இந்திய திரையுலகில் சில கதைகள் சாகாவரம் பெற்றவை. அவை
காலத்துக்கு காலம் புதிய வடிவங்களில் மீண்டும் மீண்டும் படமாகிக் கொண்டே இருக்கும். ரசிகர்களும் அவற்றை பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி மறு அவதாரம் எடுத்த ஒரு படம் தான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த வாணி ராணி படம். 1964ம் வருடம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் என் டி ராமராவ் இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடிக்க வெளிவந்து வெற்றி பெற்ற படம் ராமுடு பீமுடு. இந்த படத்தை விஜயா வாஹினி ஸ்டுடியோ அதிபர்களாக , விஜயா கம்பைன்ஸ் நாகிரெட்டி, சக்கரபாணி இருவரும் தமிழில் எங்க வீட்டுப் பிள்ளை என்ற பெயரில் படமாக்கினார்கள். தமிழின் சூப்பர் ஸ்டாரான எம் ஜி ஆர் இரட்டை வேடத்தில் நடித்த இந்தப் படம் 1965ல் வெளியாகி மகத்தான வெற்றி பெற்றது.
அதன் வெற்றியில் மயங்கிய நாகிரெட்டி, சக்கரபாணி இருவரும்
எங்க வீட்டுப் பிள்ளை படத்தை ஹிந்தியில் சூப்பர் ஸ்டாரான திலீப்குமார் நடிப்பில் ராம் ஆவ்ர் ஷியாம் என்ற பேரில் படமாக்கி அப் படமும் வெற்றி கண்டது. இது நடந்து ஆறு ஆண்டுகளாகிய பின்னர் இதே கதையை ஹிந்தியில் சி. பி சிப்பி என்பவர் சீதா அவ்ர் கீதா என்ற பெயரில் படமாக்கினார். ஹிந்தியில் பிரபலமான சலீம், ஜாவேத் என்ற இரட்டை கதாசிரியர்களை கொண்டு , ஒரே உருவ ஒற்றுமை கொண்ட இரண்டு ஆண்களின் கதையை இரண்டு பெண்களுக்குள் நடக்கும் கதையாக மாற்றி , ஹிந்தியின் பெண் சூப்பர் ஸ்டாரான ஹேமாமாலினி நடிப்பில் படமாக்கினார்கள். அந்தப் படமும் சக்கை போடு போட்டது. தாங்கள் தயாரித்த படத்தின் கதையை உல்டா செய்து படமாக்கி காசு பார்த்து விட்டார்கள் என்று நாகிரெட்டி, சக்கரபாணி இருவரும் சிப்பியை போட்டு உலுக்க அவர்களுக்குள் ஓர் உடன்பாடு வந்தது. அதன் பிரகாரம் சீதா அவ்ர் கீதா படத்தை தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கும் உரிமையை நாகிரெட்டி, சக்கரபாணி இருவருக்கும் தாரை வார்ப்பதாக இணக்கம் காணப்பட்டது. அதன் படி சீதா அவ்ர் கீதா தமிழில் வாணி ராணி என்று மறு வடிவம் பெற்றது.

படம் முழுவதும் வாணிஸ்ரீயை நம்பியே எடுக்கப்பட்டிருந்தது. பயந்த
சுபாவம் கொண்ட வாணி, துணிச்சல் மிக்க கழைக் கூத்தாடி ராணி என்று இரண்டு வேடங்களிலும் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவருகிறார் வாணிஸ்ரீ. ஏற்கனவே இதே சாயலை கொண்ட இரட்டை வேடத்தில் இருளும் ஒளியும் படத்தில் அவர் நடித்திருந்தால் அவ்வப்போது அதுவும் நினைவுக்கு வந்து போவதை தவிர்க்க முடியவில்லை. அவருக்கு ஈடு கொடுத்து நடிக்கிறார் சி . கே . சரஸ்வதி. பழக்கப்பட்ட வேடம் என்றாலும் குறையின்றி நிறைவாக செய்கிறார் அவர். அவருடைய அட்டகாசத்துக்கு துணை புரிகிறார் ஸ்ரீகாந்த். தங்கவேலு அடக்கமாக நடிக்கிறார்.

படத்தில் இரண்டு ஹீரோக்கள். சிவாஜி , முத்துராமன் என்று இருவர் இருந்த போதும் முத்துராமன் பாத்திரத்தில் இருந்த அழுத்தம் கூட சிவாஜி பாத்திரத்தில் இல்லை. ஏனோதானோ என்று வந்து போகிறார் சிவாஜி. விஜயா கம்பைன்ஸ் தயாரிப்பில் சிவாஜி நடித்த ஒரே படமும் இப்படி ஆகி விட்டது. இந்த படம் வந்த சீசனில் பல படங்களில் சிவாஜி குடிகாரனாக நடித்துக் கொண்டிருந்தார். இதிலும் அதேயே செய்து வைத்தார். படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுத , கே வி மகாதேவன் இசை வழங்கினார். பொன்னான மனம் எங்கு போகின்றது பாடல் மட்டும் கேட்கும் படி இருந்தது. ஆரூர்தாஸ் வசனத்தை எழுதியிருந்தார். டி எம் சுந்தரபாபு ஒளிப்பதிவு ஓகே . படத்தை இயக்கத் தொடங்கியவர் சாணக்கியா. இடையில் திடீர் என்று அவர் காலமாக அவரின் அசிஸ்டென்ட் ராமசந்திரராவ் மீதி படத்தை இயக்கத் தொடங்கினார். என்ன அநியாயம் திடிரென்று அவரும் மரணமடைந்து விட்டார். அதன் பிறகு வாணி ராணியத் தொட, தொடர எந்த டைரெக்டரும் முன் வரவில்லை. பின்னர் சிவாஜியின் வேண்டுகோளுக்கு இணங்கி சி வி ராஜேந்திரன் மீதி காட்சிகளை படமாக்கிக் கொடுத்தார். நல்ல காலம் அவருக்கு எதுவும் நடக்கவில்லை! இவ்வாறு பல குழப்பங்களுக்கு மத்தியில் தயாரான வாணி ராணி தமிழ் ரசிகர்களின் மனதை கவராமல் , விஜயா கம்பைன்ஸுக்கு திருஷ்டி பரிகாரமானாள்!
No comments:
Post a Comment