போர் தின்ற எழுத்தாளர் நெல்லை க.பேரன் 75 நினைவுகளில்

 ஈழத்தில் ஒரு எழுத்தாளர் குடும்பமே ஒன்றாகப் படுகொலை


செய்யப்பட்டது என்ற அழியா வடு கொண்டது எழுத்தாளர் நெல்லை க.பேரனின் வாழ்க்கையில் தான்.


அது நடந்தது ஜூலை 15, 1991 இல்.
எழுத்தாளரும், பத்திரிகையாளருமான நெல்லை க.பேரன், அவரின் மனைவி உமாதேவி, மகன் உமா சங்கர், மகள் சர்மிளா என்று அந்த ஒட்டுமொத்தக் குடும்பமே அந்த ஜூலை 15 இரவில் இலங்கை இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டுப் படுகொலையானதைப் படித்தது இன்றும் நினைவில் தங்கி ஈரக்குலையை வருத்தும்.

காரணம், அதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் என்னுடைய லைப்ரறி சேர்
"இந்தாரும் பிரபா! எந்த நேரமும் செங்கை ஆழியனைத் தேடாதையும்
இவரையும் படியும் என்று எடுத்துத் தந்த புதுப் புத்தகம் தான்
நெல்லை பேரனின் 'சத்தியங்கள்' என்ற சிறுகதைத் தொகுதி. எமது கொக்குவில் இந்து நூலகத்துக்குப் புதிதாக வந்திருக்கிறது என்பதை அந்த வாசனையே காட்டிக் கொடுத்தது.
எனக்கு அந்தப் புது எழுத்தும் பிடித்துப் போய் ஒரே மூச்சில் வாசித்து விட்டு லைப்ரறி சேருக்கும் நன்றி சொன்னேன் அப்போது.

இன்றைய நாள் டிசெம்பர் 18, நெல்லை க.பேரன் இருந்திருந்தால் அவருக்கு 75 வது பிறந்த தினத்தைக் கொண்டாடியிருப்பார் தன் குடும்பம் சூழ.

நெல்லை க.பேரனின் 'சத்தியங்கள்" சிறுகதைத் தொகுதியைப் படிக்க

நன்றி :
நூலகம் - ஈழநாடு, முரசொலி மற்றும் சிறுகதை ஆவணப்பகிர்வு
சிவவதனி பிரபாகரன் - நெல்லை க.பேரன் குடும்பப் படம்
2014 இல் முருகபூபதி நெல்லை க. பேரன் பற்றி எழுதிய பதிவு.


http://www.tamilmurasuaustralia.com/2014/04/blog-post_2209.html








No comments: