அவர்பிரிவால் ஆன்மீகம் அறிவுலகம் அழுகிறதே !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  மேனாள் தமிழ்மொழிக்கல்வி இயக்குநர்

 மெல்பேண் ... அவுஸ்திரேலியா  


  

 ஆன்மீகம் தளைப்பதற்கு அறவுரைகள் வழங்கிநின்றார்


  
ஆங்கிலமும் சங்கதமும் அருந்தமிழும் பிணைத்துநின்றார் 
  
மேன்மைமிகு  கீதையொடு மிகச்சிறந்த வள்ளுவத்தை 
  
ஆதாரமாய் கொண்டார் அரனடியைச் சரண்புகுந்தார்  

  
வேதபுரி தேர்ந்தெடுத்து தாமமர்ந்தார் சுவாமிகளும் 
  
நாதமுடை ஓம்காரம் நற்பெயராய் ஆக்கிநின்றார் 
  
பூதலத்தில் பொய்யகல வாய்மைநிறை வள்ளுவத்தை
  
ஓதிநின்றார் காதலுடன் உரைத்திட்டார் உணர்வுடனே 

  
அறமதனை அகமிருத்தி அவர்பணிகள் ஆற்றினரே


  
சகமனிதர் நலன்காக்கும் சன்மார்க்கம் காத்தனரே 
  
பலகருத்தைப் பக்குவாய் பகர்ந்தாரே பலவிடங்கள்
  
பத்திரமாய் இருப்பதற்கும் கொடுத்தாரே எழுத்துருவில

 உலகமக்கள் உய்வதற்கு ஓம்காராநந்தா சுவாமிகள் 

 பலவழிகள் தேர்ந்தெடுத்து பக்குவமாய் பயணப்பட்டார் 
நிலவுலகில் ஓம்காரானந்தா நிமலனையே நினைத்தாரே
அவர்பணியை ஏற்பதற்கு ஆசைகொண்டான் நிமலவன் 

தலைகனத்து நில்லாமல் தாழ்மையுடன் அவரிருந்தார்

உலகிடையே ஒட்டாமல் உள்ளமதைக் கொண்டிருந்தார்
தவவுலகில் அவர்புகுந்து சன்மார்க்கம் நெறிநின்றார்
அவர்பிரிவால் ஆன்மீகம் அறிவுலகம் அழுகிறதே 

 வழிநடந்த பக்தரெலாம் வடிக்கின்றார் கண்ணீரை

 வழிவந்த சீடர்களும் வாட்டமுடன் நிற்கின்றார்
அவருரைகள் அகிலத்தில் அனைவர்க்கும் ஆறுதலே 
அவர்பிரிவை மனமெண்ணி அல்லற்பட்டு அழுகிறது 

No comments: