இலங்கைச் செய்திகள்


புரா­தன விநா­யகர் ஆல­யத்­தை ஆக்­கி­ர­மித்து விகாரை அமைப்­பது அநீ­தி­யான செயற்­பாடு

கன்னியா பிள்ளையார் ஆலயம் அகற்றப்பட்டமைக்கு இந்துக்குருமார் அமைப்பு கண்டனம்

  ''வவுனியா வரவேற்கிறது'' வளைவை ஆக்கிரமித்துள்ள படையினர் 

 ஐ.எஸ்க்கு எதிராக யாழில் வெள்ளியன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்

செய்திகளுக்காகச் சென்ற ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி: திடுக்கிட வைக்கும் காரணி

ஆசிரிய சமூகத்தை இழிவுபடுத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

யாழில் அதிகரித்துள்ள போலி காணி ஆவணங்கள்

சீனாவின் திட்டங்களுக்கு பாதுகாப்பு:இலங்கை படையினருக்கு பயிற்சி

சுற்றுலாத்துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடியை குறைக்க விசேட வேலைத்திட்டம்

டிசம்பர் 7 இல் ஜனாதிபதி தேர்தல் !

சிவாஜிலிங்கம் மீதான பயங்கரவாத வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சஹ்ரானின் மடிக்கணிணி, பெருந்தொகைப் பணம் மீட்பு

பெண் ஊழியர்கள் சேலை தவிர்ந்த வேறு ஆடைகள் அணிய முடியாது சுற்றறிக்கை வெளியானது

தேசிய அடையாள அட்டையில் கொண்டுவரப்படவுள்ள திடீர் மாற்றம்

77 வெளிநாட்டு அகதிகள் வவுனியாவில்  குடியமர்த்தப்பட்டனர்




புரா­தன விநா­யகர் ஆல­யத்­தை ஆக்­கி­ர­மித்து விகாரை அமைப்­பது அநீ­தி­யான செயற்­பாடு

29/05/2019 கன்­னியா வெந்நீ­ரூற்று, புரா­தன விநா­யகர் ஆல­யத்­தை ஆக்­கி­ர­மித்து விகாரை அமைக்கும் செய­லுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.
இது குறித்து மாமன்றம் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்ள­தா­வது;
ஆண்­டுகள் பல கடந்­தாலும், ஆட்­சிகள் பல மாறி­னாலும் இந்நாட்டில் வாழும்­இந்­துக்கள் மீது மத ­ரீ­தி­யாக ஏதோ ஒரு வகையில் அடக்­கு­மு­றை­களும் துன்­பு­றுத்­தல்­களும் அதர்­ம­மான செயல்­களும் நடந்து கொண்­டே­யி­ருக்­கின்­றன.
இந்­நாட்டின் அர­சாங்கம் 2015ஆம் ஆண் டில் நல்­லாட்சி என்ற வாச­கத்­துடன் ஆட்­சிப் ­பொ­றுப்­பி­ல­மர்ந்­த­ போது, இந்­நாட்டில் நல்­லி­ணக்கம் உரு­வாகி சமா­தான சக­வாழ்வு மலரும் என்ற பெரும் நம்­பிக்கை தமிழ் மக்­க­ளுக்கு இருந்­தது. ஆனால் அரசோ, அரச நிறு­வ­னங்­களோ செயற்­பட்டு வரும் முறை­யா­னது, தமிழ் மக்­களின் அந்த நம்­பிக்­கையைக் குறைத்து இல்­லாமற் செய்­வ­து­போல் உள்­ளது. ஈழத்­தி­ரு­நாட்டின் பல­ ப­கு­தி­க­ளிலும் இந்­து­ மத தொன்­மைச்­ சின்­னங்கள் காணப்­ப­டு­கின்­றன. அச் சான்­றுகள் காலத்­துக்கு முந்­ திய வர­லாற்றைப் பறை­சாற்றி நிற்­கின்­றன. இவற்­றை­யெல்லாம்  மாற்­றி­ய­மைத்து, அவற்றைப் பௌத்த சின்­னங்­க­ளாக திரி­பு­ப­டுத்தி, வர­லாற்றை மாற்றும் கைங்­க­ரி­யத்தை தொல்­லியற் திணைக்­களம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. 
ஓர் அரச திணைக்­களம் என்ற வகையில் அது, இந்நாட்டு மக்­க­ளுக்கு இன-­, ம­த,-­மொழி வேறு­பா­டின்றிச் செய­லாற்ற வேண்­டி­யது சட்­டத்­தின்­படி கட்­டா­ய­மா­ன­தாகும். 
தொல்­லியல் திணைக்­களம் ஆக்­கி­ர­மித்­துள்ள இந்து ஆல­யங்கள் மற்றும் தமி­ழரின் புரா­தன வாழ்­வி­டங்கள் தொடர்பில் பல ­த­ட­வைகள் அர­சுக்கு முறை­யிட்டும் அர­சாங்­கமும் பாரா­மு­க­மாக இருந்து வரு­கின்­றது. இது எமது மக்­களை வேத­னை ­கொள்ளச் செய்­துள்­ளது.
திரு­கோ­ண­மலை சிவன் ஆலயம், கன்­னியா வெந்நீ­ரூற்­றுகள் ஆகிய கிழக்­கு­ மா­காண இடங்­க­ளிலும், வடக்கில் மன்னார் திருக்­கே­தீச்­சரம், செம்­மலை நீரா­வி­ய­டிப்­ பிள்­ளையார் ஆலயம், வெடுக்­கு­நா­ரி­மலை எனப் பல வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடங்கள் தொல்­லியல் திணைக்­க­ளத்தால் பட்­டி­யற்­ப­டுத்­தப்­பட்டு, அங்கு பௌத்த விகா­ரைகள் அமைப்­ப­தற்கு திணைக்­களம் நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ உத­வி ­வ­ரு­கின்­றது.
இந்­த­ வ­கை­யில்தான், திரு­கோ­ண­மலை, கன்­னியா வெந்நீ­ரூற்று பிள்­ளை­யார் ­கோவில் அமைந்­துள்ள காணியும் தொல்­லி­யல் ­தி­ணைக்­க­ளத்தால் புரா­தன இட­மாக பட்­டி­யற்­ப­டுத்­தப்­பட்டு அந்தப் பிள்­ளையார் கோவில் கட்­டிட வேலை­க­ளுக்கு தடைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அதே­வேளை, அரு­கி­லுள்ள வில்கம் விகா­ரா­தி­பதி  தலை­மையில் அந்தக் காணியில் அடாத்­தாக குடி­யேறி விகாரை அமைக்கும் பணி­களில் மும்­மு­ர­மாக ஈடுபட்டு வருகின்றனர். 
இச்செயற்பாடுகள் தொடர்பில் அகில இலங்கை இந்து மாமன்றம் தனது வன்மையான கண்டனங்களைத் தெரி விப்பதுடன், எமது உரிமைகளை மீட்டு எமது பாரம்பரிய சின்னங்களைப் பேணுவதற்கு மாமன்றம் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்காது என்பதையும் தெரி வித்துக் கொள்கின்றோம்.   நன்றி வீரகேசரி 








கன்னியா பிள்ளையார் ஆலயம் அகற்றப்பட்டமைக்கு இந்துக்குருமார் அமைப்பு கண்டனம்

29/05/2019 கன்னியா பகுதியில் பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டமைக்கு கண்டனத்தையும் மனவேதனையும் இந்துக்குரமார் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இச்சம்வம் தொடர்பில் குறித்த அமைப்பின் தலைவர் கே.வி.கே.வைத்தீஸ்வரக்குருக்கள் வெளியிட்டள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க' என்னும் தத்துவத்திற்கு அமைவாக உலகவாழ் மக்கள் அனைவரும் தமது வாழ்வியலை நடத்திவருகின்றார்கள்.
எமது இலங்கை திருநாட்டில் இந்துக்களின் வழிபாட்டிடங்கள் சார்ந்து இலங்கை தொல்லியல் திணைக்களம் அண்ணளவாக எழுபதிற்கும் மேற்பட்ட பகுதிகளை அடையாளமிட்டு தனது பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இவை எமது வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த நிலையில் காணப்படுகின்றது.
மிக அண்மையில் கிழக்கு திருகோணமலை பகுதியிலுள்ள கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதியில் பலவித விரும்பத்தகாத செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
வரலாற்றுச் சிறப்பு மிக்க மிகப் புராதனமான கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் அமைந்திருந்த விநாயகர் ஆலயம் அப்பகுதியைச் சார்ந்த பௌத்த வழிபாட்டிட துறவி ஒருவரின் தலைமையில் நகர்த்தப்பட்டு அதன் அத்திபாரம் கிளறப்பட்டு அண்மையில் உள்ள கிணற்றில் இடப்பட்டதாக அறிகின்றோம்.
இந்து மக்கள் கௌதம புத்தபெருமானின் போதனைகளுக்கு மாற்றுக்கருத்து கொண்டவர்கள் அல்லர்.அவரின் அத்துவ சிந்தனைகளை ஏற்றுக்கொண்டவர்கள். இந்த சூழலில் மேற்குறித்த பகுதியில் நடைபெற்று வருகின்ற செயற்பாடுகள் கௌதம புத்தபகவானின் போதனைகளை மீறுவதாக நாம் கருதுகிறோம்.
இவ்வாறு வரம்பு மீறி நடைபெறும் செயற்பாடுகளை இலங்கை இந்துக்குருமார் அமைப்பானது மிகவும் வன்மையாக கண்டிப்பதுடன் மனவேதனையையும் பகிர்ந்து கொள்கின்றது.
தொடர்ந்து வரும் காலங்களில் இவ்வாறான சூழல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பிரதேச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள் அனைவரினதும் கடமையல்லவா?
ஆகவே விரைவில் உரிய சாத்தியமான இந்துமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றார்கள் எனக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி  







  ''வவுனியா வரவேற்கிறது'' வளைவை ஆக்கிரமித்துள்ள படையினர் 

29/05/2019 வவுனியா மூன்று முறிப்புப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வவுனியா வரவேற்கின்றது என்று எழுதப்பட்டுள்ள வளைவு கடந்த சில தினங்களாக படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு படையினரைச் சித்தரித்தும் தனிச்சிங்கள மொழியில் எழுதப்பட்டு வளைவு ஒன்று நிரந்தரமாக சீமெந்தினால் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் மக்கள் பிரதிநிதிகள் கவனத்திற்கொள்ளவில்லை என்று மக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
தென்பகுதியிலிருந்து கண்டி வீதிவழியாக வவுனியாவிற்கு வருபவர்களை வரவேற்கும் பிரதான வளைவு வவுனியா நகருக்குட்பட்ட மூன்றுமுறிப்பு பகுதியில் நிரந்தரமாக நீண்டகாலமாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அண்மைக்காலமாக அதற்கு முன்பாக சில அடி தள்ளி நிரந்தரமாக கம்பியினால் வளைவு ஒன்று அமைக்கப்பட்டு படையினரைச்சித்தரிக்கும் படங்களுடன் ஊருக்குள் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவோம் என்று தனிச்சிங்கள மொழியில் மட்டும் எழுதப்பட்ட வாசகத்துடன் நிரந்தரமாக அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இச் செயற்பாடானது ஒரு இனத்தின் மீது ஆக்கிரமிப்பு தன்மையை வெளிக்காட்டியுள்ளது. இவ்விடயத்தில் வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் வாதிகள் பிரதேச சபை உறுப்பினர்கள் எவரும் வாய் திறந்து தட்டிக்கேட்கவில்லை என்றும் இவ்விடயத்தில் கண்டுகொள்ளாத்தன்மையுடன் செயற்படுவதாகவும் வன்னியைப் பாதுகாக்கும் மக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
தமிழ் தெற்கு சிங்கள பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இவ்வாறு  தனிச்சிங்களத்தில் வளைவு அமைக்கப்பட்டு வவுனியாவை வரவேற்கும் வளைவை மறைக்க முற்பட்டுள்ளதையும் ஆக்கிரமிப்புத் தன்மையையும் அவதானிக்க முடிந்துள்ளது இவ்விடயத்தில் வடமாகாண ஆளுநர் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு வன்னியைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிவருகின்றனர்.
யுத்தம் நிறைவுற்ற பிற்பாடு வடபகுதியில் சிங்கள மேலாதிக்கம் தலையெடுக்கத் தொடங்கியுள்ளதை இவ்வளைவு மேலும் உறுதிப்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
நன்றி வீரகேசரி 







 ஐ.எஸ்க்கு எதிராக யாழில் வெள்ளியன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்

28/05/2019 ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்புக்கு எதிராக யாழ்ப்பாணம் மாநகரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் ஐந்து சந்திப் பகுதியில் நடத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் கூடும் இஸ்லாமியர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக ஐந்து சந்திக்குச் சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களில் 250 இற்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்து பாதிக்கப்பட்டனர். இந்தத் தாக்குதல்களுக்கு சிரியாவைத் தளமாகக் கொண்ட சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் உரிமை கோரியிருந்தது.
இதனையடுத்து புத்தளம் உள்ளிட்ட நாட்டில் சில இடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..  நன்றி வீரகேசரி 






செய்திகளுக்காகச் சென்ற ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி: திடுக்கிட வைக்கும் காரணி
28/05/2019 நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் செய்திசேகரிக்க சென்ற முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் கே .குமணன் மீது  கொக்கிளாய் பொலிஸ் பொறுப்பதிகாரியால் தாக்குதல் நடத்தப்பட்டு கேவலமாகபேசி அச்சுறுத்தலும்விடுக்கபட்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெறுள்ளது. 
பழையச் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த பிக்கு ஒருவர் அடாத்தாக விகாரை அமைத்துள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட  நீதிமன்றில் பிள்ளையார் ஆலயதர்ப்புக்கும் விகாராதிபதிக்கும் இடையில் வழக்கு ஒன்று நடைபெற்று தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் நேற்றையதினம் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு வழிபாட்டுக்கும் சிரமதான வேலைகளுக்கும்  சென்ற செம்மலைகிராம் மக்கள் பிக்குவின் முறைப்பாட்டுக்கு அமைவாக ஆலய வளவில் வைத்து குற்றவாளிகள் போல் விசாரிக்கப்பட்டதோடு இடையூறுக்கும் உள்ளாகியிருந்தனர் .
இந்நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பில் நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் இன்றையதினம் நகர்த்தல் பத்திரம் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது . இதில் உடனடியாக பிள்ளையார் ஆலயத்துக்கு மட்டும் பௌத்த பிக்குவால்  பொருத்தப்பட்டுள்ள  இரகசிய கெமராக்களை பொலிஸாரால் அகற்றுமாறும் ஏற்கெனவே தீர்ப்பில் சொல்லப்பட்டதுபோன்று கணதேவி தேவாலயம் என பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த பிக்குவால் எழுதப்பட்ட பெயரை மாற்றி "நீராவியடி பிள்ளையார்   ஆலயம் " என நேற்றையதினமே பெயரை எழுதுமாறு மன்று கட்டளையிட்டிருந்தது .
இதனையடுத்து நீதிமன்றின் கட்டளைப்படி நடைபெறும் வேலைகளை செய்தி அறிக்கையிடுவதற்காக சென்ற சுயாதீன ஊடகவியாளர் க .குமணன் மீது அங்கே கடமையில் இருந்த கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடகவியலாளரை தகாத கெட்ட வார்த்தைகளால் திட்டி புகைப்படக்கருவியை தட்டிவிட்டு தாக்கியதுடன் மிகவும் கீழ்த்தனமான வார்த்தைப்பிரயோகங்களால் திட்டி ஊடகப்பணியையும் கேவலப்படுத்தும் விதமாக நடந்து ஊடகப்பணியை செய்ய விடாது இடையூறை ஏற்படுத்தியிருந்தார் . 
தொடர்ந்து அவ்விடத்துக்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தகாத வார்த்தைகளால் குறித்த ஊடகவியலாளரை திட்டியதோடு ஊடகவியலாளரின் முகம் முன்பாக சென்று கைத்தொலைபேசியால் புகைப்படங்களை எடுத்து மிரட்டும் விதமாக நடந்ததோடு "பொய்சொல்லும் தமிழ் ஊடகவியலாளர்கள் " என திட்டியதோடு ஊடகவியலாளரின் பணிக்கும் இடையூறை ஏற்படுத்தியிருந்தார் .
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து முல்லைத்தீவு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு முறைப்பாடு ஒன்று குறித்த ஊடகவியலாளரால் வழங்கப்பட்டுள்ளது .
நேற்றுமுன்தினம் குறித்த நீராவியடி பிள்ளையார்  ஆலயத்துக்கு சென்ற செம்மலைகிராம மக்கள் பௌத்த பிக்குவின் முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரால் நிலத்தில் இருத்திவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதோடு இடையூறுகளுக்கும் உள்ளாகியிருந்தனர் .
இந்த சம்பவங்கள் தொடர்பில் குறித்த ஊடகவியலாளர்  குமணன் செய்தி அறிக்கையிட்டு அவை செய்திகளாக  வெளிவந்ததோடு அந்த செய்தி நேற்றையதினம் வழக்கிற்கு ஆதரமாக நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் அதன் தொடர்ச்சியான சம்பவங்களை செய்தியாக வெளிக்கொணர சென்ற ஊடகவியலாளர் குமணனுக்கு இவ்வாறு பொலிஸாரால் அச்சுறுத்தலும் தாக்குதலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி 






ஆசிரிய சமூகத்தை இழிவுபடுத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

28/05/2019 வவுனியா கலாச்சார மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச்சங்க பொதுக் கூட்டத்தில் ஆசிரியர் சமூகத்தை இழிவுபடுத்தியது.
அத்துடன் விபச்சாரிகள் என்று தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக காலை 9மணியளவில் ஒன்றிணைந்த ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
ஆசிரியர்களாக நாங்கள் எவ்வாறான ஒரு பொறுப்பினை கையில் எடுத்திருக்கின்றோம் எங்களை விபச்சாரி என்று மன நோகடித்தல் இந்தச் சமூகம் தனது கடமையை விட்டுச் சென்றால் இப்பாடசாலை என்னாவது? .
மூவாயிரம் மாணவர்களின் கல்வி நிலை என்னாவது? அதிபர் மீது தவறு இருக்கலாம், ஆசிரியர்களில் தவறு இருக்கலாம், மாணவர்களில் தவறு இருக்கலாம் தவறு செய்யாத மனிதர்கள் இல்லை. தவறு இருந்தால் தகுந்த முறையில்  அவர்களுக்குத் தண்டனைகள் வழங்கப்படலாம்.
அதன் ஆதாரங்களை நிரூபிக்கின்ற வகையில் தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்கலாம் நாங்களும் அவற்றிற்கு மாறாக நிற்கவில்லை. ஆனால் பெரிய ஒரு சமூகத்தில் பெரிய ஒரு சபையில் ஒரு தனிமனிதனை அவர் எங்களின் பாடசாலையின் அதிபர் அவர் தண்டிக்கப்பட்டது எங்கள் அனைவருக்கும் கவலையளிக்கின்றது. சரியான ஒரு அவமானம் ஆசிரியராக நாங்கள் அவமானமடைந்திருக்கின்றோம். 
பெண் ஆசிரியராக அவமானமடைந்திருக்கின்றோம் இதற்கான இந்தக்குற்றங்களை முன்வைத்தவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும். அவதுரையில் நாங்கள் மாணவர்களிடம் செல்ல முடியவில்லை. எந்த முகத்தை வைத்துகொண்டு செல்வது? மாணவர்கள் எங்களிடம் கேள்வி கேட்கின்றார்கள். என்ன பதிலை சொல்வது? எமது கல்வித்திணைக்களம் இதற்கு தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு இதனுடன் தொடர்புடைய ஆசிரியர்களை தற்காலிகமாக இடை நிறுத்தவேண்டும். இதுவே எங்கள் அனைவரின் கோரிக்கையாகும் என்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 
கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டபோது பாடசாலைக்குச் சென்ற வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்னன் பாடசாலை அதிபருடன் மேற்கொண்ட கலந்துரையாடலையடுத்து 30நிமிடம் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட ஆசிரியர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு வகுப்புக்களுக்குச் சென்றனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குத் கருத்துத் தெரிவித்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியலாயத்தின் ஆசிரியரும் இலங்கை ஆசிரியர்கள் சேவைகள் சங்கத்தின் செயலாளருமான சிவகரன் பாடசாலையின் பழைய இரும்பு, சத்துணவில் பாரியளவில் முறைகேடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
த. அமிர்தலிங்கம் இந்தப்பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து பெருந்தொகையான நிதியும் பொருந்தொகையான பாடசாலையின் பொருட்களும் குறிப்பாக பழைய இரும்புகள் மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவில் நிதிகள் திருடப்பட்டுக்கொண்டிருக்கின்றது இவ்விடயத்தில் அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை பாடசாலை ஒரு அசாதாரண சூழ்நிலையில் இருக்கின்றது. 
ஆசிரியர்கள் தமது கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்கள் அது அவர்களுடைய கருத்து அவர்கள் தமது கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கு அதிகாரமிருக்கின்றது எங்களுடைய சங்கம் என்ற ரீதியிலும் ஆசிரியர் என்ற ரீதியிலும் இந்த இலவசக் கல்வியை அனுபவித்து வருகின்ற பிள்ளைகளினுடைய தேவைகளையும் அடிப்படையாகக் கொண்டு சங்கம் என்ற ரீதியில் நான் ஒரு விடயத்தை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 
பல இலட்சம் ரூபா நிதி ஊழலாகியுள்ளது சமையலில் ஏராளமான நிதிகள் ஊழலாகியுள்ளது பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் நிறைய நிதிகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது நிதிகள் சூறையாடப்பட்டுள்ளது பாடசாலையிலுள்ள பழைய இரும்புகள் போன்ற பொருட்கள் அதிபரினால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 
ஆங்கில மொழி மூலம் நடைபெற்ற வகுப்புக்கள் அதிபரினால் தடை செய்து நிறுத்தப்பட்டுள்ளது. அவ்வளவு மாணவர்களும் வெளியே நிற்கின்றனர். அதிகாரிகளின் உறவினருக்கு அனுமதி வழங்கப்படுகின்றது அனுமதியின்போது ஊழல் இடம்பெறுகின்றது. பாடசாலையிலிருந்த பெருமளவு இரும்பு விற்பனை செய்யப்பட்டு அரசாங்க பொதுக்கணக்கில் இடப்படவில்லை இவ்வாறு எண்ணிலடங்காத தவறுகளை அதிபர் மேற்கொண்டு வருகின்றார். 
ஆசிரியர்களை கீழ்த்தரமான வார்த்தைகள் கொண்டு சர்வதிகாரியாக நடத்துகின்றார். தன்னை எதிர்ப்பவர்களை இடமாற்றம் செய்வது இவ்வாறு பாரதூரமான விளைவுகளை அதிபர் ஏற்படுத்துகின்றார். 
இதைப் புரிந்துகொண்ட பாடசாலைச் சமூகமும் பாடசாலை அபிவிருத்திச்சங்கமும் நேற்று கலாச்சார மண்டபத்தில் கூடி இவரைப் பதவி விலக்குவதற்குத் தீர்மானம் எடுத்த பிறகு இன்று அதிபர் மீண்டும் பாடசாலைக்கு வந்து நேற்று பதவி விலகுவதாக அறித்து மீண்டும் வந்து ஆசிரியர்களை வகுப்பறைக்குச் செல்லவிடாது தனக்கு ஆதரவாக பகிஷ்கரிப்பு மேற்கொள்ளுமாறு ஒன்றுகூட்டி பாடசாலைக்கும் கல்வித்துறைக்கு முரணான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
தேசிய மட்டம் என்று பல மட்டங்களுக்கு முறையிட்டும் உடனடியாக இது குறித்த விசாரணையை நடத்தி அரச பொது நிதியைத்திருடுகின்ற எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் தண்டணைக்குட்படுத்த வேண்டும். என்று எங்களுடைய சங்கம் சார்பாகவும் பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் என்ற ரீதியிலும் கோரிக்கை விடுகின்றேன். என்று மேலும் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி 







யாழில் அதிகரித்துள்ள போலி காணி ஆவணங்கள்

27/05/2019 யாழில் போலி ஆவணங்கள் தயாரித்து காணிகள் விற்கப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு யாழ்.மாவட்ட செயலகம் கோரியுள்ளது. 
காணிகளுக்கு போலி உறுதிகள் முடித்து காணிகள் விற்கும் செயற்பாடுகள், வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசித்து வருவோரின் காணிகளை கையகப்படுத்தல் போன்ற செயற்பாடுகள்  அதிகரித்துள்ளன. 
அவ்வாறு கையகப்படுத்தும் காணிகளை குறைந்த விலைகளுக்கு விற்பனை செய்கின்றனர். அக்காணிகளை வாங்கியவர்கள் பின்னர் அதனை சட்டரீதியாக , சட்டத்தரணிகள் ஊடாக தமக்கு பெயர் மாற்றம் செய்ய முற்படும் போதே தாம் ஏமாற்றப்பட்ட விடயம் அவர்களுக்கு தெரியவருகின்றன. 
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரையான கால பகுதியில் காணி பதிவாளரின் சார்பாக மேலதிக காணி பதிவாளர் நீதிமன்றில் 4 வழக்குகளை எதிர்கொண்டு உள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 







சீனாவின் திட்டங்களுக்கு பாதுகாப்பு:இலங்கை படையினருக்கு பயிற்சி

29/05/2019 சீனா­வுடன் அண்­மையில் செய்து கொள்­ளப்­பட்ட பாது­காப்பு ஒத்துழைப்பு உடன்­பாட்­டுக்கு அமைய, இலங்கை இரா­ணுவ மற்றும் காவல்­து­றையைக்கொண்ட முத­லா­வது அணி பயிற்­சிக்­காக அடுத்த வாரம்  பீஜிங் செல்­ல­வுள்­ளது.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அண்­மைய சீனப் பயணத்தின்போது, சீன ஜனா­தி­பதி ஷி ஜின்­பிங்­குடன் நடத்­திய பேச்­சுக்­களையடுத்து, மே 14ஆம் திகதி இந்த பாது­காப்பு ஒத்துழைப்பு உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.
திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­படும் இடங்­க­ளுக்கு பாது­காப்பு வழங்குதல் உள்­ளிட்ட விட­யங்­களைக் கொண்­ட­தாக இந்தப் பயிற்சிகள் அமைந்­தி­ருக்கும் என்று கூறப்­ப­டு­கி­றது.
இது­கு­றித்து சீன தூத­ரக பேச்­சாளர் ஒருவர் தகவல் வெளி­யி­டு­கையில்,
“இலங்கை படை­யி­னரின் மற்றும் பொலி­சாரின் ஆற்­றலைக் கட்­டி­யெ­ழுப்பும் உத­வி­ளையும், தேசிய பாது­காப்பை உறுதிப்படுத்துவதற்­கான கரு­வி­க­ளையும் சீனா வழங்கும்.
காவல்­துறை மற்றும் பாது­காப்பு படை­யி­னரின் முதல் தொகு­தி­யி­ன­ருக்­கான பயிற்சித் திட்டம் அடுத்­த­வாரம் ஆரம்­ப­மாகும்.
நாங்கள் எமது இரா­ணு­வத்­தி­னரை இங்கு அனுப்பப் போவதில்லை.அதற்குப் பதி­லாக, இலங்கை படை­யி­னரின் ஆற்றலை கட்டியெழுப்பவுள்ளோம்.
எமது பாது­காப்பை அவர்கள் மேற்­கொள்­வார்கள் என்று நம்புகிறோம். எனவே, எமது படை­யி­னரை இங்கு அனுப்ப வேண்டிய தேவை இல்லை. இது எமது கொள்கை இல்லை. இதற்கு மேலதிகமாகவும் எம்மிடம் பயிற்சி வாய்ப்புகள் உள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 






சுற்றுலாத்துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடியை குறைக்க விசேட வேலைத்திட்டம்

29/05/2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலினால் சுற்றுலாத்துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளைக் குறைப்பதற்கான மேம்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 
அதன்படி சுற்றுலாத்துறையின் அனுபவமிக்க உலகளாவிய பிரதிநிதிகள் மூலம் 45 நாட்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்கு குறுகிய கால பொதுமக்கள் இணைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் இலங்கையில் சுற்றுலா சின்னத்தை  மீண்டும் பிரபல்யப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இது 6 மாத காலப்பகுதி முழுவதும் விளம்பர பிரச்சார வேலைத்திட்டமாக  நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சினால் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.   நன்றி வீரகேசரி 





டிசம்பர் 7 இல் ஜனாதிபதி தேர்தல் !
01/06/2019 எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, புதுடில்லியில் வைத்து நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ளது.
இலங்கையிலுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும், ஆளுங்கட்சியாக இருக்கலாம் எதிர்க்கட்சியாக இருக்கலாம் வேட்பாளர்களை தெரிவு செய்யவில்லை. 
இதேவேளை, தேர்தலில் பங்கு கொள்வதா? என்பது குறித்த எனது முடிவை உடனடியாகவே அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதனால் எனக்கும் இது குறித்து அவசரமில்லை.எஏனைய கட்சிகள் தெரிவு செய்யும் வரை நானும் எனது தீர்மானம் குறித்து காத்திருப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 










சிவாஜிலிங்கம் மீதான பயங்கரவாத வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

31/05/2019 சிவாஜிலிங்கம் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும்  ஜூலை மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  
2018 ஆம்  ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரது பிறந்தநாளை கொண்டாடினார் என்றும் விடுதலை புலிகள் தொடர்பான பதாகை ஒன்றும் வைத்திருந்தார் என்றும் குற்றஞ்சாட்டி முன்னாள் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வல்வெட்டி துறை பொலிஸார் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கில் இன்று முன்னிலையாகுமாறு எம். கே. சிவாஜிலிங்கத்திற்கு பருத்தித்துறை  நீதவான் நீதி மன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.
இதனால் இன்று மன்றுக்கு முன்னிலையாகிய எம். கே. சிவாஜிலிங்கத்தை மன்று வளாகத்தில் வைத்து குறித்த விடயம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குமாறு நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது.
இதனடிப்படையில் எம். கே. சிவாஜிலிங்கம் மன்று வளாகத்தில் வாக்குமூலம் வழங்கினார். குறித்த பயங்கரவாத குற்றச்சாட்டு வழக்கிற்கு மூத்த சட்டத்தரணி சிறிகாந்தா ஆஜராகியிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம்  திகதிக்கு தள்ளிப் போடப் பட்டுள்ளதாகவும் . இதேவேளை குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்படாமலிருக்க முன் பிணை கோரிய மனு சட்டத்தரணி நடராசா சுஜீவன் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு மீதான விசாரணை ஜூன் மாதம் 7 ஆம்  திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 











சஹ்ரானின் மடிக்கணிணி, பெருந்தொகைப் பணம் மீட்பு

31/052019 தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பிரதான சூத்திரதாரியும் தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவருமான  சஹ்ரானின் மடிக் கணிணி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று பொலிஸரால் மேற்கொள்ள்பட்ட சுற்றிவளைப்பின் போது அக்கரைப்பற்று, பாலமுனை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து குறித்த மடிக்கணினியும் 35 இலட்சம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புபட்ட ஒருவரின் பணம்  சந்தேகத்திற்கிடமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து அம்பாறை மாவட்டம் பாலமுனை ஹுசைனியா நகரப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சோதனையிட்டபோது அங்கிருந்து பெருந் தொகை பணமும் நகைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது சுமார் 35 இலட்சம் ரூபா பணமும்  ஒரு தொகை நகைகளும் கைப்பற்றப்பட்டதுடன், அட்டாளைச்சேனை பிரதேச ஆற்றங்கரைப் பகுதியில் வீசப்பட்டிருந்த மடிக் கணிணியொன்றும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, அம்பாறை அரச புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களும் அம்பாறை பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து இன்று மேற்கொண்ட சுற்றி வளைப்புத் தேடுதலைத் தொடர்ந்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் தொடர்புபட்ட அம்பாறை மாவட்ட பிரதான செயற்பாட்டாளர் என சந்தேகத்தின் பேரில் கடந்த வாரம் கல்முனை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட ஒருவரது உறவினரின் வீட்டிலிருந்தே இப்பணத் தொகையும் நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. வீட்டின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் சந்தேத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத்துடன் தொடர்பு பட்டவர் எனக் கூறப்படும் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் பாலமுனை ஹுசைனியா நகரப் பிரதேசத்தில் வசித்து வரும் தமது உறவினரிடம் வைத்திருக்குமாறு குறித்த பணத்தினையும் நகைகளையும் கையளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் தமது உறவினரிடம் மடிக் கணிணியொன்றையும் வைத்திருக்குமாறு வழங்கியபோதிலும் அதனை ஏற்க அவரது உறவினர் மறுப்புத் தெரிவித்ததையடுத்து அதனை அவர் எடுத்துச் சென்று அட்டாளைச்சேனை பிரதேச ஆற்றங்கரையினை அண்டிய பகுதியில் வீசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வீசப்பட்ட மடிக் கணிணி நீரில் மூழ்கியிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   நன்றி வீரகேசரி 








பெண் ஊழியர்கள் சேலை தவிர்ந்த வேறு ஆடைகள் அணிய முடியாது சுற்றறிக்கை வெளியானது

31/05/2019 அரச ஊழியர்களின் உடை தொடர்பாக பொதுநிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் புதிய பொது நிருவாக சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
13/2019 இலக்கம் 2019.05.29. திகதியிடப்பட்ட அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால் அமைச்சுக்களின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள இந்த சுற்றறிக்கையின் படி குறிப்பாக பெண் ஊழியர்கள் சேலை அணிய வேண்டுமென வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.
அதாவது அபாய போன்ற உடைகளுக்கு தடைவிதிக்கும் வகையிலேயே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி 











தேசிய அடையாள அட்டையில் கொண்டுவரப்படவுள்ள திடீர் மாற்றம்

31/05/2019 நாட்டு மக்கள் அனைவரினதும் தேசிய அடையாள அட்டையில் அவரவர் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் நோக்கில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக ஆட்பதிவு திணைக்களம் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார். பழைய தேசிய அடையாள அட்டையில் நிலவிய பல குறைப்பாடுகள் புதிய தேசிய அடையாள அட்டையின் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புகைப்படத்தை மாற்றுதல் அல்லது முத்திரையை நீக்கி தகவல்களை மாற்றுதல் போன்றவற்றை புதிய அடையாள அட்டையில் செய்ய முடியாது என்றும் ஆணையாளர் நாயகம் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் தேசிய அடையாள அட்டை தொடர்ந்தும் நபர்களின் தகவல்கள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டது. எதிர்காலத்தில் டீ.என்.ஏ தரவு அல்லது கைவிரல் அடையாளம் போன்றவை இயற்கை தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் கை விரல் மாத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு தற்பொழுது சட்ட ரீதியில் அனுமதி கிடைத்திருப்பதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 











77 வெளிநாட்டு அகதிகள் வவுனியாவில்  குடியமர்த்தப்பட்டனர்

31/05/2019 பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திற்கு இன்று  அதிகாலை ஒரு மணியளவில் 77 அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பாக்கிஸ்தான் அகதிகள் 45 பேர் , ஆப்கானிஸ்தான் அகதிகள் 32 பேர்  பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்டமாக குறித்த அகதிகள் வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் கடந்த 22ஆம் திகதி 35 அகதிகள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 77 அகதிகள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 
மேலும் இந்த விடயம் குறித்து செய்திகளை சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது  நன்றி வீரகேசரி 






No comments: