உலகச் செய்திகள்

அசாத் அரசாங்கத்தை பதவியிலிருந்த அகற்றிய சிரிய கிளர்ச்சியாளர்களின் எதிர்காலம் என்ன?

மும்பையில் சுற்றுலா படகு மீது கடற்படை படகு மோதி 13 பயணிகள் பரிதாப உயிரிழப்பு: 101 பேர் பத்திரமாக மீட்பு

ரஷ்யாவின் கதிரியக்க, இரசாயன, உயிரியல் பாதுகாப்புப் படைப்பிரிவின் தளபதி குண்டு வெடிப்பில் பலி

2021 இல் ஈராக்கில் என்னை கொலை செய்ய திட்டமிட்டனர் – பரிசுத்த பாப்பரசர்

உலக அரபு மொழி தினம்: அரபு மொழியை காக்க சவூதியின் முன்னணி பங்கு




அசாத் அரசாங்கத்தை பதவியிலிருந்த அகற்றிய சிரிய கிளர்ச்சியாளர்களின் எதிர்காலம் என்ன?

19 Dec, 2024 | 08:58 AM
image

சிரியாவில் பசார் அல் அசாத் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றிய கிளர்ச்சிக்குழு கலைக்கப்படும் என அந்த குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சிரிய கிளர்ச்சிகுழு கலைக்கப்படும் அதன் உறுப்பினர்கள் சிரிய இராணுவத்தில் இணைக்கப்படுவார்கள் என எச்டிஎஸ் அமைப்பின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார்.

அனைவரும் சட்டத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் பல்லின சமூகத்தை கொண்ட நாட்டில் ஐக்கியம் ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிரியா ஐக்கிய தேசமாக தொடரவேண்டும் என தெரிவித்துள்ள அவர் சமூக நீதி நிலவவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சிரிய அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பவேண்டும் என்றால் சிரியா மீதான சர்வதேச தடைகள் நீங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 


 



மும்பையில் சுற்றுலா படகு மீது கடற்படை படகு மோதி 13 பயணிகள் பரிதாப உயிரிழப்பு: 101 பேர் பத்திரமாக மீட்பு

19 Dec, 2024 | 07:51 AM
image

மும்பை: மும்பை கடற்கரை பகுதியில் சுற்றுலா படகு மீது, கடற்படையின் அதிவேக ரோந்து படகு ஒன்று மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அங்கு தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை அருகேயுள்ள எலிபென்டா தீவில் புகழ்பெற்ற கர்பரி குகைகள் உள்ளன. இதை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் மும்பை கடற்கரையிலிருந்து படகுகளில் செல்வது வழக்கம். சுற்றுலா பயணிகள் 100-க்கும் மேற்பட்டோருடன், நீல்கமல் என்ற படகு மும்பையின் கேட்வே ஆப் இந்தியா பகுதியிலிருந்து எலிபென்டா தீவு நோக்கி நேற்று மாலை புறப்பட்டது. அப்போது அந்த வழியாக கடற்படையின் ரோந்து படகு சென்றது. அந்த படகு நேற்று மாலை 3.55 மணியளவில், கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது அதிவேகத்தில் மோதியது. இதில் பயணிகள் படகு பலத்த சேதம் அடைந்து, ஒரு பக்கமாக சாய்ந்தது. இதனால் படகில் இருந்த பயணிகள் சிலர் கடலில் விழுந்தனர்.

இத்தகவல் அறிந்ததும் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் படகுகளில் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் விழுந்த 13 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். படகில் சென்ற பயணிகள் 101 பேர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர். காயம் அடைந்தவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டனர்.

மீட்பு பணி குறித்து இந்திய கடலோ காவல் படை ஐஜி பிஷம் சர்மா கூறுகையில், “மும்பை கடல் பகுதியில் கடலோர காவல் படை மற்றும் கடற்படை இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. எங்களது கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன” என்றார். இந்த விபத்து குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “எலிபென்டா தீவுக்கு சுற்றுலா பயணிகளுடன் சென்ற நீல்கமல் என்ற படகு மீது கடற்படையின் அதிவேக ரோந்து படகு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணியில் கடற்படை மற்றும் கடலோ காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணைய தலைவர் உன்மேஷ் வக் அளித்த பேட்டியில், ‘‘எங்கள் துறைமுகத்துக்கு சொந்தமான பைலட் படகு விபத்து நடந்த இடத்தை நேற்று மாலை கடந்து சென்றது. அந்த படகு மூலம் 40 பேர் மீட்கப்பட்டு துறைமுக ஆணைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்’’ என்றார்.   நன்றி வீரகேசரி 






ரஷ்யாவின் கதிரியக்க, இரசாயன, உயிரியல் பாதுகாப்புப் படைப்பிரிவின் தளபதி குண்டு வெடிப்பில் பலி

Published By: Digital Desk 3

17 Dec, 2024 | 01:14 PM
image

மொஸ்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், ரஷ்யாவின் கதிரியக்க, இரசாயன, உயிரியல் பாதுகாப்புப் படைப்பிரிவின் தளபதியும் அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ளனர்.

கதிரியக்க, இரசாயன, உயிரியல் பாதுகாப்புப் படைப்பிரிவின் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் செவ்வாய்கிழமை அதிகாலை குடியிருப்புத் தொகுதியிலிருந்து வெளியேறும்போது மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதனம் வெடிக்கச் செய்யப்பட்டதாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 






No comments: