-சங்கர சுப்பிரமணியன்
மண்ணில் வாழ வழிவகுத்து வாழ்வியல்
நூல் தந்தான் வான்புகழ் வள்ளுவன்
ஆசை வேண்டுமென்று சொன்னவன்தான்
பேராசை வேண்டாமென்றான்
ஆதலாலினால் அவன் நமக்கு எல்லாமும்
தேவைக்கேற்ப வேண்டுமென்றான்
அத்தகைய ஆசையைத்தான் வேண்டும்
என்றான் ஏற்றமிகு குறளினிலே
தேவைக்கு அதிகமாக சேர்த்து வைக்கும்
செயல் நமக்கு வேண்டாமென்றான்
அதிகம் வேண்டாம் எமக்கு என்றுகூறுமவன்
துறவறம் வேண்டாம் என்றான்
எல்லாம் வேண்டாமென துறந்துவாழ்வதற்கா
காமத்துப்பால் தந்தானவன்
ஆதலினால் மானிடரே வேண்டுதல்
வேண்டாமை பொருள் அறிவீர்
இலானடி சேர்ந்தாரெனில் பேராசையும்
துறவும் இலானடி சேர்ந்தாராம்
என்று கூறும் ஏற்றபொருள் காண்பதுவே
நன்றென்று நான் உரைப்பேன்
யாண்டும் இடும்பை இல என்றுரைக்கின்
எப்போதும் துன்பமில்லை என்றறிவீர்
வேண்டும் வேண்டுமென பேராசை குணம்
தவிர்ர்த்து வாழ்வதென்றும்
வேண்டாம் வேண்டாமென வாழுகின்ற
துறவநிலை தவிர்த்தும்
வாழுகின்ற மக்களோடு இணைந்து வாழும்
வாழ்வதனை பெற்றவர்க்கு
ஒருபோதும் துன்பமில்லை என்றுரைத்தார்
வள்ளுவரும் என்றறிவீர் மாந்தர்களே?
நூல் தந்தான் வான்புகழ் வள்ளுவன்
ஆசை வேண்டுமென்று சொன்னவன்தான்
பேராசை வேண்டாமென்றான்
ஆதலாலினால் அவன் நமக்கு எல்லாமும்
தேவைக்கேற்ப வேண்டுமென்றான்
அத்தகைய ஆசையைத்தான் வேண்டும்
என்றான் ஏற்றமிகு குறளினிலே
தேவைக்கு அதிகமாக சேர்த்து வைக்கும்
செயல் நமக்கு வேண்டாமென்றான்
அதிகம் வேண்டாம் எமக்கு என்றுகூறுமவன்
துறவறம் வேண்டாம் என்றான்
எல்லாம் வேண்டாமென துறந்துவாழ்வதற்கா
காமத்துப்பால் தந்தானவன்
ஆதலினால் மானிடரே வேண்டுதல்
வேண்டாமை பொருள் அறிவீர்
இலானடி சேர்ந்தாரெனில் பேராசையும்
துறவும் இலானடி சேர்ந்தாராம்
என்று கூறும் ஏற்றபொருள் காண்பதுவே
நன்றென்று நான் உரைப்பேன்
யாண்டும் இடும்பை இல என்றுரைக்கின்
எப்போதும் துன்பமில்லை என்றறிவீர்
வேண்டும் வேண்டுமென பேராசை குணம்
தவிர்ர்த்து வாழ்வதென்றும்
வேண்டாம் வேண்டாமென வாழுகின்ற
துறவநிலை தவிர்த்தும்
வாழுகின்ற மக்களோடு இணைந்து வாழும்
வாழ்வதனை பெற்றவர்க்கு
ஒருபோதும் துன்பமில்லை என்றுரைத்தார்
வள்ளுவரும் என்றறிவீர் மாந்தர்களே?
No comments:
Post a Comment