

09 Dec, 2024 | 04:22 PM

சிரியாவின் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பசார் அல் அசாத்திற்கு புகலிடமளிப்பது என்ற  தீர்மானத்தை ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினே எடுத்தார் இது அவரது தனிப்பட்ட தீர்மானம் என கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

புட்டின் தனிப்பட்டரீதியில் இந்த முடிவை எடுத்தார் என கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

எனினும் அசாத் ரஸ்யாவில் எங்குள்ளார் என்பதை உறுதி செய்வதற்கு அவர் மறுத்துள்ளார்.

புட்டினும் அசாத்தும் எப்போது இறுதியாக சந்தித்தார்கள் அவர்கள் எதிர்காலத்தில் சந்திப்பார்களா என்பதையும் அவர் குறிப்பிடவில்லை.

சிரியாவில் ஆட்சியில் உள்ளவர்களுடன் ரஸ்யா தொடர்புகளை பேணும் என அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 





இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பங்களாதேஷ்அரசிடம் இந்தியா வலியுறுத்தல் 

10 Dec, 2024 | 10:59 AM

பங்களாதேசத்தில் வாழும் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு அரசிடம் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தி உள்ளார்.

பங்களாதேசத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதன்காரணமாக கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி நடத்தி வருகிறது.

இந்த சூழலில் பங்களாதேசம் முழுவதும் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதோடு பாகிஸ்தானோடு வங்கதேச அரசு அதிக நட்பு பாராட்டி வருகிறது. இதன்காரணமாக எல்லை பகுதிகள் வழியாக இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயம் எழுந்திருக்கிறது.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று அரசு முறை பயணமாக வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு சென்றார். அங்கு வங்கதேச வெளியுறவு செயலாளர் முகமது ஜசீம் உதினை சந்தித்துப் பேசினார். இதன்பிறகு வங்கதேச வெளியுறவு ஆலோசகர் முகமது தவுகித் ஹூசைனுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸையும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்புகள் தொடர்பாக இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, டாக்காவில் நிருபர்களிடம் கூறியதாவது: வங்கதேசத்தில் வாழும் சிறுபான்மையினரின் (இந்துக்கள்) பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். இந்து கோயில்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவித்தேன். இதுதொடர்பாக வங்கதேச தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினேன்.

வங்கதேசம், இந்தியா இடையிலான உறவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எரிசக்தி, நதிநீர் பகிர்வு, மின்சாரம், வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இரு நாடுகளின் மக்கள் பலன் அடையும் இந்த திட்டங்களை தொடர்ந்து அமல்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். இவ்வாறு விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது எவ்வித சோதனையும் நடத்த வேண்டாம் என்று வங்கதேச அரசு அறிவித்துள்ளது. இதை பயன்படுத்தி பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் ஆயுதங்கள், போதை பொருளை வங்கதேசத்தில் இறக்குமதி செய்து, அங்கிருந்து இந்தியாவுக்குள் கடத்த முயற்சி செய்யக் கூடும்.

இந்தியாவும் வங்கதேசமும் சுமார் 4,096 கி.மீ. தொலைவு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. வங்கதேசத்தில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தால் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க தீவிரவாதம் மூலம் பாகிஸ்தான் மறைமுக போரை நடத்தி வருகிறது. இதற்கு தற்போதைய வங்கதேச அரசு ஆதரவு அளிப்பதாக தெரிகிறது.

இதை கண்டிக்கவும், வங்கதேசத்துக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கவும் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் பயணமாக வங்கதேசத்துக்கு திங்கள்கிழமை சென்றார். இந்த பயணம் ஆக்கப்பூர்வமாக இருந்தது. இனிமேல் வங்கதேச அரசின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும் என நம்புகிறோம். இவ்வாறு இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   நன்றி வீரகேசரி 






No comments: