மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
உவமைநயம் மிக்க நல்லதொரு பாடலைக் குண்டலகேசியில் பார்க்கிறோம்.உவமையினைக் காட்டிட அமைந்தாலும் அங்கும் தத்துவமே முன்னிற்கிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.
வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய்
ஆயுவினை நோக்கியுள வாழ்க்கை யதுவேபோல்
தீயவினை நோக்கும் இயல் சிந்தனையும் இல்ல்லாத்
தூயவனை நோக்கியுள துப்பரவும் எல்லாம்.
காற்றை நம்பியே ஓடம் செல்லுகிறது.ஊழ்வினையின் வழியே
ஐம்பெரும் காப்பிய வரிசையில் இடம் பெறும் வளையாபதி ஒன்பதாம் நூற்றாண்டினைச் சார்ந்தது என்னும் கருத்து இலக்கிய அறிஞரிடையே காணப்படுகிறது.அதேவேளைஇதனை வள்ளு வத்தின் பின் வந்ததென்றும் அறிஞர்கள் சிலர் சொல்லுகிறார்கள். வள்ளுவத்தின் சில பாடல்களை எடுத்தாளும் தன்மையினை வளையாபதி கொண்டு இருப்பதால் இப்படிக் கூறும் நிலையும் வந்திருக்கலாமோ என்றுகூடக் கருதிட முடிகிறதல்லவா ?
இது சமணம் சார்ந்தது என்னும் கருத்து இருக்கிறது. அதேவேளை இதில்வரும் நாயகன் சைவமத த்தவனாய் இருப்பதால் - சமணம் சார்ந்தது என்று எடுப்பது பொருந்துமா என்னும் நிலையும் அறிஞரிடையே காணப் படுகிறது. ஆனால் வளையாபதியின் பாடல்களில் காணப்படும் கருத்து க்களை நோக்கும் பொழுது சமணச் சார்ப்பான தன்மையே பெரிதும் இருப்பதும் தெரிய வருகிறது.
வளையாபதிக் காவியத்தின் ஆசிரியர் யார் என்பதும்
அறியமுடியவில்லை. எழுபத்து இரண்டு பாடல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றிருக்கிறது. ஆனாலும் இப்பாடல்களை மையப்படுத்தி ஒரு கதையும் அமைந்தே இருக்கிறது. அந்தக் கதையும் ஊகமாய்த்தான் இருக்கும் என்னும் ஒரு நோக்கும் அறிஞர்களிடை யே இருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.
எழுபத்து இராண்டு பாடல்களுமே ஒரே இடத்தில் கிடைக்க வில்லை. புறத்திரட்டு என்னும் நூல் பதினா ன்காம் நூற்றாண்டில் வந்தமைகிறது. அந்த நூலில் இருந்து அறுபத்துஇரண்டு பாடல்களை வளையாபதி யின் பாடல்கள் என்று அறிஞர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.அடியா
இந்த நூலுக்கு ஒரு தமிழறிஞரால் எழுதப்பட்ட விருத்தி உரையில் இரண்டு பாடல்கள் எடுத்துக் காட்டாய் கையா ளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கையாளப்பட்ட இந்த இரண்டு பாடல்களும் வளையா பதிக்கே உரியதாகும் என்று தமிழறிஞர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். வளையாபதிக்கான பாடல்கள் இப்படித்தான் சேர்க்கப்பட்டன என்பதை வளையாபதி பற்றி நோக்கும் பொழுது அறியக் கூடியதாக இருக்கிறது.
நிறைவான நிலையில் வளையாபதி காப்பியம் கிடைக்கா விட்டாலும் - கிடைத்த பாடல்களைக் கருத்தில் இருத்தி அதனையும் காவிய வரிசையில் வைத்தமையினைப் பாராட்டியே ஆக வேண் டும்.குறைவான பாடல்கள் கிடைத்த நிலையிலும் அதனூடாக ஒரு கதையினையும் இணைத்த பாங் கையும் பாராட்டவே வேண்டும்.
சிலம்பில் புகார் வந்ததுபோல் வளையாபதியிலும் புகார் வருகிறது. இங்கு தான் - கதையின் நாயகனான நவகோடி நாராயணன் வருகிறான்.சிலம்பின் நாயகனான கோவலன் கண்ணகியை மணம்முடிக்கிறான். பின்னர் மாதவியையும் மணக்கிறான். கோவலனும் கண்ணகியும் வணிகர் குலத்தவர். மாதவி அக்குலத்தவள் அல்ல. வளையாபதி நாயகன் நவகோடி நாராயணனும் வணிகர் குலத்தவன். வணிகர் குலத்துப் பெண்ணை இவனும் முதலில் மணக்கிறான். பின்னர்வணிகர் குலம் அல்லாத இடத்தில் இருக்கும் ஒரு பெண்ணையும் இரண்டாந்தாரமாய் மணக்கிறான்.கிட்டத்தட்ட கோவலனின் சகோதரன் போல வளையாபதி நாயகன் நவகோடி நாராயணனும் அமைகிறான் அல்லவா !
சிலம்பின் நோக்கம் வேறு. அதனால் அங்கு கதையின் திருப்பம் வேறு விதமாய் மாறுகிறது. வளையாபதியை எழுதிய ஆசிரியர் கதையினை வேறு நிலையில் காட்டிட முன் வருகிறார். தன் குலத்தை விட்டு வேறு குலத்தில் இரண்டாந்தாரமாய் நவகோடி நாராயணன் திருமணம் செய்ததை அவனு டைய வணிக குலத்தார் எதிர்க்கிறார்கள். அந்த எதிர்ப்பார் அவனையே வணிகர் குலத்தை விட்டு ஒதுக்கி விடுவோம் என்று எச்சரிக்கையும் செய்கிறார்கள்.குலத்தாரின் எதிர்ப்புக்கு அஞ்சிய நிலையில் நவகோடி நாராயணன் தன்னுடைய இரண்டாவது மனைவியை விட்டு விட்டு தனது வணிக த்தைக் கவனிக்கக் கடற்பயணத்தை மேற்கொள்ளுகின்றான். அவனால் கைவிடப்பட்ட அவனின் இரண் டாவது மனைவி அப்பொழுது வயிற்றில் கருவினைச் சுமந்தபடி இருந்தாள் என்பது முக்கியமாகும்.
கடல் பயணத்தால் ஈட்டிய பெருஞ்செல்வத்துடன் முதல் மனைவியோடு நவகோடி நாராயணன் ஆனந்தமாய் வாழ்கிறான். அபலையான அவன் இரண்டாம் மனைவி ஆண்குழந்தை ஒன்றைப் பெற்றெ டுக்கிறாள்.அந்தப் பிள்ளை வளர்ந்து வரும் வேளை - அவனது நண்பர்கள் " தகப்பன் பெயரே தெரியா தவன் " என்று கேலியும் கிண்டலுமாகப் பேசி அவனை மனம் நோகும்படி செய்து விடுகிறார்கள். மனம் நொந்த பிள்ளை தாயிடம் வேதனையைக் கொட்டித் தீர்க்கின்றான். பிள்ளையின் கவலை தாயையும் வாட்டியதால் இதுவரை மூடி வைத்திருந்த விஷயத்தை சொல்லி விடுகிறாள். தனக்குத் தந்தை இருக்கிறார் என்று கேட்டதும் கவலைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு துள்ளலுடனும் ,உற்சாகத்துடனும் , ஆனந்தந்துடனும் தந்தையை நாடிச் செல்லுகின்றான்.தந்தையைக் காணுகிறான். ஆனால் தந்தையோ தன்னுடைய வணைகர் குலத்துக் கட்டுப்பாட்டுக்குப் பயந்து அவனை மகனாக ஏற்றிட மறுத்துவிடுகிறான்.
ஏற்க மறுத்த விஷயத்தை அறிந்த தாயானாவள் சக்தியாய் விளங்கும் காளியை வேண்டுகிறாள். வணிகர் குலத்துப் பெண்கள் மத்தியில் காளியின் அனுக்கிரகத்தால் அவள் புனிதமானவள் என்னும் நிலை வெளிச்சமாகிறது. நிறைவில் நவகோடி நாராயணன் கைவிட்ட மனைவியையும் , மகனையும் இணைத்துக் கொள்ளுகின்றான். அந்தப் பிள்ளைக்கு வீரபாணிபன் என்று பெயரையும் சூட்டி எல்லோரும் மகிழ்வுடன் வாழ்கிறார்கள் என்று வளையாபதி கதை நல்லதாய் நிறைவுறுகிறது.
நல்லதொரு சுபமான திரைப்படம் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது அல்லவா ? இப்படியான ஒரு கதை இதற்குள் புதைதிருந்த காரணத்தால்த்தான் - பாரதிதாசன் இதனைத் திரைக்காவியம் ஆக்கினாரோ என்றும் நினைத்திட வைக்கிறதல்லவா !
வளையாபதி இவ்வளவுதானா ? இதனைப் படிப்பதால் என்னதான் வரப் போகிறது ? வளையாபதி ஏதாவது கருத்துக்களைப் பகர்ந்திருக்கிறதா என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது அல்லவா ! கருத்துக்கள் இல்லா விட்டால் அங்கு காவியமும் இல்லை. இலக்கியமும் இல்லை என்றாகி விடும் அல்லவா ! சமணக் காவியமா , சைவக் காவியமா என்றெல்லாம் விவாதிப்பதை விட்டு விட்டு - இக்காவியம் எதனைக் கூறுகிறது என்று பார்த்தால் - கல்லாமை, கொல்லாமை, பொய்யாமை, இளமை நிலையாமை இவைதான் இக்காவியத்தின் கருப் பொருள்களாகும். அதே வேளை வாழ்வியலுக்கு ஏற்ற கருத்துக்கதுக்களையும் காட்டாமலும் வளையாபதி இருக்கவில்லை என்பதும் கருத்திருத்தவேண்டியதே யாகும்.இங்கே காட்டப் பட்ட கருக்கள் சைவத்திலும் போற்றப்படுகின்றன. அதே வேளை சமணனந்தான் இக்கருக்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது என்
பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத்
துறையிலா வசன வாவி துகில் இலாக் கோலத் தூய்மை
நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச்
சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே
என்னதான் இருந்தாலும் பிள்ளைச் செல்வம் இல்லாவிட்டால் எல்லாமே வீண்தான் என்று காட்டும் இந்தக் கருவானது வாழ்வியலைக் குறிப்பதாய் இருக்கிறது அல்லவா ? வளையாபதியின் பார்வை இப்படியும் இருக்கிறது.
உயர்குடி நனியுட் டோன்றலூனமில் யாகையாதன்
மயிர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்ல ராதல்
பெரிதுண ரறிவே யாதல் பேரறங் கோட லென்றாங்
கரிதிவை பெறுதலேடா பெற்றவர் மக்க ளென்பார்
ஐம்பெரும் காப்பிய வரிசையில் இடம் பெறும் வளையாபதி ஒன்பதாம் நூற்றாண்டினைச் சார்ந்தது என்னும் கருத்து இலக்கிய அறிஞரிடையே காணப்படுகிறது. அதேவேளை இதனை வள்ளுவத்தின் பின் வந்ததென்றும் அறிஞர்கள் சிலர் சொல்லு கிறார்கள். வள்ளுவத்தின் சில பாடல்களை எடுத்தாளும் தன்மையினை வளையாபதி கொண்டு இருப்பதால் இப்படிக் கூறும் நிலையும் வந்திருக்கலாமோ என்று கூடக் கருதிட முடிகிறதல்லவா ? இது சமணம் சார்ந்தது என்னும் கருத்து இருக்கிறது. அதே வேளை இதில்வரும் நாயகன் சைவமதத்தவனாய் இருப்பதால் - சமணம் சார்ந்தது என்று எடுப்பது பொருந்துமா என்னும் நிலையும் அறிஞரிடையே காணப்படுகிறது. ஆனால் வளையாபதியின் பாடல்களில் காண ப்படும் கருத்துக்களை நோக்கும் பொழுது சமணச் சார்ப்பான தன்மையே பெரிதும் இருப்பதும் தெரிய வருகிறது.
No comments:
Post a Comment