இங்கே ஒரு யானை பிளிறி ஓலமிட்டதாம்
எங்கிருத்தோ வந்து இறைவன் காத்தானாம்
இங்கேதான் ஓலமிட்டு நம்மக்கள் ஓடினர்
எங்கிருந்தாய் ஓடிவரவில்லையே முருகா
கனி ஒன்றுக்காக உலகைச்சுற்றி பறந்தாயே
பிள்ளைக்கனிகள் பலர் மடிந்தனரே வேலா
தேவர்களுக்கு படைத்தலைவனாக நின்றாய்
எங்கோ இருக்கும் தேவர்களைக் காத்தாய்
படைத்தலைவர்களாய் பலர் நம்மை அழிக்க
தடை செய்யமுடியாது நின்றதேன் தலைவா
தமிழ்த் தலைவர்கள் தமிழரை காக்கவில்லை
தமிழ்க்கடவள் நீயும் தமிழரை காக்கவில்லை
காக்க காக்க கனகவேல் காக்க என்றோமே கந்தா
நோக்க நோக்க நொடியில் நோக்க மறந்ததேன் மால்மருகா
மாலுக்கு யானை மீது கொண்ட இரக்கம்
மருகனுக்கு தம்மக்கள் மீது ஏனில்லை ஐயா
இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்யென
எம்பாட்டன் இறையனார் குறளில் சொன்னார்
எம்மைக் காக்காது போனாலும் கந்தவேளே
உம்மைக் கைதொழுகின்றோம் அன்பால்!
இங்கேதான் ஓலமிட்டு நம்மக்கள் ஓடினர்
எங்கிருந்தாய் ஓடிவரவில்லையே முருகா
கனி ஒன்றுக்காக உலகைச்சுற்றி பறந்தாயே
பிள்ளைக்கனிகள் பலர் மடிந்தனரே வேலா
தேவர்களுக்கு படைத்தலைவனாக நின்றாய்
எங்கோ இருக்கும் தேவர்களைக் காத்தாய்
படைத்தலைவர்களாய் பலர் நம்மை அழிக்க
தடை செய்யமுடியாது நின்றதேன் தலைவா
தமிழ்த் தலைவர்கள் தமிழரை காக்கவில்லை
தமிழ்க்கடவள் நீயும் தமிழரை காக்கவில்லை
காக்க காக்க கனகவேல் காக்க என்றோமே கந்தா
நோக்க நோக்க நொடியில் நோக்க மறந்ததேன் மால்மருகா
மாலுக்கு யானை மீது கொண்ட இரக்கம்
மருகனுக்கு தம்மக்கள் மீது ஏனில்லை ஐயா
இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்யென
எம்பாட்டன் இறையனார் குறளில் சொன்னார்
எம்மைக் காக்காது போனாலும் கந்தவேளே
உம்மைக் கைதொழுகின்றோம் அன்பால்!
No comments:
Post a Comment