தமிழ் முரசே என் தவிப்பைக்கேளாயோ

 கங்காரு தேசமே என்னைக் கண் நோக்கிப்பாராய!     

கடவுள் படைத்த உயிரைக்காவுகொடுக்காமல் காக்க வேண்டி கடல் கடந்தார் என் கணவன்.

கனிவு நிறைந்த அவுஸ்திரேலிய தேசத்திற்கு வந்தவரை வரவேற்று வாழவைத்தது அந்த தேசம்.

தலை வணங்குகின்றேன் தாயே உன்னை நான்.

அபலைப் பெண் நான் அனுப்புகின்றேன்.. 

என் ஆழ்மனதின் துயரங்களை அதை ஒருமுறை

முரசே நீ முழுவதுமாய்.கேளாயோ

ன்புடனே எனக்கும் தூது செல்லாயோ

அகதியாய் வந்தவர்க்கும் உயிர் உண்டு, உணர்வு உண்டு, உறவுகள் பல உண்டு, எனக்கும் என் கணவனைக் காண்பேனா என ஏக்கமுண்டு.

எண்ணற்ற ஆசையுண்டு ஆண்டவன் தந்த  ஆயுள் ஆயிரம் வருடங்களா அறுபது தாண்டுவதே அரிதாகிப் போகிறது இவ்வுலகில்

ஆயினும் ஆறாய் பெறுகிறது அன்பு மட்டும்.

அகதியாய் உள்ள  என் கணவனைப் பார்ப்பதற்கு அவுஸ்திரேலிய நாட்டு சட்டத்திற்கு ஏற்ப நான் அங்கு வந்து என்உறவைப்பார்த்திடவும் ஆழ்மனதின் காயங்களை பகிர்ந்திடவும் அனுமதிக்குமா ?

அன்புநிறை அவுஸ்திரேலிய தேசம் தமிழ்முரசே என் தவிப்பை எழுத்து வடிவில் நீ எடுத்து இயம்பாயோ, எனக்கு ஒரு பதில் தாராயோ, ஏக்கமுடன் காத்திருக்கும் அகதியின் மனைவி நான்.   

 

திருமதி .கஜநந்தினி.வரதலோஜன்

 யா/கதீஜா மகா வித்தியாலயம்.

No comments: