கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை இருபத்தொன்று ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

     இலங்கையில் பனைவளம் சிறப்பாகவே இருக்கிறது.


இலங்கையில் இருக் கும் பனையைவிட இந்தியா வில் காணப்படும் பனையின் பெருக்கம் மிகவும் அதிகம் என்றுதான் 
சொல்லலாம்.   இலட் சக்கண க்கில் இலங்கையில் பனை இருக்க  , இந்தியாவிலோ கோடிக்கணக் கில் இருக்கிறது பனை என்பது மிகவும் முக்கியமாகும்.இந்தியா எங் கணும் இருகின்ற பனைகளை ஒன்பது கோடி என்று கணக்கிட்டிருக் கிறார் கள். அப்படி இருக்கும் பனைகளில்  ஐந்து கோடிப் பனைமர ங்கள் தமிழ் நாட்டிலே இருக்கின்றன என்பது மிகவும் முக்கிய மான செய்தியாகும்.

    வட தமிழ்நாட்டில் வேலூர்ராணிப்பேட்டை,  திருப்பத்தூர்திருவண்ணாமலை,   தருமபுரி,   கிருஷ்ண கிரி,    மாவடங்களிலும் - தென் தமிழ் நாட்டில் ராமநாதபுரம்,   சிவகங்கை,   விருதுநகர்,   நெல்லை,   தேனீமற்றும் திண்டுக்கல்   மாவட்ட ங் களிலும் பனைமரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

    பனையிலிருந்து கிடைக்கும் சுவையான நுங்கினைத் தொட்டுப்


பார்த்தோம். அந்த நுங்கானது இந்தி யாவில் வியாபாரத்திலும் இடம் பெற்று நிற்கிறது. இலங்கையில் யாவரும் நுங்கினை மிகவும் விருப்பத்
 துடன் சுவைத்தாலும் வியாபாரம் என்னும் நிலைக்கு வரவில்லை என்றுதான் எண்ண வேண்டி இருக்கி றது.விலை கொடுத்து நுங்கினைச் சுவைக்கும் நிலை இலங்கையில் இல்லை என்றுதான் சொல்லலாம்.

    பனை நுங்கின் காலமானது வைகாசி தொடங்கி ஆடி  மாதம் வரை இருக்கி றது. இந்தக் காலத்தில் பனை நுங்கு வியாபாரம் இந்தியாவில் களை கட்டத் தொடங்குகிறது.பனை நுங்கின் வியாபாரத்தால் பல தொழிலாளர்கள் பயன் அடைகின்றார்கள்.இந்த வியாபாரத்தை நம்பி நேரிடையாகவும்,  மறை முக மா கவும் பல இலட்சம் பேர் இருக்கிறார்கள் என்று அறியமுடிகிறது.பனைகளை


வைத்திருப்பவரிடம் நுங்குக்காக பனைகளைக் குறிப்பிட்ட காலத்துக்கு வியா
 பாரிகள் வாங்குகின்றார்கள். இப்படி வாங்குப வர்களில் பெரிய வியாபரிகளும் இருப்பார்கள். சிறிய வியாபாரிகளும் இருப்பார்கள். இவர்களுக் கெல் லாம் நுங்கை பனையிலிருந்து இறக்கிக் கொடுப்பதற்கு தொழிலாளர்களும் இருப்பார்கள்.  இறக்கிய நுங்கை எடுத்துச் செல்ல மாட்டு வட்டிகள் பயனாகின்றன. மோட்டார் வாகனங்களும் பயனாகி நிற்கி ன்றன.வெட்டிய நுங்கினை வாகனங்களில் ஏற்றுவதற்கும் பலர் தேவைப்படுகிறார்கள்.இந்தவகையில் பனை நுங்கினை மையப்படுத் தி பலரும் தொழில் வாய்ப்பினையும்வருமானத்தையும் பெறக்கூடி யதாக இருக்கிறது என்பது மனங் கொள்ளத்தக்கதாகும்.

    கோடை காலத்தில் பனை நுங்கின் வியாபாரம் களைகட்டத்


தொட
 ங்கி விடும். தெரு ஓரங்களில் பனை நுங்கினைக் குவித்து வைத்திருப்பர். பிரயா ணம் செய்யும் பாதைகளில் இப்படியான பனை நுங்குக் குவியலைக் காண லாம். வண்டியில் செல்லுபவர்கள் வண்டியை நிறுத்தி நுங்கினை வாங்கிச் சுவைத்து மகிழ்வார்கள்.அவர்கள் சுவைத்தால் அதனால் பல தொழிலாளர் பயனை அடைகிறார்கள் என்பது தான் முக்கியமானது. போவோர் வருவோர் வாங்கி சுவைப்பார்கள் என்னும் நம்பிக்கையால் நுங்கினை விற்பவர்கள் தெரு ஓரங்களில் காத்துக்கிடப்பார்கள்.

     ஆண்டுக்கு ஒருமுறைதான் நுங்கினைச் சுவைத்து இன்புறலாம். தமிழ் நாட்டு மக்கள்மட்டும் நுங்கினை சுவைத்து இன்புறவில்லை. கர்நாடக மாநி லம்மைசூர்,   பெங்களூர்தாவண்கெரே,   கோலார்முல் பாகல்,  மாண்டியா,  ராம்நகர் பகுதி மக்களூம் - ஆந்திர மாநில


மக்களும் நுங்கினை மிகவும் விருப்பத்துடன் சுவைத்து மகிழுகிறார்கள் என்பது நோக்கத்தக்கது.

    கோடை என்றதும் எல்லோருக்கும் மனதில் ஒருவித அச்சம். காரணம் வெப்பத்தின் கொடுமை என லாம். அது மட்டுமல்ல . கோடையில் பல வியா திகளும் வந்து சேர்ந்துவிடுகின்றன. அம்மை நோய்கள் வருகின்ற நிலை பெருதும் இக்காலத்தில்  காணப்படுகிறது,நுங்குக்கும் இதற்கும் என்னதான் சம்பந்தம் என்று எண்ணிடத் தோன்றுகிறதல்லவா !

    சுவைத்துச் சாப்பிடத்தான் நுங்கு என்று எண்ணிவிடக் கூடாது. சுவைத்துச் சாப்பிட இருக்கும் நுங்கில் பல மகத்துவங்களும் பொதிந்து கிடக்கின்றன என்பதுதான் இங்கு முக்கியமாகும். பனையின் நுங்குதானே என்றெண்ணிச் சாதாரணமாய்க் கருதிவிடல் பொருத்தமற்றதாகும்.கோடை காலம் வந்ததும் எமது


உடம்பில் இருக்கின்ற நீரினது அளவு விரைவாகவே குறைந்து விடுகி
 றது. இப்படி வரும்பொழுது நாங்கள் சோர்வடையும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இப்படியான வேளையில் நுங்கு எமக்குக் கைகொடுத்து நிற்கிறது. உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து நுங்கில் அதிகளவில் காணப்படுகிறது.உடலில் கனிமச் சத்து பேணப்படுவது மிகவும் முக்கியமானது. அதற்கும் நுங்கு கைகொடுக் கிறது,இன்று பலருக்கும் காணப்படும் பிரச்சினையே சர்க்கரை அளவு அதிகரி த்துக் காணப்படுவதேயாகும். நுங்கு சர்க்கரையின் அளவினை சீராக வைத்திரு க்கவும் உதவிநிற்கிறது. வைட்டமின் பி சியும் இருக்கிறது. அதுமட்டு மல்ல இரும்புச்சத்து,   கல்சியம்,   பொட்டாசியம் ,   மங்கனீசியம்  துத்தநாகம்தயமின்அஸ்கார்பிக் அமிலம் புரதம் போன்ற சத்துக்களையும் நுங்கு தன்னுள் வைத்திருக் கிறது என்பது கருத்திருத்த வேண்டிய விடயமாகும்.

   கோடையின் கொடையாகச் சின்னம்மை வந்தால் அதனால்


ஏற்படும் உடல் உபாதைகளை அகற்று வதற்கு நுங்கு வந்து துணையாகி நிற்கிறது.
 சின்னம் மையினால் உடலில் அரிப்புகள் ஏற்படும்.அதனைத் தடுப்பதற்கு நுங்கு உதவி நிற்கிறது.சின்னம்மை நோயினை வராமல் தடுப்பதற்கும் வந்தபின்னர் விரை வாக மாறுவதற்கும் நுங்கு கைகொடுத்தே நிற்கிறது.கர்ப்பிணிப் பெண்களுக் கும் பயனளிக்கும் ஒன்றாக நுங்கு விளங்குகிறது. கருவுற்ற பெண்களுக்கு வயிற்றில் குழந்தை வளருகின்ற பொழுது உண்ணும் உணவில்  செரிமானச் சிக்கல்நெஞ்செரிச்சல்மலச்சிக்கல் வாயுத்தொல்லைஏற்படும். இவற்றை யெல்லாம் தீர்ப்பதற்கு நுங்கு துணையாக நிற்கிறது,

      நுங்கு என்பது சுவையோடு எமக்கான உடற்சுகத்துக்கும் ஆதாரமாகவே இருக்கிறது.இதனை நம்பில் பலரும் அறியாமலே இருக்கிறார்கள். நுங்கு தரும் பயன்களை அறிந்தால் அதனைச்


சாதாரணமாகப் பார்க்கவே மாட்டோம்.
 கோடையின் வெம்மையினாலும் அதிக நேரம் கண்விழித்து இருப்பதனாலும் - கண்களில் எரிச்சலும் கண்களில் வலியும் ஏற்படுகிறது.இப்படியான நிலை மைகள் யாருக்கு ஏற்பட்டா லும் அவர்கள் நுங்கினைத் தினமும் காலையிலே சாப்பிட்டுவந்தால் அவர்களின் கண்களில் காணப் படும் நோய்கள் அகன்றே போய்விடும். அதுமட்டுமல்ல நுங்கினைச் சாப்பிடுவதால் கண்களின் பார்வை யும் சீராகிறது என்று அறிந்திட முடிகிறது.

   இன்று சர்க்கரை வியாதி பலருக்கும் உள்ளதுபோல் உடல் பருமனாவதும் ஒரு வித வியாதியாகவே இருக்கிறது. உடல் பருமன் ஆகிவிட்டால் அதனால் அழகும் கெட்டுவிடும். ஆரோக்கியமும் கெட்டு விடும். அதனால் யாவரும் பருமனாகாது உடலைப் பாதுகாத்திடப் பல வழிகளை நாடித் தேடி ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். ஓடுபவர்களே நில்லுங்கள் ! உங்கள் உடலெட யி னைக் குறைக்க அருமை யான வழி இருக்கிறது ! அது


வேறு ஒன்றுமல்ல ! நுங்கினைச் சாப்பிடுங்கள் . உடற்பருமன் தானாகவே ஓடி விடும். அதிகமாய் ஏற்படும் பசியினை நுங்கு தடைசெய்கிறது. நுங்கினைச் சாப்பிடுவதால் உட
 லின் நீர் சுரப்பு அதிகரிக்கிறது. இப்படி நீர்ச்சுரப்பு அதிகரிப்பதால் உடலின் எடையானது குறைவதற்கு வாய்ப்பாக இருக்கிறது,உடல் எடை ஆணுக்கும் வருகிறதுபெண்ணுக்கும் வருகிறது. பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு பொல்லாத வியாதிதான் மார்பகப் புற்றுநோயாகும் இயற்கை உணவுகளை எடுப்பதால் இந்த நோயினைத் தடுக்கலாம் என்று அறிகிறோம்.

   இயற்கை உணவென்னும் பொழுது நுங்கும் அங்கு வந்து அமைகிறது. நுங்கில் காணப்படும் ஆந்தோசனியம் என்னும் வேதிப் பொருளானது புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு பெருமளவில் உதவி நிற்கிறது என்பது கருத் திருத்த வேண்டிய விடயமெனலாம். நுங்கினை மூடி ஒரு தோல் இருக்கும். அத் தோலுடன் நுங்கினைச் சுவைக்கும் பொழுது துவர்ச்புச்சுவை ஏற்படும். துவர்ப்புச் சுவையினை அளிக்கும் நுங்கின் தோல் மிகவும் முக்கியமான பகுதி யாகும். அந்தப் பகுதியில்த்தான் பல உயிர்ச்சத்துகள் இருக்கின்றன என்பது முக்கியமாகும்.                                                                                                              நுங்கில் மூன்று


பகுதிகள் இருக்கின்றன.நுங்கிலே காணப்படுகின்ற தசை
நுங்கிலே காணப்படும் மேற்றோல்நுங்கிலே இருக்கின்ற நீர். அத்த னையும் எமது ஆரோக்கியத்துக்கு அருந்துணையாக இருக்கிறது என்பதை அகமிருத்துவது மிகவும் அவசியமாகும். நகரத்தில் நாகரிகம் நிறைந்திருக் கிறது. கிராமங்கள் அந்தளவு நவநாகரிகத்தைத் தொடவில்லை என்றுதான் சொல்லலாம். ஆனால் கிராமத் தின் மண்வாசனையை நகரத்தில் நுகரவே முடியாது. நகரத்தாரின் வாழ்க்கை முறை வேறு. அவர்கள் கிராமத்தின் உயிர் த்துடி ப்பை உணர்ந்தால் நல்ல ஆரோக்கியத்தை அணைத்துக்கொள்ள முடியும் என் னும் கருத்தும்  இருக் கிறது என்பது குறிப்பிடப் படவேண்டியதேயாகும். அந்த வகையில் நுங்கினையும் நகரத்தார் நினைத்துப் பார்ப்பது சிறப்பாக இருக் கும்.                                                                                                                                                               விருந்தாயும் மருந்தாயும் நுங்கு விளங்குகிறது. வெய்யில்

காலங்களில் பலருக்கும் மேலில் ஒருவித பருக்கள் வருவது உண்டு. இந்தப் பருக்கள் வந்தால் மேலெல்லாம் ஒரே அரிப்பு ஏற்படும். எந்த நேரமும் கையினைக் கொண்டு சொறிந்தபடி இருக்கும் நிலை ஏற்பட்டுவிடும். சொறிந்து கொண்டே இருப்பதற்கு காரணமாக வருவதுதான் " வியர்க்குரு " என்னும் ஒன்றாகும் . மேலெல்லாம் இந்த வகையான வியர்க்குரு வந்தால் அது பெரிய பிரச்சி னையாகவே மாறிவிடும். இப்படியான வியர்க்குருவின் பிடியிலிருந்து விலகு வதற்கு நுங்கின் இனிப்பாய் இருக்கும் நீர் கைகொடுக்கிறது என்பதை நம்மில் பல பேருக்கும் தெரியாது. அந்த இனிப்பான நீரை வியர்க்குருவில் தடவினால் தோலில் ஏற்படும் எரிச்சல் பறந்தோடியோ போய்விடும்.வியர்க்குருவும் காணா மலே போய்விடும்.

   ஞாபக சக்தியென்பதுதான் எமக்குக் கிடைத்த நல்ல வரமாகும். அந்த ஞாபசக்தியை அதிகரிக்க நுங்கு துணையாக வந்து நிற்கிறது.பெரியவர்களுக்கு மட்டுமல்லாது சிறியவர்களுக்கும் நுங்கு துணையாகி நிற்கிறது.சிறியவர்கள் நுங்கினை மிகவும் விருப்பத்துடன் சுவைத்து மகிழுவார்கள். அப்படிச் சுவைத்து மகிழும் சிறுவர்களுக்கு வருகின்ற வயிற்றுக்கடுப்பு மலச்சிக்கல்,  மூலச் சூடுவயிற்றுவாயு ஆகிய நோய்களை அகற்றுவதற்கு அவர்கள் சுவைக்கும் நுங்கே மருந்தாகவும் அமைகிறது.நுங்கின் மேல் காணப்படும் தோலினை அரைத்து இந்தவிதமான நோய்களுக்கான மருந்தாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது கருத்திருத்த வேண்டிய விடயமெனலாம்.



                                 சின்ன சின்ன நுங்கு
                                 செங் கரும்பு நுங்கு 
                                 தின்னத் தின்ன இனிக்கும்
                                 திகட் டாத நுங்கு
                               
                                  தாகம் தீர்க்கும் நுங்கு
                                  தண்ணீர் போல நுங்கு
                   தேகச் சூடு நீங்கச்
                                  செய்யும் சின்ன நுங்கு

                                  நுங்கை வெட்டித் தின்றேன்
                                  நுங்கு வண்டி செய்தேன் 
                                  நுங்கு வண்டி செய்தே
                                  நுட்பம் ஒன்றைக் கண்டேன்

 

                    நீர்வரா வியக்குருவை நீக்குமன லாக்குந்தோற்
                    சார்வா  மயஞ்சீதந்  தானொழிக்குஞ்  - சேர்வார்
                    விழிக்கரையாந் துள்ளிக்கு மென்சுரத மானே
                    கழிக்கரையாந் தாளியிளங் காய்.


No comments: