கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை பதினேழு]

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

                            

  பனந்தும்பினை ஏற்றுமதி செய்யும் நாடுகள் என்று நோக்கும்


பொழுது - ஒரு காலத்தில் இலங்கை முன்னிடம் வகித்ததாயும்
 குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டமே இடம்பெற்றதாயும் அறியமுடிகிறது. பனந்தும்பினை உலகினுக்கு அறிமுகப் படுத்தியவர்கள் என்னும் பெருமையினை யாழ்ப்பாணத்தவரும் ,  யாழ்பாண மாவட்டமுமே  பெற்றிருந்தது என்று அறியும் பொழுது  பெருமைப்பட வைக்கிறதல்லவா ! வெளிநாடுகளுக்கான பனந்தும்பானது - பருத்தித்துறை,  வங்காலை ,வல்வெட்டித்துறை ,  கொழும்புத் துறைத்துறை துறைமுகங்க ளுடாகவே அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது என்னும் செய்தி இரட்டிப்பு மகிழ்ச்சி யினைக் கொடுக்கக் கூடியதாய் இருக்கிறதல்லவா ! பனந்தும்பு உற்பத்தியில் தலையாய இடத்தில் இருந்த இலங்கை -  அந்த உற்பத்தியில் தொடர்ந்து முன்னிலை வகிக்க முடியாமல்

ஆகியது என்பது மகிழ்ச்சிக்கு உரிய விடயமல்ல. இலங்கையின் பின்னடைவு - இந்தியாவை உற்சாகப் படுத் திவிட்டது. இன்று இலங்கையைவிட
 இந்தியாதான் பனந்தும்பு உற்பத்தியிலும்  , ஏற்றுமதியிலும் முன் னிற்கிறது என்பது நோக்கத்தக்கதாகும்.ஆனாலும் இலங்கையும்-  தளர்ந்துவிடாது பனந் தும்பினை உற் பத்தி செய்தபடியேதான் இருக்கிறது.ஏற்றுமதியிலும் கவனத்தைச் செலுத்தியும் வருகிறது.பனந்தும்புத் தொழிற்சாலைகளை நிறுவியும் பராமரித்தும் வரும்பணியில் - பனை அபிவிருத்திச்சபையானது தன்னால் இயன்றவரை முயற்சிப் பாதையில் பயணித்து வருகிறது என்பதையும் கட்டாயம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.பனை அபிவிருத்திச் சபையினை அலங்கரிக்கும் அதிகாரிகளும் அதன் அலுவலர்களும் - பனைபற்றிய நல்ல சிந்தனையில் இருக்கிறார்கள் என்பது நோக்கத்தக்கதேயாகும்.பனந்தும்பானது முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டு 1987 ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டது என்று அறியமுடிகிறது.அதுமட்டடு மல்லாமல்பருத்தித்துறைசாவகச்சேரிஆகிய இடங்களில் ஏற்றுமதிக்கான அமைப்பும் உருவாக்கப்பட்டு  பனந்தும்பானது ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் நாட்டில் ஏற்பட்ட போரினால் அந்த நிலை தொடரமுடியாமல் போய்விட்டது என்பது மனங் கொள்ளத்தக்கதாகும்.

    என்றாலும் பனந்தும்பினை விட்டுவிட இலங்கை விரும்பவில்லை. ஏனெனில் பனந்தும்புக்கான சந்தைவாய்ப்பு


நிறையவே இருப்பதாகும். பனை அபிவிருத்திச்சபையின் கீழ் - யாழ்ப்பாண மாவட் டத்தில்
  - சரசாலைமன்னார் மாவட்டத்தில் - செல்வாரிஓலைத்தொடுவாய் புத்தளம் மாவட்டத்தில் - கற்பிட்டி ஆகிய இடங்களில் பனந்தும்பு உற்பத்தி நிலையங்களை இயங்கச் செய்து  , பனந்தும்பு உற்ப த்தியில் கவனம் செலுத்தி வருகிறது என்பது கருத்திருத்த வேண்டிய விட யம் எனலாம்.இலங்கையில் உற்பத்தியாகும் பனந்தும்பானது தரத்தில் சிறந்ததாய் இருக்கிறது. அதுமட்டுமல்ல இலங்கைப் பனந் தும்பினுக்கு நல்ல வெளிநாட்டுச்சந்தை வாய்ப்பும் சிறப்பாய்  இருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டிய விடயம் எனலாம்.


  
இந்தியா பனந்தும்பு உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் தன்னை முன்நிலைப் படுத்தியபடியே இரு க்கிறது. ஏறக்குறைய முப்பதுக்கு மேற்பட்ட வெளிநாடுகள் இந்திய பனந்தும்பினை விரும்பி வாங் குகின்றன என்று அறியமுடிகிறது.அந்த வகையில் ஜப்பான்.  அமெரிக்கா, இங்கிலாந்துமேற்கு ஜேர்மனிபெல்ஜியம் போலந்து செக்கோசிலவாக்கியாஒல்லாந்துடென்மார்கஇத்தாலிஅவுஸ்  திரேலியா நாடுகள் அமைகின்றன.

   பனந்தும்பினை எடுத்தால் மட்டும் போதாது. எடுக்கப்படும் பனந்தும்பினை தரம் பிரிக்கும் நிலையும் காணப்படுகிறது. அப்படிப் பிரிக்கும் வேளை - பிரைம் ஸ்ரிப் நடுத்தரம் மென்மையானது என்று மூன்று நிலையில் பிரிக்கப்படுகி றது என்று பார்த்தோம்.முதலாம் தரமாய் கொள்ளப்படும் பனந்தும்பு விறைப் புள்ள தும்பாக


இருக்கும்.இவ்வகையான பனந்தும்பில் எண்பது விகிதம் கறுப்புத் தும்பு கலந்திருக்கும். இந்த நிலை எல்லாக் கோராக்களிலும் கலந்தே இருக்கும் என்பது நோக்கத்கது.முதல் வகையான தும்பினை எடுப்பதற்கு - விறைப்பு நிலையில் இருக்கின்ற " கோரா " நிலையிலேயே பிரித்துவிடல் முக்கியமானதாய் அமைகிறது.இப்படிப் பிரிப்பதற்கு இண்டு முறைகள் கையாளப்படுகிறது.

  கோராத்தும்புகள் சந்தைக்கு வரும்.அதில் கறுப்புப்பகுதி நிறைந்தே இருக்கும். கோராத் தும்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் கறுப்பினைக் கையினால் பிய்த்து எடுப்பார்கள்.எடுக்கப்பட்ட கறுப்புகள் சேகரிக்கப்படுகின்றன. இப்படி செய்யும் முறை " பிய்த்தெடுக்கும் கறுப்பு "  என்று பெயர் பெறுகிறது. கோராவில் உள்ள கறுப்புத்தும்பினை ஒவ்வொன்றாக பிரித்தெடுப்பது இரண்டாம் முறையாக அமை கிறது.இவ்வாறு செய்யும்  முறையானது தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டதில் நடைபெறுகிறது.

   கோராத் தும்பானது சந்தைகளிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு - தொழிற் கூடங்களுக்கு கொண்டு வரப்படுகிறது.


இப்படிக் கொண்டுவரப்படும் கோராத் தும்புகள் பெரும்பாலும் ஈரமானதாகவே காணப் படுகிறது.இப்படி வருகின்ற ஈரக்கோராவின் ஒரு பகுதியானது - சுத்தம் செய்வதற்கு நேரடியாகவே கொடுக்கப்படுகிறது.சுத்திகரிப்பதற்கு உரிய தகுதியானவர்களின் எண்ணிக்கையினைக் கொண்டு பிரிக்கும் வேலை நடைபெறும்.தகுதியானவர்களைப் பொறுத்து இந்தச் சுத்திகரிப்பு நடை பெறுவதால்
 இரண்டு நாட்களில் சுத்தம் செய்ய முடியா நிலையில் ஈரமான கோராக்களை வெய்யிலில் உலர விடப் படுகிறது. ஈரமான கோராக்கள் உலரும் நிலையில் அவற்றின் நிறையும் குறை வடைகிறது.உலர்ந்து நிற்கும் தும்பு பத்திரமாய் சேகரித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு பதமாக வந்த தும்பு சுத்தீகரிப்புக்கு உள்ளாகிறது.நீரில்


ஊற வைக்கப்பட்டு
 பின் சீப்பில் இட்டுச் சீவப்படுகிறது.அதுவும் தலைமாற்றிச் சீவப்படுகிறது.இப்படிச் செய்கின்ற பொழுது - கோரத் தும்பிலிருக்கும் தூசு சோற்றுப் பகுதி அடிபடாத கங்குமட்டையின் தோல்துணுக்குகள்மயிழைபோன்ற ஊடு தும்புகள்,யாவுமே சுத்தமாய் நீக்கப்படுகிறது.சுத்திகரிப்பு உட்பட்டு சீப்பிடப்பட்ட தும்பை இரண்டு அல்லது மூன்று அடி விட்ட அளவில் தரையில் வட்டமான பொதியாகக் கட்டி வைக்கிறார்கள். 

  குளச்சல்வேடசத்தூர்இராமநாதபுரம் சிவகங்கைதிரிச்செங்


கோடு
மேச்சேரிகரூர் சின்னத்தாராபுரம் ஈரோடுசென்னிமலை ஆகிய இடங்க ளில் பனந்தும்பு உற்பத்தி நிலையங்கள் இருக்கின்றன.இந்த நிலையங்களில் - முதல்சீப்புவெள்ளை பிரித்தல்சுத்தம் செய்தல்அளவாகப் பிரித்தல்நறுக்குதல் என்று கோராத்தும்பு பதமாக்கி சேகரிக்க்கப்படுகிறது,இப்படிச் செய்யும் நிலையில் அவற்றில் இருக் கின்ற கழிவுகள் அகற்றப்பட்டு தரமான தும்பு சேகரிக்கப்படுகிறது.ஐம்பத்து ஐந்து கிலோ கோராத் தும்பினைச் துப்பரவு செய்யும் நிலையில் - ஒவ்வொரு உற்பத்தி நிலையத்துக்கு தகுந்தாற்போல கழிவின் தன்மை காணப்படும். உற்பத்தியாகும் நிலையங்களைக் கருத்தில் கொண்டு எட்டு

இடங்கள் ஆராயப்பட்டது. இவ்வாறு ஆராயப்பட்டதன் விளைவாக
 கன்னியாகுமரி மாவட்டம் கரூர் மாவட்டம் சின்னத் தாராபுரம் ஆகிய இடங்களில் கிடைக்கும் தும்பில் - கழிவுகள் குறைவாகவே கிடைக்கிறது என்று அறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  கோராத் தும்பானது பல இடங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது.பின்னர் அத்தனையும் தொழிற் கூடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பல்வேறு நிலைகளில்


பக்குவப்படுத்தப்பட்டு துறைமுகத்து எடுத்துச் செல்லப்படுகிறது.பனந்தும்பானது ஏற்றுமதி நிலையை அடைவதற்கு முன் எவ்வாறு பக்குவப் படுத்தப்படுகிறது என்பதை கருத்திருத்தல் அவசியமாகும்.தொழிற் கூடத்தில் எடையிடப்படுகிறது. பொதிகள் வைக்கும் பகுதியில் அதாவது கிட்டங்கியில் கவிழ்த்து வைக்கப்படுகிறது.பின்னர் ஒரே அளவில் பிரித்து
  - தேவையான அளவுக்கு நறுக்கப்படுகிறது.பின்னர் சாயமிடல்உலரவிடல்,உரிவி எடுத்துச் சீப்பிடல்முடியிடல்நுனி நறுக்குதல்என்று செய்தபின்னர் - முடிகளை இறுதியாக உலர விடப்படும். பின்னர் போலாக்

கட்டுதல் இடம்பெறும்.நிறைவாக குறியிட்டு துறைமுகத்துக்கு ஏற்றிச் செல்லப்படும். இதுபோன்று இன்னும் பல நிலைகளுக்கு தும்பு ஆளாக்கப்பட்ட பின்னே ஏற்றுமதிக்கு உரியதாகிறது என்பது முக்கியமாகும்.

  கங்குமட்டையினை அதாவது பத்தலை அடித்துத்தானே தும்பு பெறப்படுகிறது.இப்படி எடுக்கப்படும் தும்பானது - ஏற்றுமதிக்கென தயாராகும் வரைக்கும் சுத்தம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். இப்படிச் சுத்தம் செய்யப்படுகின்ற நிலையில் கழிவு வந்து நிற்கும்.கழிவானது வந்து சேருவதற்கு பல காரணங்கள் கண்டறியப் பட்டிருக்கின்றன.பத்தலை அடிக்கும் வேளை - சரியான முறையில் அடிக் காமல் தும்புடன் சதைப்பகுதி ஒட்டி இருக்கும்படி விடப்படுதல்மட்டையில் காணப்படும் கடினமான பகதி அதாவது கருக்கு சரியாக அடிபடாமல் பத்தலிலேயே நின்று விடுவதுஅதுமட்டுமல்ல பத்தலி ருந்து கிடைத்த தும்பைக் கருக்கு மட்டையில் இருக்கின்ற கூர்மையான பகுதியால்  சிலர் சீவுகின்றனர். இதனால் கழிவுகள் வரும் நிலை ஏற்படுகிறது.மேலும் -பத்திலிருந்து அடித்த தும்பை சீப்பிடாமல் கட்டி வைப்பதும் கழிவுக்குக் காரணமாகிறது. கோரத்தும்பை வெய்யிலில் உலர்த்தினால் அதில் ஒட்டியி ருக்கும் சோற்றுப்பகுதி காய்ந்து கீழே உலர்ந்துவிடும்.உலர விடாமலேயே தும்பை அப்படியே ஈரத்துடன் கட்டி வைத்துவிடுவது. அத்துடன் தும்பின் எடையினைக் கூட்டிக் காட்டி அதனை விற்பதற்காக - பத்த லின் உள்தோலினைப் பிரிக்காமலேயே அடித்து பத்தலாகவே கோராவில் சேர்த்து விடப்படுதல். இப்படி யான நிலைகளே தும்பில்,கழிவுகள் வருவதற்குக் காராணங்களாய் அமைகின்றன என்பது முக்கிய மாகும்.

  கழிவாய் வந்து விட்டதே என்று கவலை கொள்ளவும் தேவையில்லை.கழிவாய் வருகின்ற தும்பினை எரிக்கப் பயன்படுத்தினார்கள்.அதுமட்டும் அல்லாமல் வாகனங்களை ஓட்டுகின்ற ஓட்டுநர்கள் இருக் கின்ற இருக்கைகளுக்கும் பயன்படுத்தினார்கள்.பனந்தும்பினைக் கொண்டு மெத்தைகள் தயாரிக்கப்பட்டு மாட்டு வண்டிப் பயணத்துக்கும் பயன்படுத்தினார்கள்.இப்படிப் பலவாறு பயன்படுத்தப்பட்டு வந்த கழிவுத் தும்பின் பயன்பாடு குறைவடைந்து வரும் நிலையே ஏற்பட்டது.

  கழிவுத் தும்பினை வீணாக்காமல் அதனைப் பயன்படுத்தவும் முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகும். கழிவுத்தும்பினை - வெறும் கழிவு என்று கருதாமல் அதனையும் எப்படி! எவ்வாறு ! பயன் படித்தலாம் என்று சிந்திப்பதே சிறப்பானதாகுமல்லவா ! அப்படிச் சிந்தித்ததன் பயனாய் கழிவுத் தும்பினைப் பயனாக்கி கயிறு திரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.அந்த நிலையில் - குடிக்கயிறுவால்கயிறுவடக்கயிறுஆகிய கயிறுகள் வந்து அமைகின்றன.

  கழிவுத்தும்பினைக் கொண்டு கயிறு திரிக்கலாம் என்னும் பொழுது - அங்கு கவனமும் தேவைப் படுகிறது. கழிவுதானே என்று அத்தும்பை  கடும் வெய்யிலிலும்மழையிலும் கிடக்கிட விடப்பட்டால் அதிலிருந்து பயன்பாட்டினைப் பெற்று விடமுடியாமலும் போய்விடலாம். ஆதாலால் அத்தும்பினைப் பாதுக்காப்பாய் வைக்க வேண்டும். கழிவுத்தும்பின் மேல் குப்பையைப் போடக்கூடாது.அத்து டன் தும்பி லிருந்து வருகின்ற சோற்றையும் போட்டுவிடவும் கூடாது.வாரத்துக்கு ஒருமுறை கிடைக்கும் கழிவான தும்பினை - நன்றாக கழுவி எடுத்துச் சுமையாகக் கட்டி வைக்கவேண்டும்.இப்படிச் செய்கின்ற பொழுது தான் தும்பானது பாதுகாப்பாயும் தரம் குறையாததாயும் இயற்கையான நிறம் மாறாததாயும்  இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  கழிவுத்தும்புதானே என்று எண்ணிவிடவே கூடாது.அந்தத் தும்பினுக்கு தண்ணீரைத் தெளித்து தரையில் பரப்பி மூங்கில் தடியினால் நான்கு அல்லது ஐந்துபேர் சேர்ந்து தரையில் பரப்பி அடிக்க வேண்டும்.நீரை நன்றாக விட்டு தும்பினை அடித்தால்த்தான் மென்மையாக வரும். அதுமட்டுமல்ல கைக்கு வசதியாகவும் இருக்கும்.இப்படி அமைவதால் கயிறு உறிதியானதாயும் பார்க்கக் கவர்ச்சி யாகவும் அமையும் என்பது முக்கியமான கருத்தாகும்.

    இப்படிப் பெறப்படும் தும்பினால் கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் வடக்கயிறு என்றால் என்ன வென்று பார்ப்போம்.இந்தக் கயிறு நான்கு பிரிவடம் ஆறு பிரிவடம் மூன்று பிரிவடம் என்று பல வகைகளில் அமைகிறது.வடக்கயிறு திருத்தலில் சில விளக்கங்கள் சொல்லப்படுகின் றன.நான்கு பிரிவடம் என்றால் நான்கு சல்லை விடவேண்டும்.ஒரு சல்லையில் நான்கு பிரிவுகள் இருக் கும்.எட்டு பிரிவடம் என்றால் அதில் எட்டு சல்லை விட வேண்டும். ஒரு சல்லையில் நான்கு பிரி இருக்கும்.மேலும் இடையில் ஒரு பிரியை தனியே விட வேண்டும்.இந்த முறைகளைக் கையாண்டு தேவையான கயிறுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

     குடிக்கயிறு பலவிதங்களில் பயன்படும் கயிறாக இருக்கிறது. கருப்பட்டிக் கொட்டான கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் பந்தல் வேலைகள் செய்யும் பொழுது சாரங்களை இணைப்புச் செய்ய வேண்டி வருகிறது. அதற்கும் இக்கயிறு பயனாகி நிற்கிறது. மேலும் - வெற்றிலைக் கூடைகளைக் கட்டவும்அளவாய் எடுக்கப்படும் தும்பினைக் கட்டவும் , பயனாகி நிற்கிறது.இவற்றைவிட இன்னுமொரு வகையிலும் பயனாகி நிற்கிறது.அதாவது , கயிறுமூலம் ஏறும் முறையில் மரத்தை இணைக்கவும் பயனாகி நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  தென்னையின் தும்பினால் கயிறு திரிப்பதும். , அதனைப் பயன்படுத்தி வருவதுந்தான் எமக்கெல்லாம் நன்றாகவே தெரிந்த விடயமாகும். தென்னை மட்டுந்தான் கயிற்றினைத் தருகிறது என்று எண்ணி விடாதீர்கள் - பனையும் தென்னைக்கு ஈடாகத் தும்பினையும் தந்து , அதனால் கயிற்றினையும் தந்தே நிற்கிறது என்பதைக் கட்டாயம் சொல்லித்தானே ஆக வேண்டும்.ஏனென்றால் பனை கற்பகதரு அல் லவா ! கேட்டதை எல்லாம் , விரும்பியதை எல்லாம் கொடுக்கும் நிலையில் விளங்குகிறதல்லவா !

  பனந்தும்புக்கு நல்ல வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. அதுவும் கறுப்புத் தும்புக்கு சிறப்பான இடம் இருக்கிறது.இந்த வகையான தும்பினை ஒவ்வொரு இறக்குமதியாளருமே பெரிதும் விரும்பியே நிற்கிறார்கள் என்பது கருத்திருத்த வேண்டிய விடயமாகும்.உற்பத்தி அளவில் இவ்வகைத் தும்பினை எடுப்பதுதான் சிரமமாய் காணப்படுகிறது.

  இயற்கையாய் கிடைக்கும் பனந்தும்பினுக்குப் போட்டியாக , செயற்கை முறையினாலாகிய தும்பும் சந்தைக்கு வருகிறது. செயற்கைத் தும்பினை ஆபிரிக்காஇலத்தீன் அமெரிக்காபோன்ற நாடுகள் தயாரி க்கின்றன.இப்படியான ஒரு போட்டி நிலை வெளிநாட்டுச் சந்தையில் காணப்படுவதால் - பனந்தும்பினை உற்பத்தி செய்யும் இலங்கைஇந்தியா போன்ற நாடுகள் பனந்தும்பு உற்பத்தியில் மிகவும் கவனத்தை  எடுக்க வேண்டியது அவசியமான நிலையாகவே காணப்படுகிறது அத்துடன் பனந்தும்பின் மீதான  தங்க ளின் கவனத்தை மிகவும் சிரத்தையுடன் அணுகவேண்டிய நிலையும்  ஏற்பட்டிருக்கிறது என்பது மனங் கொள்ளத்தக்கதாகும்.

  பனந்தும்புத் தொழிலில் தமிழ்நாட்டில் பல தொழிலாளர்கள் ஈடுப்பட்டு உழைக்கிறார்கள் என்பது முக்கிய விடயமாகும். இலங்கையில் இத்தொழிலில் காட்டப்படும் அக்கறை தமிழ்நாட்டின் அளவுக்கு இல்லை என்றுதான் அறிந்திட முடிகிறது. இத்தொழிலில் ஈடுபடுவதை சற்றுத் தாழ்வாகப் பார்க்கும் நிலையும் இதற்குக் காரணமாய் ஆகி நிற்கிறதோ என்றும் சிதிக்க வைக்கிறது. நல்ல வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித்தரும் வாய்பு பனந்தும்புக்கு வாய்த்திருக்கிறது. இதனைக் கருத்தில் கொள்ளுதல் அவசியமேயாகும்.பனந்தும்பினை ஏற்றுமதி செய்து முன்னிலை நின்ற நாடு என்னும் பெருமையினைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் ஈழமணித் திருநாடு மீண்டும் முன்னிலைக்கு வந்திடல் வேண்டும். கற்பகதருவாம் பனை வடக்கிலும் கிழக்கிலும் வரமாய் வந்து அமைந்திருக்கிறது. உங்களுக்கு வேண்டி யதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று - வழங்கிடும் வள்ளல் தன்மையில் பனைகள் அத்தனையும் நிமிர்ந்து நிற்கின்றன என்பதையும் கருத்திருத்துவது அவசியமேயாகும்.

 


No comments: