11 தூதுவர்களும் 6 உயர் ஸ்தானிகர்களும் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்கள் கையளிப்பு
கொழும்பு பல்கலைக்கழகம் உலக தரவரிசையில் முதலிடம் பெற்று சாதனை
75ஆவது தேசிய சுதந்திர தின விழாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து
பெப்ரவரி 22, 23, 24: உள்ளூராட்சி சபைத் தேர்தல் தபால் வாக்களிப்பு
வலி வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 109 ஏக்கர் காணி விடுவிப்பு
11 தூதுவர்களும் 6 உயர் ஸ்தானிகர்களும் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்கள் கையளிப்பு
- கண்டி ஜனாதிபதி மாளிகையில் நிகழ்வு
இலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்களும் 6 உயர் ஸ்தானிகர்களும் நேற்று (02) பிற்பகல் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நாற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.
ஐவரி கோஸ்ட், உருகுவே, மொங்கோலியா, சர்பியா, சூடான், ஆமேனியா, வட மசடோனியா, ஸ்லோவாக்கியா, செக் குடியரசு, சுவீடன் மற்றும் எக்குவடோர் ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களும் கனடா, மலேசியா, மாலைதீவு, ஜமைக்கா, தன்சானியா, மலாவி ஆகிய நாடுகளுக்கான உயர் ஸ்தானிகர்களுமே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது பெயர் விபரங்கள் வருமாறு:
1. N’dry Eric Camile - Ambassador –Republic of cote d’lvoire based in New Delhi
என்’ட்ரி எரிக் கெமில் – ஐவரி கோஸ்ட் (Côte d'Ivoire) தூதுவர்
2. Jason K.Hall - High Commissioner – Jamaica based in New Delhi
ஜெசன் கே.ஹோல் – ஜமைக்கா உயர் ஸ்தானிகர்
3. Alberto Guani Amarilla - Ambassador –Oriental Republic Uruguy based in new Delhi
எல்பர்டோ குவானி அமரிலா – உருகுவே தூதுவர் (புது டெல்லி)
4. Ganbold Dambajav - Ambassador –Mongolia based in new Delhi
கென்போல்ட் தம்பஜ்வ் – தூதுவர் – மொங்கோலிய தூதுவர் (புது டெல்லி)
5. Anisa Kapufi Mbega - High Commissioner –United Republic of Tanzania based in New Delhi
அனிசா கபுபி பெகா – தன்சானியாவின் உயர்ஸ்தரினகர் (புது டெல்லி)
6. Sinisa Pavic - Ambassador –Republic of Serbia based in new Delhi
சினிசா பவிக் – சர்பியா தூதுவர் (புது டெல்லி)
7. Leonard Menezi- High commissioner – Republic of Malawi based in New Delhi
லியோனார்ட் மெனஸி – மலாவி தூதுவர் (புது டெல்லி)
8. Abdalla Omer Elhusain – Ambassador – Republic of the Sudan based in New Delhi
அப்தல்லா ஒமர் எல் ஹுசைன் - சூடான் தூதுவர் (புது டெல்லி)
9. Eric Walsh- High commissioner – Canada based in Colombo
எரிக் வொல்ஷ் – உயர் ஸ்தானிகர் – கனடா தூதுவர்
10. Youri Babakhanian – Ambassador – Republic of Armenia based in New Delhi
யூரி ப்பகானியான் - ஆமேனியா தூதுவர் (புது டெல்லி)
11. Slobadan Uzunov – Ambassador- Republic of North Macedonia based in New Delhi
ஸ்லோபடன் உசுநோவ் – வட மசடோனியா தூதுவர் – (புது டெல்லி)
12. Robert Mexian – Ambassador- Slovac republic based in New Delhi
ரொபட் மெக்ஸியன் – ஸ்லோவாக்கியா தூதுவர் (புது டெல்லி)
13. Badli Hisham bin Adam – High commissioner – Malaysia based in Colombo
பட்லி ஹிஷாம் பின் அதாம் – மலேசியா உயர் ஸ்தானிகர்
14. Dr. Ms Eliska Zigova – Ambassador- Czech Republic based in New Delhi
கலாநிதி எலிஸ்கா சிகோவா – செக் குடியரசின் தூதுவர் (புது டெல்லி)
15. Jan Thesleff – Ambassador- Kingdom Of Sweden based in New Delhi
ஜேன் தெஸ்லெப் – சுவீடன் தூதுவர் (புது டெல்லி)
16. Francisco Teodoro Guevara – Republic Of Ecuador based in New Delhi
பிரான்ஸிஸ்கோ தியோடோரா குவாரா – எக்குவடோர் தூதுவர் (புது டெல்லி)
17. Ali Faiz – High commissioner – Republic of Maldives based in Colombo
அலி பயிஸ் – மாலைத்தீவு உயர் ஸ்தானிகர்
நன்றி தினகரன்
கொழும்பு பல்கலைக்கழகம் உலக தரவரிசையில் முதலிடம் பெற்று சாதனை
2023 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக் கழகங்களின் 'வெபோமெட்ரிக்ஸ்' தரவரிசையின் படி இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கொழும்புப் பல்கலைக்கழகம் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதற்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பு "வெபோமெட்ரிக்ஸ்" தரவரிசையில் அதன் தொடர்ச்சியான வெற்றியை பிரதிபலித்துள்ளது. இந்த ஆண்டு பல்கலைக்கழகம் அதன் முந்தைய உலக தரவரிசை நிலை
1,531 இலிருந்து 1,468 இற்கு முன்னேறியுள்ளதாக UOC அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 முதல் 2021 வரையிலான ஐந்தாண்டு காலப்பகுதியில் பல்கலைக்கழகத்தின் இணைய உள்ளடக்கம், சுய விவரங்களில் உள்ள மேற்கோள்கள் என்பன இந்த முன்னேற்றத்துக்கு காரணமாக வழிவகுத்துள்ளது. நன்றி தினகரன்
75ஆவது தேசிய சுதந்திர தின விழாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து
- இரு நாட்டு உறவுகளை தொடர்ந்தும் பேணுவதற்கு எதிர்பார்ப்பு
இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கை மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தவாறு அமெரிக்க ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்த , அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உப இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்டினால் ஜனாதிபதியிடம் இந்த வாழ்த்துச் செய்தி கையளிக்கப்பட்டது.
இரு நாட்டு மக்களின் அமைதியான, வளமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் தொலைநோக்கையும் தொடர்ந்து பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜோ பைடன் இந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்துக்கு இணையாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கும் 75 ஆண்டுகள் நிறைவடைவதாகவும், இந்த நீண்டகால உறவு பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்த உதவும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவது, மனிதக் கடத்தலைத் தடுப்பது மற்றும் பாதுகாப்பான, சுதந்திரமான மற்றும் திறந்த இந்து-பசுபிக் பிராந்தியத்தை பேணுவது உள்ளிட்ட விடயங்களில் வரலாறு முழுவதும் உலகளாவிய பாரிய சவால்களை இரு நாடுகளும் எதிர்கொண்டதாக ஜோ பைடன் நினைவு கூர்ந்துள்ளார்.
ஜனநாயக நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு ஒற்றுமை, சுதந்திரம் மற்றும் சமத்துவத்தின் ஊடாக மேலும் வலுவடைவதாக பைடென் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். நன்றி தினகரன்
பெப்ரவரி 22, 23, 24: உள்ளூராட்சி சபைத் தேர்தல் தபால் வாக்களிப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தபால்மூல வாக்களிப்பு, எதிர்வரும் பெப்ரவரி 22, 23, 24ஆம் திகதிகளில் இடம்பெறுமென, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள், கடந்த ஜனவரி 05 முதல் ஜனவரி 23 நள்ளிரவு வரை தகுதியான வாக்காளர்களிடமிருந்து கோரப்பட்டிருந்தது.
எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இடம்பெறவுள்ளதோடு, நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு தேர்தலை நடத்துவதை ஒத்திவைக்க வேண்டுமென கோரியும், மக்களின் நடத்தக் கூடாது என்று கோரியும் உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு எதிர்வரும் 10 ஆம் திகதியன்று உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படவுள்ளது. நன்றி தினகரன்
வலி வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 109 ஏக்கர் காணி விடுவிப்பு
- இராணுவத்திடமிருந்து 5 காணிகள்; கடற்படையிடமிருந்து 1
- நாளை 197 குடும்பங்களிடம் கையளிக்கப்படும்
- 9 முகாம்களில் தங்கியுள்ள 75 குடும்பங்களுக்கு 13 ஏக்கர் அரச காணி
- ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிக்கு அமைய நடவடிக்கை
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினர் வசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, நாளை (03) 197 குடும்பங்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இராணுவத்தினர் வசமிருந்த ஐந்து காணிகளும் கடற்படையினர் வசமிருந்த ஒரு காணியுமே இவ்வாறு மக்களிடம் கையளிக்கப்பட உள்ளன.
பெப்ரவரி 04ஆம் திகதி இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கிலுள்ள காணிகளை விடுவித்து அவற்றை உரிமையாளர்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பாதுகாப்புத் துறையின் முழு கண்காணிப்புடன் இந்த காணி விடுவிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதற்காக காணி உரிமையாளர்கள் வெளிப்படைத்தன்மையுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், யுத்தத்தினால் இடம்பெயர்ந்து தொடர்ந்தும் பருத்தித்துறையிலுள்ள 09 முகாம்களில் தங்கியுள்ள 75 குடும்பங்களுக்கு பலாலி வடக்கு பிரதேசத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான சுமார் 13 ஏக்கர் காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
இவ்வாறு விடுவிக்கப்படும் காணியில் அமைந்துள்ள நகர மண்டபம், அன்றைய தினமே வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை, மீளக்குடியமர்த்தப்படும் 197 குடும்பங்களுக்கு, மீள்குடியமர்வுக்கு அவசியமான உதவித் தொகையை உடனடியாக வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மீள்குடியேற்றத்துக்குப் பொறுப்பான நகரஅபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment