அமெரிக்காவில் சுமந்திரன் குழு கலந்துரையாடல்களில்
மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு
‘Homes not Houses’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் கையளிப்பு
இந்தியாவில் தங்கியிருப்போருக்கு மீள்குடியேற்ற ஏற்பாடுகள் துரிதம்
பொலிஸார் தாக்கியே பலியானதாக பாராளுமன்றில் நேற்று ஆர்ப்பாட்டம்
நாவலர் பெருமானின் சிலை திறப்பு
அமெரிக்காவில் சுமந்திரன் குழு கலந்துரையாடல்களில்
அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர்கள் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான பிரிவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் உலக தமிழ்ப் பேரவையின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தச் சந்திப்பு குறித்து ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான பிரிவு, இதன்போது அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் நல்லிணக்கம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு இலங்கையில் சிறுபான்மை குழுக்களின் முன்னோக்குகள் மற்றும் கவலைகள் குறித்து கேட்டறிவது அவசியமாகும் எனவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு
வடக்கில் பொலிஸார் முன்னேற்பாடுகளில்!
எதிர்வரும் 27ஆம் நாள் எங்கள் உறவினர்கள் சக நண்பர்கள் விதைக்கப்பட்ட இடத்தில் நாங்கள் விளக்கேற்றி, விழுந்து அழுது எங்கள் கவலைகளை ஞாபகப்படுத்த அந்தத் தினத்தை அனுஷ்டிக்க அனுமதி தருமாறு அன்பாக வேண்டுகிறோம்.
இவ்வாறு ஜனாதிபதியின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ளனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றபோதே இந்தக் கோரிக்கையை அவர்கள் உருக்கமாக முன்வைத்தனர்.
அவர்கள் தமது கோரிக்கையில் மேலும் தெரிவித்தவை வருமாறு,
ஒவ்வொரு வருடத்தின் நவம்பர் மாதம் 27ஆம் திகதியன்று விடுதலைப் புலிகளின் உறவினர்கள், தமது குடும்ப உறுப்பினர் மறைந்த தினத்தை நினைவுகூர அனுமதிக்குமாறு அரசாங்கத்திடமும், இந்த ஆணைக்குழுவிடமும் கோரியுள்ளனர். எங்கள் உறவினர்கள், சக நண்பர்கள் விதைக்கப்பட்ட இடத்தில் நாங்கள் விளக்கேற்றி, விழுந்து அழுது எங்கள் கவலைகளை ஞாபகப்படுத்தவே அந்த தினத்தைத் தருமாறு அன்பாக வேண்டுகின்றோம்.
இராணுவம் வெற்றி தினத்தை நினைவு கூருகின்றது. இந்திய இராணுவம் இலங்கையில் இறந்த தமது
உறுப்பினர்களுக்குக்கூட யாழ்ப்பாணத்தில் ஒரு தூபியமைக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அத்துடன், ஜே.வி.பி. புரட்சியில் இறந்தவர்களுக்கு இரு தினங்களை அரசாங்கம் நினைவுகூர அனுமதித்துள்ளது. ஏன் இந்த நாட்டில் பிறந்த எங்களுக்கு எங்கள் உறவுகளை நினைத்து மெழுகுதிரி ஏற்றுவதற்கு அனுமதி மறுக்கின்றனர்?
எங்கள் இறந்த உறவினர்கள், நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கு நினைவு கூர ஏன் அனுமதி தர மறுக்கின்றார்கள். இது எங்களின் சாதாரண உரிமையாகும்.
நாங்கள் நினைவுகூர ஆரம்பித்தால் எங்கள் வீடுகளில் இராணுவத்தினரும், சி. ஐ. டியினரும் எங்களை சுற்றிவளைக்கின்றார்கள் , கைதுசெய்கின்றார்கள். இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
எங்கள் வீடுகளுக்கு அடிக்கடி சி. ஐ. டியினர் வருகை தருகின்றனர். இதனால் அயலவர்களும் எங்கள் குழந்தைகளும் அச்சமடைகின்றனர். நாங்கள் தற்போது, இங்கு – கொழும்பு வந்து ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிக்க வந்தால்கூட எங்கள் வீடுகளுக்கு சி. ஐ. டியினர் போய் எமது பிள்ளைகளிடம் விசாரணை செய்கின்றனர்.
எங்கள் வாழ்நாளில் இதுவே ஓர் ஆணைக்குழுவுக்கு வந்து எங்களது கருத்துக்களை கூறும் முதல் சந்தர்ப்பமாகும். நாங்களும் இந்த சமூகத்தில் எல்லோரும் போன்று சமமாகவும், சமாதானமாகவும், நற்பிரஜையாகவும் வாழவே விரும்புகின்றோம் என்றனர்.
முன்னாள் போராளிகள் இந்தக் கருத்துக்களை முன்வைத்தபோது, ஆணைக்குழுவின் தலைவரும், உயர்நீதிமன்ற நீதிபதியுமான நவாஸ் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணிகளும் இந்த அமர்வில் பங்கேற்றிருந்தனர்.
முன்னாள் போராளிகள் ஆணைக்குழு முன்பாக தமது கோரிக்கையை முன்வைக்க மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணனும், அந்தக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சதீஷ்குமாரும் ஏற்பாடுகளை செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
‘Homes not Houses’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் கையளிப்பு
இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிதியுதவியுடன் 14 மில்லியன் யூரோ செலவில் மேற்கொள்ளப்பட்ட ‘Homes not Houses’ வேலைத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளினால் வீட்டு உரிமையாளர்களிடம் வைபவ ரீதியாக ஒப்படைக்கப்பட்டன. Habitat for Humanity Sri Lanka, World Vision Lanka என்பன இணைந்து நிறைவேற்றிய இந்த பல்லாண்டு மற்றும் பன்முக வேலைத்திட்டத்தின் பிரகாரம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 2,370க்கு மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டன. அவர்கள் தமது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் கட்டியெழுப்புவதற்கு நிலைபெறு தன்மையுள்ள வீடமைப்பு மற்றும் சமூக பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டன.
கிளிநொச்சி, கரைச்சியில் வீடொன்றைப் பெற்றுக்கொண்ட நாகலிங்கம் சந்திரன், “எமது வாழ்க்கை நல்ல நிலைமைக்கு மாறியுள்ளது. நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய வைத்தியர்களாகவும் ஆசிரியர்களாகவும் வங்கியாளர்களாகவும் விரும்பும் எமது பிள்ளைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உருவாக்கும்; என்ற நம்பிக்கை இப்பொழுது எமக்கு ஏற்பட்டுள்ளது. யுத்த காலத்தில் நாம் அனுபவித்த துன்பங்களை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. ஆனால், எமக்கு புனர்வாழ்வு அளித்து, எம்மை மீளக்குடியேற்றி, மீண்டும் கௌரவமாக வாழ்வதற்கு உதவிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை எம்மால் தெரிவிக்க முடியும். எம்மைப் போலவே மேலும் பல குடும்பங்களுக்கு உதவி தேவைப்படுகின்றது. அவர்களுக்கும் உதவி கிடைக்குமென நாம் நம்புகின்றோம்” என்று கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விளாவெட்டுவான் கிராமத்தில் அமுக்கி உறுதியாக்கப்பட்ட மண் புளொக் கற்கள் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட தமது வீட்டின் முன்னால் உஷாதேவியும் அவரது குடும்பத்தினரும் காணப்படுகின்றனர்.
வீடுகளைக் கையளிக்கும் வைபவத்தில் பேசிய ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டெனிஸ் சைபி, “இந்த வேலைத்திட்டம் மக்களில், குறிப்பாக, கொடிய யுத்தத்தினால் கஷ்டங்களை அனுபவித்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில், செய்யப்படும் ஒரு முதலீடாகும். நாம் மக்களில் முதலீடு செய்யும்போது, இந்த வேலைத்திட்டத்தினால் பயனடையும் மக்கள் நல்ல பெறுபேறுகளைத் தரக்கூடிய மற்றும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய வழிகளில் ஒருவரில் ஒருவரும் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்” என்று தெரிவித்தார்.
வீட்டில் வசிக்க இருப்பவர்கள் சூழலுக்கு நலமான முறையில் தாமாகவே தமது வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், ‘Homes not Houses’ வேலைத்திட்டம் அதன் அணுகுமுறையில்; தனித்துவமானது. மக்களில் முதலீடு செய்தல், சூழலை நலமாகப் பாதுகாத்தல் ஆகிய ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு முன்னுரிமைகளும் இதனால் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
Habitat for Humanity Sri Lanka தேசிய பணிப்பாளர் யூ ஹுவா லீ பேசுகையில், “பிள்ளைகள் ஆரோக்கியமான சூழலில் கல்வி கற்கவும் விளையாடவும் அவர்களின் பெற்றோர் தமது வாழ்வாதாரங்களை முன்னேற்றவும் மக்கள் தமது சமூக ஒற்றுமைக்குப் பங்களிப்புச் செய்யவும் உகந்த பாதுகாப்பான வசிப்பிடங்கள் தேவைப்படும் குடும்பங்களுடன் சேர்ந்து பணியாற்றியதை எமது அமைப்பு மிகுந்த கௌரவமாகக் கருதுகின்றது. வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் World Vision லங்காவும் வழங்கிய இடைவிடாத உதவிகளை நாம் பெரிதாக மதிக்கின்றோம்”; என்று தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் “இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும்” பொருட்டு மேற்கொண்ட ஒரு தசாப்தகாலத் திட்டம் இந்த வேலைத்திட்டத்துடன் முடிவடைந்தது. இக் காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் 20,000க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும் யுத்தம் காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கும் சுயமாக வீடுகளை மீளமைப்பதற்கான உதவி என்ற வகையில் 50 மில்லியன் யூரோவுக்கு அதிகமான தொகையை வழங்கியது. இந்த வீடமைப்பு முயற்சி வழமையான ஏனைய வீடமைப்புத் திட்டங்களைவிட வித்தியாசமானது. ஏனெனில், வீட்டின் உரிமையாளர்கள் தமது வீடுகளை கட்டுவதில் நேரடியாகப் பங்கெடுத்தார்கள். அது மாத்திரமன்றி, வீடுகளைக் கட்டுவதற்கு புதுமையான, நிலைத்திருக்கக்கூடிய மற்றும் காபன் குறைவான கட்டுமானத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. அமுக்கி உறுதியாக்கப்பட்ட கிறவல்; கற்கள் போன்ற உள்நாட்டுக் கட்டடப் பொருள்களைப் பயன்படுத்தியே 45 சதவீதமான வீடுகள் கட்டப்பட்டன. ஹபிட்டாட்டின் காலநிலை உணர்திறன் கொண்ட முன்முயற்சிகளுக்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். நிலைபெறு தன்மையுள்ள கட்டுமானத் தொழில்நுட்பங்களையும் புதுவகையான கட்டடப் பொருள்களையும் அறிந்துகொள்ள இத் திட்டம் குடும்பங்களுக்கும் மேசன்மாருக்கும் வாய்ப்பளித்தது. சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மண் அகழ்வு, காபனை அதிகமாகக் கொண்ட இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான செலவு என்பன இத் திட்டத்தில் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வீடுகளைக் கையளிக்கும் வைபவத்தில், வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்துடன் தொடர்புடைய அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் அலுவல்களை மேற்பார்வை செய்த கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனும் வைபவத்தில் கலந்துகொண்டார். வேலைத்திட்டம் பற்றி அவர் குறிப்பிடுகையில் “இந்த வேலைத்திட்டத்தின் தனித்துவமான கோட்பாட்டையும் சூழலுக்கு நலமான கட்டுமானக் கோட்பாட்டையும் ஊக்குவிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. குளிர்ச்சியான வீடுகள், சிக்கனமான மின்சக்தி நுகர்வு போன்ற நன்மைகளை மக்களின் மனதில் பதியச் செய்வதற்கு என்னால் முடிந்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்” என்று கூறினார்.
இந்த வேலைத்திட்டம் பொருளாதார மற்றும் வாழ்வாதார அபிவிருத்திக் கூறு ஒன்றையும் உள்ளடக்கியதாக இருந்தது. திறன்களை விருத்தி செய்வதற்கான பயிற்சி மற்றும் கால்நடை வளர்ப்பு, விவசாயம், வீட்டு அடிப்படையிலான கட்டுமானத் தொழில்களுக்கான வாழ்வாதார உதவிகள் மூலம் சுமார் 46,000 மக்களின் தன்னிறைவான வாழ்க்கை மேம்படுத்தப்பட்டது. அனர்த்த இடர் குறைப்பு ஏற்பாடு, வடிகால்கள் மற்றும் மதகுகளின் புனரமைப்பு என்பவற்றின் மூலம் மக்களின் தாக்குப்பிடிக்கும் திறன் கட்டியெழுப்பப்பட்டது.
World Vision லங்காவின் சர்வதேச மூலவளங்கள் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ஷெல்பி ஸ்டேபிள்டன் இது பற்றிக் குறிப்பிடுகையில், “ஐரோப்பிய ஒன்றியம், Habitat for Humanity Sri Lanka, World Vision Lanka ஆகியவற்றின் இப் பங்காளித்துவ முயற்சியின் பலாபலன்களைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அரசாங்கத்துடனும் சமூகத்துடனும் இணைந்து செயற்பட்டு மக்களின் இருப்பிட வசதியையும் வாழ்வாதாரங்களையும் முன்னேற்றுவது உறுதிப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் மிக முக்கியமானதாகும். எமது முயற்சியின் பெறுபேறுகளையிட்டு நாம் இன்று பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்” என்று கூறினார்.
“புதிய கட்டுமானத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டமை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அமுலாக்கப் பங்காளிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். போதிய வசதியற்ற வீடுகளில் வசித்துவந்த மக்கள் தமக்குக் கிடைத்துள்ள சூழலுக்கு நலமான வீடுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். எமது பிரதேசத்தில் இது போன்ற வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்காலத்திலும் உதவிகள் கிடைக்குமென நான் நம்புகின்றேன்” என்று உள்ளுராட்சிப் பிரதிநிதி குறிப்பிட்டார். நன்றி தினகரன்
இந்தியாவில் தங்கியிருப்போருக்கு மீள்குடியேற்ற ஏற்பாடுகள் துரிதம்
வரவு செலவு திட்டத்தில் அதற்கான பரிந்துரைகள்
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் யுத்தத்திற்கு முன்னர் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட அனைத்து காணிகளிலும் வேளாண்மை செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருப்போர் பதாகைகளை ஏந்தியவாறும், முழக்கங்களை எழுப்பியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு, குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்றைய தினம் கொழும்புக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை பொலிஸார் தடுத்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பனாமுரே பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைச் சம்பவத்திற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவே பொறுப்பு எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எவ்வாறிருப்பினும் குறித்த குற்றச்சாட்டை நிராகரித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, சந்தேகநபர் பொலிஸ் அறைக்குள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவித்தார்.
தன்னை தாக்கியதாக அவரது மகள் அளித்த முறைப்பாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் போதைக்கு அடிமையானவர் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நேற்றிரவு 10.30 மணியளவிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்திற்கும் அவரது கைதுக்கும் தொடர்பில்லை என்றும் அவர் கூறினார். நன்றி தினகரன்
பொலிஸார் தாக்கியே பலியானதாக பாராளுமன்றில் நேற்று ஆர்ப்பாட்டம்
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று பாராளுமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் ஆதரவாளர் ஒருவரை பொலிஸார் தாக்கி கொன்றதாகக் கூறியே, பதாகைகளை ஏந்தியவாறும், முழக்கங்களை எழுப்பியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு, குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்றைய தினம் கொழும்புக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை பொலிஸார் தடுத்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பனாமுரே பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைச் சம்பவத்திற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவே பொறுப்பு எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எவ்வாறிருப்பினும் குறித்த குற்றச்சாட்டை நிராகரித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, சந்தேகநபர் பொலிஸ் அறைக்குள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவித்தார்.
தன்னை தாக்கியதாக அவரது மகள் அளித்த முறைப்பாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் போதைக்கு அடிமையானவர் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நேற்றிரவு 10.30 மணியளவிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்திற்கும் அவரது கைதுக்கும் தொடர்பில்லை என்றும் அவர் கூறினார்.
சபை நிருபர்கள் - நன்றி தினகரன்
நாவலர் பெருமானின் சிலை திறப்பு
கார்த்திகை தீபத் திருநாளான வியாழக்கிழமை,நாவலர் பெருமானின் திருவுருவச்சிலை திறந்து வைக்கப்படவுள்ளது. இதனையொட்டி நாவலர் கலாசார மண்டபத்தை திருத்தி அமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
கலாசார மண்டபத்தின் நுழைவாயலில் யாழ் மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் இந்தச் சிலை நிறுவப்பட்டது.
நாவலர் கலாசார மண்டபத்தின் பராமரிப்பு தொடர்பில் சர்ச்சைகள் வந்த நிலையிலும், அங்கு, நாவலரின் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.விஷேட நிருபர் - நன்றி தினகரன்
No comments:
Post a Comment