மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டில் முருகபூபதியின் பாரதி தரிசனம் நூல் வெளியீடு

 இம்மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  மகாகவி பாரதியார்


மறைந்து 101 வருடங்களாகின்றன.

இந்நினைவு நூற்றாண்டில் எழுத்தாளரும், ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி எழுதியிருக்கும் பாரதி தரிசனம் என்ற புதிய படைப்பு மின்னூலாக வெளியாகின்றது.

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு ஆரம்பமானது. அதனை முன்னிட்டு முருகபூபதி எழுதிவந்த பாரதி தரிசனம் தொடர் தற்போது மின்னூலாக கிண்டிலில் வெளியாகின்றது.

பன்னிரண்டு அங்கங்கள் கொண்டிருக்கும் இந்நூல் இம்மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை,  மெய்நிகரில் வெளியிடப்படவிருக்கிறது.

எழுத்தாளரும், ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்


நடப்பாண்டு தலைவருமான திருமதி சகுந்தலா கணநாதன் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்.

அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் இலக்கியவாதியும் சிட்னி தமிழ் பாடசாலைகளின் உயர்தர வகுப்பு ஆசிரியருமான  திரு. திருநந்தகுமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்த அரங்கில்,  பாரதியாரின் உடன்பிறந்த தங்கையின் கொள்ளுப்பேத்தி கவிஞர் உமா பாரதி,  கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி.யின் பேரன் திரு. கே. காளிராஜன் , புதுவை பல்கலைக்கழகத்தின்  வருகைதரு பேராசிரியர் முனைவர் அரிமளம். பத்மநாபன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் நூலாசிரியர் முருகபூபதி ஏற்புரை வழங்குவார்.  கலை, இலக்கியவாதிகளையும்   ஊடகவியலாளர்களையும்   பாரதி இயல் ஆய்வாளர்களையும் இந்த மெய் நிகர் அரங்கில் இணைந்துகொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்   அன்புடன் அழைக்கின்றனர்.

மெய்நிகர் இணைப்பு: 

Join Zoom Meeting

Meeting ID: 828 9342 4523
Passcode: 109438

 

No comments: