திரையுலகில் எத்துணை உச்சத்தில் , புகழில் இருந்தாலும் திடிரென்று சரிவுகளை சந்திக்க நேரிடும் என்பதற்று பலரை உதாரணம் காட்டலாம். அவர்களில் ஒருவர் தான் இயக்குனர் ஸ்ரீதர். ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கி, பல நடிகர்களை அறிமுகம் செய்து அகில இந்திய அளவில் புகழ் பெற்றிருந்த அவர் 70ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து தொடர் சரிவுகளை சந்தித்த வண்ணம் இருந்தார். அவருடைய சித்ராலயா பட நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அதை மீட்டெடுத்து மீண்டும் திரைக் கடலில் செலுத்துவதற்கு அவர் எம் ஜி ஆருடன் கரம் கோர்த்து உருவாக்கிய படம்தான் உரிமைக் குரல்.
சிவாஜி நடிப்பில் அவர் தயாரித்துக் கொண்டிருந்த ஹீரோ 72படம்
நான்காண்டுகளாக தயாரிப்பில் இழுப்பட்டுக் கொண்டிருந்த சமயம், ஏற்கனவே ஹிந்தியிலும் , தமிழிலும் எடுத்த அவளுக்கென்று ஒரு மனம் வெற்றி பெறாததாலும் , அலைகள் படமும் தோல்வியடைந்ததாலும் மிகுந்த நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருந்த ஸ்ரீதருக்கு பிரபல ஹிந்தி நடிகர் ராஜேந்திர குமார் ஒரு ஆலோசனை வழங்கினார். நீங்கள் ஏன் எம் ஜி ஆரை வைத்து படம் எடுக்க கூடாது என்பது தான் அது.

உரிமைக் குரல் தயாரானதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பு 1964ல் ஸ்ரீதர் , எம் ஜி ஆர் நடிப்பில் அன்று சிந்திய ரத்தம் என்று ஒரு படத்தை ஆரம்பித்து சில தினம் படப்பிடிப்பு நடந்து பின்னர் எம் ஜி ஆரின் கால்ஷீட் கிடைக்காமல் அதன் படப்பிடிப்பு நின்று விட்டது. புதுமுகங்களை வைத்து கலரில் காதலிக்க நேரமில்லை படம் எடுக்கும் ஸ்ரீதர் தன்னை போட்டு கருப்பு வெள்ளையில் படம் எடுக்கிறார் என்ற கோபம் எம் ஜிஆருக்கு! அதன் பின் அதே அன்று சிந்திய ரத்தம் சில மாறுதல்களோடு சிவாஜி நடிப்பில் சிவந்த மண்ணாகி வெளிவந்து வெற்றி கண்டது. இந்த சம்பவத்தாலும், தொடர்ந்து சிவாஜி பட டைரக்டராக தான் அடையாளப் படுத்தப் பட்டிருப்பதாலும் எம் ஜி ஆரை அணுக ஆரம்பத்தில் அச்சப் பட்ட ஸ்ரீதர் பின்னர் எம் ஜி அரை நேரில் சென்று சந்தித்து தனக்கொரு படம் நடித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உடனானடியாக அதற்கு உடன் பட்ட எம் ஜி ஆர் மூன்று மாதங்களில் படத்தை முடித்து கொடுப்பதாக எழுத்து மூலமும் உத்தரவாதம் வழங்கினார். அதே போல படமும் துரித கதியில் தயாராகி வெளியானது.
கிராமத்தில் சிரமத்துக்கு மத்தியில் விவசாயம் செய்து பிழைக்கும் அண்ணன், தம்பி . தம்பி கோபிக்கும் , ராதாவுக்கும் இடையில் காதல். அண்ணன் பட்ட கடனுக்கு தன் பங்கு நிலத்தையும் அடமானம் வைக்கிறான் கோபி. அவனுக்கென்று நிச்சயித்த ராதாவை துரைசாமிக்கு மணம் முடித்து கொடுக்க அவளின் பெற்றோர் முடிவெடுக்க , கோபியும், ராதாவும் பதிவுத் திருமணம் செய்கிறார்கள். இதன் காரணமாக அண்ணன் தம்பிகளுக்கிடையே உறவு சீர் குலைகிறது. பாகப்பிரிவினையும் நடக்கிறது. இறுதியில் சகோதர்கள் ஒன்று சேர்ந்தார்களா , நிலத்தை மீட்டார்களா என்பதே மீதிக் கதை.
படத்தில் ஆந்திரா பாணியில் வேட்டியை சரித்து மடித்துக் கட்டிக்
கொண்டு படம் முழுவதும் வருகிறார் எம் ஜி ஆர். மாட்டு வண்டி ஓட்டுகிறார், அபலை பெண்ணை வில்லன்களிடம் இருந்து காப்பாற்றுகிறார், கிராமத்து பெண்களுடன் கொட்டமடிக்கிறார், கதாநாயகி லதாவை காதலிக்கிறார், வில்லன் நம்பியாரை எச்சரிக்கிறார் இப்படி படம் முழுதும் வியாபித்திருக்கிறார் எம் ஜி ஆர். கத்திக் குத்துக்கு ஆளாகும் போதும், அண்ணனிடம் உருக்கமாக பேசும் போதும் நல்ல நடிப்பையும் வெளிப்படுத்துகிறார். லதா அடிக்கடி சேலை முந்தானை சரிவதும் தெரியாமல் ஆடிப் பாடுகிறார். சில காட்சிகளில் சோக நடிப்பையும் தருகிறார். அண்ணனாக வரும் எஸ் வி சகஸ்ரநாமம், அண்ணியாக வரும் அஞ்சலிதேவி , இருவர் நடிப்பும் நிறைவை தருகிறது. வி கே ஆர், சி கே சரஸ்வதி ஜோடி வழக்கம் போல. நம்பியாருக்கு இது மற்றுமொரு படம் !

படத்துக்கு மிக உதவியது பாடல்கள். படம் தயாரகிக் கொண்டிருந்த போது எம் ஜி ஆர், கண்ணதாசன் இடையில் உறவு சீர் கெட்டிருந்தது . இதன் காரணமாக வாலியே எல்லா பாடல்களையும் எழுதுவதாக இருந்தது. ஆனாலும் விழியே கதை எழுது பாடலை கேட்ட எம் ஜி ஆர் அப்பாடலை விட மனமில்லாமல் கண்ணதாசனின் அப்பாடலை படத்தில் சேர்த்துக் கொள்ள சம்மதித்தார். கண்ணதாசனின் விழியே கதை எழுது பாடல் மிக பிரபலமானது. வாலியின் பொண்ணா பிறந்தா புருஷன் கிட்டே, ஒரு தாய் வயிற்றில் பிறந்த உடன் பிறப்பில் , கல்யாண வலை ஓசை கொண்டு பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. எம் எஸ் விஸ்வநாதனின் இசை படத்துக்கு பிளஸ்.
படத்தை என். பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்தார்.நேர்த்தியான
ஒளிப்பதிவு. ஷியாம் சுந்தரின் சண்டையமைப்பு பிரமாதம். என் எம் சங்கர் படத் தொகுப்பை கவனித்துக் கொண்டார். ஸ்ரீதரின் எல்லாப் படங்களிலும் இருக்கும் கதாசிரியர் கோபு இந்தப் படத்தில் இல்லை.
ஒளிப்பதிவு. ஷியாம் சுந்தரின் சண்டையமைப்பு பிரமாதம். என் எம் சங்கர் படத் தொகுப்பை கவனித்துக் கொண்டார். ஸ்ரீதரின் எல்லாப் படங்களிலும் இருக்கும் கதாசிரியர் கோபு இந்தப் படத்தில் இல்லை.
படத்தை ஸ்ரீதர் தன் பாணியில் இருந்து சற்று விலகி டைரக்ட் செய்திருந்தார். எம் ஜி ஆருக்காக சில சமரசங்களை செய்துள்ளார் என்பது புலப்பட்டது. ஆனாலும் எம் ஜி ஆர் , ஸ்ரீதர் இணைப்பை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை படத்தின் வெற்றி உறுதி படுத்தியது. படம் 175நாள் ஓடி வெள்ளி விழா கண்டது. ஸ்ரீதரின் நிதி நெருக்கடிக்கும் விடிவைத் தந்தது.
No comments:
Post a Comment