முகேஷ் அம்பானியின் மாதாந்த வருமானம்

 Sunday, July 3, 2022 - 12:10pm

பணம் பணத்தோடுதான் சேரும் என்பார்கள். அதேபோலத்தான் கோடீஸ்வரர்கள் மேலும் கோடீஸ்வரர் ஆகிக் கொண்டே செல்கிறார்கள். ஏழைகள் மேலும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதனை கடந்த கொரோனா காலத்திலேயே காண முடிந்தது. சாமானிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்து, அடிப்படை தேவைகளுக்கே கூட கஷ்டப்பட்டனர். ஆனால் இந்த காலகட்டத்திலும் பில்லியனர்கள் சொத்து பெரும் ஏற்றம் கண்டதாக கடந்த ஆண்டு ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக் காட்டியது.

பில்லியனர்கள் பல்வேறு காரணங்களுக்கு மத்தியில் பில்லியனர்களாகவே வாழ்கின்றனர். அவர்களின் வீடு, பயன்படுத்தும் கார்கள் என எல்லாமோ சொகுசாக இருக்கும். ஆனால் மற்றவர்களோ பழைய வண்டியினை டயரை கூட மாற்ற முடியாமல் பேருந்தில் செல்ல வேண்டிய நிலை. இந்த ஏற்றத்தாழ்வுகள் குறையவே குறையாதா? எப்படி பணக்காரர்கள் மட்டும் சம்பாதிக்கிறார்கள். எப்போது என என்றேனும் யோசித்திருக்கிறீர்களா?

நாம் முதலில் பார்க்கவிருப்பது மார்க் ஜுக்கர்பெர்க். பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான இவரின் சம்பளம் 1 டொலராகும். எனினும் பன்முகப்படுத்தப்பட்ட பங்குகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் அவரின் ஒரு மாத வருமான, 74.6 பில்லியன் டொலராகும்.

பங்குச் சந்தையின் தந்தை என்று உலகம் முழுக்க அறியப்படும் வாரன் பஃபெட், பங்கு சந்தை முதலீட்டில் பிரபலமானவர். முதலீட்டாளர் என்பதோடு மட்டும் அல்ல, சிறந்த தொழிலதிபர். பல புத்தகங்களை எழுதியவர். இப்படி பன்முகத்தன்மை கொண்ட இவரின் மாத வருமானம் எண்ணிக்கையற்றது.

சர்வதேச ஈ-கொமர்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஜெஃப் பெசோஸ், அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலதிராவர். ஊடக உரிமையாளர் ஆவார். அதோடு சர்வதேச அளவில் முதலீடு செய்யும் மிகப்பெரிய முதலீட்டாளர் ஆவார். ஜெப் பெசோஸ் ப்ளூ ஆரிஜின் மற்றும் ஒரு விண்வெளி நிறுவனம் மற்றும் வாஷிங்டன் போஸ்டினையும் வைத்துள்ளார். இவரின் மாத வருமான 6.54 பில்லியன் டொலர்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில்கேட்ஸ், மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். எம்.எஸ்-வின்டோஸ் என்னும் இயங்குதள அமைப்பானது இந்த நிறுவனத்தின் மிக வெற்றிகரமான மென்பொருளாகும். இவரின் மாத வருமானம் 330 டொலர்.

இந்தியாவின் பிரபல தொழிலதிபதிரான குமார் மங்கலம் பிர்லா, ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவராவர். இவரின் நிறுவனம் தற்போது சர்வதேச அளவில் 36 நாடுகளில் தனது வணிகத்தினை செய்து வருகின்றது. இவரின் மாத வருமானம் சுமார் 250 கோடி ரூபா.

இந்தியாவின் மருத்துவத் துறையின் முன்னணி தொழிலதிபதிரான சைரஸ் பூன்வல்லா, சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைவராவர். கொரோனாவின் வருகைக்கு பிறகு இவரின் வருவாய் இன்னும் கணிசமாக உயர்ந்துள்ளது எனலாம். இவரின் மாத வருமானம் சுமார் 2000 கோடி ரூபாய்க்கு மேல்.

இந்தியாவின் வளர்ந்து வரும் மிகப்பெரிய தொழிலதிபரான கெளதம் அதானி, பல்வேறு வணிகங்களை செய்து வருகின்றார். இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஓருவரான அதானி, அதானி குழுமத்தின் தலைவராவர். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் ரியல் டைம் பில்லியனர் பட்டியலின்படி, 5வது மிகப்பெரிய பில்லியனர் ஆவார். இவரின் மாத வருமானம் சுமார் 15,000 கோடி ரூபா.

ஆசியாவின் முதல் பணக்காரரும், இந்தியாவின் சிறந்த தொழிலதிபரான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராவர். தற்போது தனது வணிகத்தினை தனது வாரிசுகள் கைக்கு மாற்ற தொடங்கியுள்ள நிலையில் முகேஷ் அம்பானியின் மாத வருமா னம் சுமார் 4000 கோடி ரூபா.    நன்றி தினகரன் 

No comments: