“அன்சாக்”விழாச் சிறக்க ஒற்றுமையாய் வாழ்த்துவமே! –


 



இயற்றியவர் -- பல்வைத்தியகலாநிதி  பாரதி இளமுருகனார்

 





ஒற்றாமன்வல்லரசை  எதிர்த்துப்  போரிட்டு

      ஒருவழியாய்க் கலப்பொலியைக் கைப்பற்றி அந்தோ

வெற்றிகொள்வோம் என்றுஆங்கி  லேயரொடு பிரஞ்சுப்  

      பெரும்படையும்  அவுஸ்திரேலிய  நியூசி  லாந்து

நற்பயிற்சி  பெற்றதொரு  படையுஞ் சேர்ந்து

      நாள்களாகப்  பெரும்போரை  இயற்றிய காலம்

கற்றிட்ட  வித்தையால்வெல்  வோமென் றிருக்கக்

     காலனவன்  தலையெழுத்தை  மாற்றி  னானே!

 

சிந்தனைசொல்  செயல்களிலே வீரம்  விஞ்சச்

     சிம்மமெனப்  போரிட்டோர்  பெற்றி  என்னே!

அந்தோ பரிதாபம் விதியின்சதி  தானோ?

      கலப்பொலியைக் கைப்பற்ற  விழைந்த  வேளை

வெந்துசாம்பல் ஆகினரே தியாகச்  சுடர்கள்!

     விரும்பியரசும்  அன்சாய்க்ஸ்'என அழைத்திட் டோரைச்

சிந்தையாலே  நினைவுகூரத்  தமிழ்க்கூட் டமைப்பும்

      திரண்டுசெயல்  ஆற்றுகின்றார்  வாழ்த்து  கின்றேன்!

 

 


 


 

 








ஆண்டாண்டாய்  ஏப்பிரலிரு பத்தைந்தாந்  தேதி

      "அன்சாக்ஸ்" வீரரைநினைந்து அவர்களன்று ஒன்றாய்ப்

 பூண்டுநின்ற  தியாகந்தனைப்  புகலரிய  பற்றைப்

     பொருதிநின்ற வீரந்தனைப் போதாக்கா லத்தாற்

கூண்டோடு கைலாயம் சென்றவர லாற்றைக்

     கூடியரசு நினைவுகொள்ளும் கோலாகல விழாவிலே

மாண்டவெண்ணா யிரம்வீரர் மாண்பையெண்ணி நாமும்

     மனதினால் நி னைவுகூர்ந்து அஞ்சலிசெய் திடுவோம்!

 

 

 

 

No comments: