அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு


அவுஸ்திரேலியாவில் கடந்த பல வருடங்களாக கலை, இலக்கியப் பணிகளையும் எழுத்தாளர் விழாக்களையும் முன்னெடுத்துவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிருவாகிகள் தெரிவும் கடந்த 12 ஆம் திகதி மெய்நிகரில் நடைபெற்றது.

சங்கத்தின்  தலைவர் மருத்துவர் ( திருமதி ) வஜ்னா இரஃபீக் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், செயலாளர் கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர் ஆண்டறிக்கையையும் துணை நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதி நிதியறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து நடப்பாண்டுக்கான புதிய நிருவாகிகள் தெரிவு


நடைபெற்றது. திரு. எஸ். கிருஷ்ணமூர்த்தி,  பதவிகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பெயர்களை வாசித்தார்.

அதன்பிரகாரம் பின்வருவோர் ஏகமனதாக தெரிவாகினர்: 

காப்பாளர் :  ( கவிஞர் ) திரு.  இ. அம்பிகைபாகர்.  

தலைவர் :  திருமதி சகுந்தலா கணநாதன்.

துணைத்தலைவர்கள் :  மருத்துவர் ( திருமதி ) வஜ்னா ரஃபீக் , திரு. அருண். குமாரசாமி.  

செயலாளர் :   டொக்டர் நொயல் நடேசன்.  

துணைச்செயலாளர் :  திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம்.  

நிதிச்செயலாளர்  :   திரு. இப்ரகீம் இரஃபீக்.

துணை நிதிச்செயலாளர் : திரு.  லெ. முருகபூபதி.  

இதழ் ஆசிரியர்  திரு. பிரம்மேந்திரன் தாமேதரம்பிள்ளை.                      

செயற்குழு உறுப்பினர்களாக,   திருவாளர்கள்  சங்கர சுப்பிரமணியன்,  பார்த்தீபன் இளங்கோவன்,  ‘பாடும் மீன்                சு.  ஶ்ரீகந்தராஜா, தெய்வீகன், கலாநிதி ஶ்ரீ கௌரிசங்கர் திருமதிகள்  சிவமலர் சபேசன்,  ஆழியாள் மதுபாஷினி ஆகியோர் தெரிவாகினர்.

உறுப்பினர் திரு. நடேசன் சுந்தரேசன் சமர்ப்பித்த தீர்மானங்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

மலரும் 2022 புத்தாண்டுக்குப் பின்னர் சங்கம் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் தொடர்பாக ஜனவரி மாதம் நடக்கவிருக்கும் செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானிப்பதாக முடிவு செய்யப்பட்டது.

பொதுக்கூட்டத்தின் இறுதியில் நடப்பாண்டுக்கான புதிய செயலாளர்  டொக்டர் நடேசன் நன்றி தெரிவித்தார்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகும்.

---0---      

 

 

 

 


No comments: