அவுஸ்திரேலியத் தமிழ்
இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் 08 ஆம் திகதி (08-06-2019) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தமிழ் - சிங்கள இலக்கிய மொழிப்பரிவர்த்தனை
தொடர்பான கருத்தரங்கு
- கண்காட்சி - காணொளிக்காட்சி என்பன மெல்பனில்
வேர்மண் தெற்கு கல்வி நிலையத்தில் ( Vermon South Learning Centre ) சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும்.
முகவரி: Vermon South
Learning Centre - Karobran Drive, Vermon South , Victoria - 3133
இலங்கையிலும் புகலிடத்திலும் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் - சிங்கள இலக்கிய
மொழிப்பரிவர்த்தனை பணிகள் தொடர்பான தகவல் அமர்வாகவும் இடம்பெறவுள்ள இந்நிகழ்ச்சியில், மெல்பனில் வதியும் தமிழ் - சிங்கள எழுத்தாளர்கள் மத்தியில் கலந்துரையாடலும் இடம்பெற்று, எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றியும் ஆராயப்படும்.
கலை, இலக்கிய ஆர்வலர்கள்
அழைக்கப்படுகின்றனர்.
No comments:
Post a Comment