மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
[ சுவை இருபத்து மூன்று ]
சுட்ட பழம் வேண்டுமா ? சுடாத பழம் வேண்டுமா ? என்று தமிழ்
மூதாட்டி ஒளவையாரிடம் முருகப்பெருமான் கேட்டு - ஒளவையி னையே சிந்திக்க வைத் தார் என்று வழமையாக ஒரு கதை வழங்கி வருவதை அனைவரும் அறிவோ ம். அது நாவற்பழம். நாம் இங்கே பார்க்க இருப்பது " பனம்பழம்." பனம்பழத் தைச் சுட்டும் சுவைக்கலாம். சுடாமலுமே சுவைக்கலாம். அந்தப் பனம்பழம் பற்றி முருகனிடம் மாட்டிக்கொண்ட ஒளைவைப் பாட்டி பாடியிருக்கிறார் என்றும் அறிகின்றோம்.
திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
பனம்பழத்தை விரும்பிக் கேட்ட மூவேந்தர்களுக்கும் உடனேயே பனம்பழம் கிடைக்கும் வண்ணம் ஒளைவைப்பாட்டி பாடிய பாடல்தான் இப்பாடல். ஒளை வையின் இப்பாடல் எங்கள் நவாலியூர் புலவரின் மனதிலும் பதிந்து விட்டது. அவர் பனையைப் பற்றி பல பாடல்களைப் பாடியிருக்கிறார். அவரின் கவித் துவத்தில் பனம்பழம் மட்டும் இடம் பெறாமல் போய்விடுமா ! அவரும் தன் கருத்தைப் பாட்டாக்கி வழங்குகின்றார்.
" திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும்
பனம்பழத்தை எங்கள் நவாலியூர் தங்கத்தமிழ்த்தாத்தா " தெய்வப் பனம்பழம்" என்று பெருமையுடன் சொல்லுவதைக் கருத்திருத்த வேண்டும். பனம்பழத்தை அந்தளவுக்கு சிறப்பான பழமாக அவர் எமக்கெல்லாம் காட்டுகின்றார்.
ஒளவைப் பாட்டியின் பாட்டினை உள்வாங்கி பனம்பழம் பற்றிய தன் னுடைய பார்வையினை எங்கள் தங்கத்தாத்தா காட்டியதைப் பார்த் தோம்.சங்க இலக்கியமான நற்றிணையும் பனம்பழத்தை விட்டு வை க்கவில்லை.நற்றிணை பனம் பழத்தை எப்படிப் பார்க்கிறது என்பதை நோக்குவோமா !
அழிதக்கன்றே தோழி கழி சேர்பு
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு
இனையல் என்னும் என்ப மனை இருந்து
அழகான கடற்கரை.அந்தக் கடற்கரையிலே அழகான ஒரு
சோ லை.அந்தச் சோலையிலே உயரமாய் ஒரு பனை மரம் இருக்கிறது. அந்தப் பனை மரத்திலே பனம்பழம் குலை குலையாக தொங்கிக் கொண்டிருக்கிறது.அப்படித் தொங்கிக் கொண்டிருக்கும் குலையில் பனம்பழம் கனியப் பழுத்திருக்கிறது. அந்தப் பனம்பழம் எப்படி இரு க்கிறது தெரியுமா " தேனுடை அழி பழம் " என்று காட்டப்படுவது தான் இங்கு முக்கியம். அதாவது தேன் போல இனிக்கும் பழமாக அங்கு " பனம்பழம் " காட்டப்படுகிறது. நற்றிணை என்பதே நல்ல காதல் இலக்கியமாகும். அங்கு வேறு பழத்தைக் காட்டாமல் பனம் பழத்தைக் காட்டுவது " கற்பகதருவுக்குக் கிடைத்த பெருமை அல்ல வா " !
தேன்போல் இனிக்கும் பனம்பழம் காம்பு மூக்கு அறுந்து பனை
மரத்துக்கு அருகிலே இருக்கின்ற நீர் நிறைந்த அந்தப் பகுதியில் விழுகிறதாம். அந்த நீர் நிலையில் அல்லிப்பூக்கள் நிறைந்து காண ப்படுகின்றன.அங்கே கொக்குகளும் நிறைந்து காணப்படுகின்றன. பனம்பழம் உயரத்திலிருந்து நீரினுள் விழும் பொழுது நன்றாகப் பழுத்திருந்த காரணத்தால் உடைகிறதாம்.பனம்பழம் விழுந்ததால் அல்லிப் பூக்களும் அதன் இலைகளும் நசுங்குகின்றன.பனம்பழம் விழுந்ததால் அங்கே இருந்த கொக்குகள் பறந்தோடிப் போகின்றன வாம். நன்றாகக் கனிந்த பழமாய் பனம்பழம் விழுந்ததால் அதன் மணமானது அந்த நீர் நிலையெங்கும் பரவி மணத்துக்கொண்டே இருந்ததாம் என்று நற்றிணைப் பாடல் நயமாகக் காட்டி நிற்கிறது. எங்கள் கற்பகதருவின் பனம்பழம் இலக்கியத்திலும் தன்னை நிலை நிறுத்தி நிற்கிறது என்பது கருத்திருத்த வேண்டிய முக்கிய விடயம் அல்லவா !
" காகம் இருக்கப் பனழ்பழம் விழுந்தது " என்னும்
பழமொழியினை யினையும் மறந்துதான் விட முடியுமா ? பனம்பழம் என்பது எங்களின் பண்பாட்டுப் பழம் என்றுதான் எண்ணிட வைக்கிறது. மூவேந்தர்களுமே வேறு எந்தப் பழத்தையும் ஒளைவையிடம் திரு மணப் பந்தலில் கேட் காமல் , பனம்பழம்தான் வேண்டும் என்று கேட்டார்கள் என்றால் அக் காலத்திலே பனம்பழம் எத்தகைய இடத்தைப் பெற்றிருக்கிறது என் பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
தென்னையும் காய்க்கிறது. அதன் காயினை தேங்காய் என்று அழை க்கிறோம். தென்னையின் காய் காயாகவேதான் கடைசிவரை இருக் கிறது. காயாக இருக்கும் தென்னையின்
காயானது நன்றாக முற்றிய நிலையில் அதனைப் பழுத்தேங்காய் என்று அழைக்கும் வழக்கமும் இருக்கிறது.ஆனால் அதனை " தேங்காய்ப்பழம் " என்று மட்டும் அழைப்பதேயில்லை.பழுத்த என்னும் பதம் மட்டுமே தேங்காயுடன் இணைந்து பழத்தேங்காய் ஆகி நிற்கிறது. ஆனால் பனங்காய் என்று ஒரு பருவம் இருக்கிறது. அந்தப் பனங்காய் முற்றிய நிலை யில் அது பழமாகி " பனம்பழம் " என்னும் பெயரினைத் தனக்குரித்தாக்கிக் கொண்டு விடுகிறது. இந்த நிலை தென்னைக்கு இல்லை என்பதுதான் முக்கி யம். பனையுடன் சவால் விடுவதற்கு தென்னை எப்பொழுதும் தயாராகவே இருந்தாலும், முடிவில் பனைதான் வெற்றிப் படியில் முன்னிற்கிறது.அப்படி இருந்தாலும் பனை அமைதியாய் தனது பங்களிப்பை எந்தவித ஆரவாரமுமி ன்றி ஆற்றிய படியேதான் இருக்கிறது.பழத் தேங்காய் என்று அழைத்தாலும் அது பழம் அல்ல. பனம்பழம் என்று அழைக்கும் பொழுது அது பழமாகாவே இருக்கிறது. பழத்தேங்காய் எனும் பொழுது அங்கே பழத்தின் பெயர் மட்டுமே இரு க்கிறதே அன்றி பழத்துக்கான எந்த அடையாளமுமே இல்லை என் பதுதான் முக்கியம். வெறும் பெயராக இருக்கும் பழத்தேங்காய் பன ம்பழத்தின் முன் தலைகுனிந்தே நின்றுவிடுகிறது. பனம்பழமோ மண மாயும் சுவையாயும் மக்களின் மனங்களில் நிறைந்துபோய் அமர்ந்தே விடுகிறது.இது பனைக்குக் கிடைத்த பெருவரமென்றே எடுத்துக் கொள்ளலாம் அல்லவா !
" தொப்பென்று விழுந்தான் தொப்பி கழன்றான் " என்று விடுகதை சொல்லி மகிழுவது எதைத் தெரியுமா ? அது பனம்பழத்தைத்தான். இந்த விடுகதை யினை சின்னவயதில் சொல்லி அதற்கான விடையினைத் தேடுவதில் நாங்கள் முனைந்திருந்தோம் என்பது நினைவுக்கு வருகிற தல்லவா ! அந்த அளவுக்கு பனம்பழம் மனதில் பதிந்தே இருந்து வந்தி ருக்கிறது. பனம்பழக் காலமென்பது ஆவணிமாதம் தொடக்கம் ஐப்பசி மாதம் வரையில் அமைகிறது.பனம்பழத்தை
" தேம்படு பனையின் திரள் பழம் " என்று சங்க இலக்கியமே
சுவைத்து நிற் கிறது.இனிமை பொருந்தி இருக்கின்ற காரணத்தாலேயே பனம்பழம் இவ்வாறு வியந்து அழைக்கப்பட்டது என்பதும் நோக்கத்தது.நுங்கானது முற்றும் பொழுது அது சீக்காய் ஆகிறது.அச்சீக்காய் முற்றிய நிலையி ல்த்தான் பனம்பழம் ஆக வருகிறது.பனம்பழங்கள் ஒவ்வொன்றுமே கிட் டத்தட்ட ஆறு அங்குலம் தொடக்கம் எட்டு அங்குல விட்டமுள்ளதாக வும் , குலைகளாகவும் பனையில் காணப்படுகிறது.பனம்பழம் நார்த்த ன்மை மிக்கதாக இருக்கிறது.பழமென்று பெயர் பெற்றாலும் பனம் பழ த்தின் மேற்றோல் கறுப்பு நிறமாகவே காட்சிதருகின்றது. இது இயற் கையின் நியதி என்றுதான் எண்ணிட வேண்டி இருக்கிறது.
பழமாக இருந்தாலும் கறுப்பையே தனக்கு உரித்த்தாக்கி நிற்கிறது பனம்பழம்.பனபழத்தில் அமைந்திருக்கும் விதைகளின் தன்மையினைப் பொறுத்து அவை சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவதும் நோக்கத்தக் கது. ஒரு விதையை விட , இருவிதைகள் இருப்பதை இருக்காலிப் பழம் என்றும் மூன்று விதைகள் இருப்பதை முக்காலிப்பழம் என்றும் அழைக் கப்பட்டு வருகிறது.அரிதாக சில வேளைகளில் நான்கு விதைகள் வந்து விடுவது உண்டு. ஏழுகண்கள் கொண்ட நுங்குகள் அமைவதுபோல் என்று எடுத்துக் கொள்ளலாம்.. நான்கு விதைகளைகள் அமையும் பொழுது அது நான்காலிப்பழம் என்று அழைக்கப்படுகிறது. தென்னை யில் ஆண், பெண் என்று வகை இல்லை. ஆனால் பனையானது ஆண் , பெண் என்று வகையாகி இருக்கிறது. பெண் பனைமட்டுமே பனம் பழத்தைக் கொடுக்கும் நிலையில் இருக்கிறது என்பதுதான் முக்கிய மானது. பனம்பழமானது சாதாரணமாக அறுநூறு கிராம் தொடக்கம் ஒரு கிலோ வரை நிறையுடையதாக இருக்கும்.பனம்பழம் என்னும் பொழுது அதனைச் சாதாரணமாக எண்ணக் கூடாது. நிலத்தின் தன்மைக்கும் நிலத்தடி நீரின் தன்மைக்கும் ஏற்ப பனம் பழங்களின் நிறத்திலும் , சுவையிலும் கூட வேறுபாடுகள் அமைவதாக அறிய முடிகிறது.உதாரணமாக இலங்கையில் யாழ்ப்பாணம், மன்னார், கற்பிட்
நிலம் , நீர் , இவற்றினை மையமாகக் கொண்டு பனம்பழங்களின் தன் மைகள் வேறுபடுகின்றன என்று பார்த்தோம். அப்படி வேறுபடும் நிலை யில் பனம் பழங்களின் சுவையின் அடைப்படையில் எங்கள் முன் னோ ர் சிறப்பான பெயர்களையும் வழங்கியிருக்கிறார்கள்.தோரை, பரு
சுவையினைப் பொறுத்து பனைக்குப். பெயரிட்ட எங்கள் முன்னோரின் திறனை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.பூமணத்தி வகையானது மலர்போல வாசனை மிக்கதாக இருக்கும். தேனி என்னும் வகையானது தேன் போன்று இனிமை தருவதாக இருக்கும். காறலி என்னும் பொழுது அங்கு காறற் சுவையே வந்து அமையும். இப்படியாகச் சுவையினை மையப்படுத்தியமையினை தொழில் நுட்பம் என்றுதானே எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.சுவைமிக்க பனம்பழம் விழும் காலங்களில் அதி காலையிலே எழுந்து பனம்பழத்தைப் பொறுக்குவதற்கு ஓடுவதும் அதனைப் பொறுக்குவதும் கூட ஒரு சுகமாகவும் , அதேவேளை அதே ஒரு பெரும் போட்டியாகவும் இருந்ததையெல்லாம் நினைவில் கொண் டுவந்து பாருங்கள். பனம்பழம் பொறுக்கும் சுவையான காலத்தில் - பொறுக்கும். போட்டியினால் கலகங்களும் ஏற்பட்டிருக்கின்றன என்றும் அறிய முடிகிறது. இப்படிக் கலகங்கள் ஏற்பட்டதையும் சுப்பையனார் என்பவர் பாட்டாகவே பாடிவிட்டார். சுப்பையர் என்பவர் கனகி புராணம் என்னும் ஒரு புராணத்தைப் பாடினார். அதில் பனம்பழத்தால் விளைந்த சண்டையினை எவ்வாறு காட்டுகிறார் பாருங்கள்..
“ தாலக்கனி யொன்றினுக்காகத் தரைமேல்
பனம்பழம் பொறுக்குவதில் ஏற்பட்ட சண்டையினை சுப்பையர் என்பவர் காட்ட , பனம்பழத்தை சமாதனமாகப் பொறுக்கி அதனை எப்படிச் சுவை த்து மகிழ்ந்தார்கள் என்பதை கிருஷ்ண பிள்ளை என்னும் இன்னொரு வர் எப்படிக் காட்டி நிற்கிறார் பாருங்கள்.
" நாட்டில். வாழும் பலர் கூடிப் பழம்
No comments:
Post a Comment