அற்ப திருப்தி – குறுங்கதை - யோகன், கன்பரா

Image result for mcdonald

.

அது சனிக்கிழமை. காலை பத்து மணி.

கடகடத்து ஓய்ந்த வோஷிங் மெஷினில் பிழிந்த உடுப்புகளை பிளாஸ்டிக் கூடைக்குள் குவித்து ஜேசனின் அறை  வாசல் வரை தூக்க முடியாமல்  அதை  இழுத்து வந்தார் தவநாயகம். 
“இந்தா  தோய்த்த உடுப்புகளைக் கொண்டு போய் காய விடு.” 
“ “
பூட்டியிருந்த அறைக்குள் எந்த சத்தமுமில்லாததால்  சுட்டு விரலால் கதவில் தட்டினார். இரவு வேலையால் பிந்தி வந்தவன் இன்னும் நித்திரை கொள்கிறானா ? ஒருவேளை காதுக்குள் ஹெட் போனைப் போட்டுக் கொண்டு பாட்டுக் கேட்கிறானா?
ஒரு நாள் போட்ட  உடுப்புகளை கூட கொண்டு வந்து சத்தம் போடாமல் வோஷிங் மெஷினுக்குள் போட்டு விடுகிறான்.  அதை விட  கிரிக்கட் ஆடிவிட்டு வந்து போட்டிருக்கும் சேறு அப்பிய வெள்ளை உடுப்புகள் வேறு.  ஜெயராணி  ஏழு  மணிக்கு வேலைக்குப் போகுமுன்னே  அதை அதை பிரித்து வேறு கூடைக்குள் போட்டு விட்டு வோஷிங் மெஷினைப்  போட்டு விடும்படி தவநாயகத்திடம்  சொல்லி விட்டுப் போனாள்.  அவள் வேலை பார்ப்பது முதியோர் பராமரிப்பு நிலையமொன்றில். இந்த நீண்ட  வார விடுமுறையில் பலர் லீவில் நிற்பதால் அவளுக்கு வேலை அதிகம் என்று இரவெல்லாம் அவரிடம் கால் வலிஇ  முதுகு வலி  என்று வேறு  சொல்லிக்கொண்டிருந்தாள்.
தவநாயகத்துக்கும்இ ஜெயராணிக்கும்  நீண்ட காலம் பிள்ளைகளில்லாது பிறகு  பிறந்த ஏக புத்திரன் ஜேசன்.
அறைக்கு வெளியில் நின்றவாறே
"உடுப்புகளை காய போடாமல் வெளியே போய் விடாதே. நல்ல வெயில் எறிக்குது " என்று உரத்துக் கத்தினார்.. 

"  "
சற்றுப் பொறுத்து மீண்டும் கதவைத் தட்டினார் தவநாயகம். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை தோழன். அதட்டிப் பேச முடியாது. தோளில் தட்டித்தான் சொல்ல வேண்டும். அதுவும் முடிந்தால்தானே. கதவில்தான் தட்டிச் சொல்ல முடிகிறது அவரால்.
அதுக்கும்  ஒரு காரணம் இருந்தது. அன்றொரு நாள் திடீரென்று போய் அதிரடியாய் அவர் கதவைத் திறக்க ஜேசன் சீறி விழுந்தது  அவருக்கு இன்னும் நினைவில் நிற்பதுதான் காரணம்.
கொஞ்சம் தொனியை மாற்றி கதைப்போமென எண்ணிய தவநாயகம்  
"எல்லாம் உன்னுடைய உடுப்புதான் இதிலை கூடவாக இருக்கு.  தவறாமல் காய போட்டிடு என்ன ?. "
“  “
மூன்று முறையும் மௌனமே பதிலானது.
இந்த நேரத்தில் போனொன்று வந்தது. அதை எடுத்தால் வழமையாக வரும் டெலிபோன் கொம்பனி  ஒன்றின் தலையிடி. ஓரிரு பொய்களை சொல்லி அதிலிருந்து தப்பி விட்டு நிமிர்த்து பார்த்தால்  இப்போது ஜேசன் கதவு அரைவாசி திறந்திருந்தது. உள்ளே எட்டிப் பார்க்க  படுத்திருந்த படி தலையணையை கட்டில் சட்டத்தில் வைத்துக் தலையை உயர்த்தி கொண்டு மடிக் கணினியில் ஆழ்ந்தபடி காதில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான்.
இதுதான் தருணமென அவர் பேசத் தொடங்கு முன்னே 
"நோ ஐ  ஆம்  பிஸி அப்பா" என்றான்.
இவ்வளவு நேரமும் அவர் கத்தியது கேட்டதா இல்லையா என்று ஆய்வு செய்வதிலும் பார்க்க இப்பவாவது பதில் வந்ததே என்று திருப்திப்படவேண்டியதுதான்.
‘நாளைக்கு மழை வந்தால் உடுப்பு காயாது. பிறகு உனக்குப் போடவும் உடுப்பிராது.”
குரலை  சற்று உயர்த்தி சொல்லி விட்டு உடுப்புக் கூடையை ஜேசனின் கதவை மறித்தாற்  போல் வைத்துவிட்டு தோட்டத்துக்கு போனார்.
பொதுவாக தோட்டத்தில் ரிலாக்சாக வேலை செய்யும் தவநாயகம் அன்று கொஞ்சம்   ஓவராகத்தான் நடந்து கொண்டார்.    மரக்கறி போட்டிருந்த சின்ன பாத்தியில் பூசிணியொன்று ஆக்கிரமித்து படர வெளிக்கிட்டத்தை கண்டு ஈவிரக்கமின்றி அதை  பிடுங்கியெறிந்தார்.  நின்ற ஓரிரு  கத்தரிக்  கன்றுகளின் இலைகளை அரித்திருந்த  நத்தைகளை  கொல்வதற்கான நஞ்சு மருந்தினை   கொஞ்சம் அதிகமாகவே   விசிறினார்.
இப்போ காரொன்று புறப்படும் சத்தம் கேட்டது. வேலியோரமாக நடந்து வீட்டுக்கு முன் பக்கம் வர ஜேசன் காரிலேறிப் புறப்பட்டு விட்டது தெரிந்தது.  
கையில் ஒட்டியிருந்த  மண்ணை வெளியிலிருந்த பைப்பில் கழுவிவிட்டு உள்ளே ஜேசனின் அறைக்குப் போய் பார்த்தார்.
கூடை  கதவுக்கு ஓரமாக தள்ளப் பட்டிருந்தது. உடுப்புகள் அப்படியே கிடந்தன. ஜெயராணி வந்தால் அப்பாவும்இ மகனும் வீட்டிலை இருந்தும்  என்ன பயன் என்று சொல்லாமல் விடமாட்டாள். தவநாயகம் ஒருகணம்  ஊழ்வினைப்பயனை  நொந்தபடி கூடையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு உடுப்புக் காயும் கொடியை நோக்கிப் பயணமானார்.
உடுப்புகளை உதறிக் காயப் போட்டு முடித்ததும் அடுத்து ஒரு வேலை அவருக்குக் காத்திருந்தது. அதுதான் ஜெயராணி   குளிரூட்டியிலிருந்து எடுத்து வெளியே வைத்து விட்டுப் போயிருந்த விறைத்த கோழி. அதை வெட்டிக் கறி  வைக்க வேண்டும். 
அதைத் தறித்துக் துண்டாடி குளிரூட்டிக்குள் மீண்டும் தள்ளி விட்ட பிறகுதான் அவர் கோபம் தணிந்தது.   ஜெயராணி   இரவுதான் சாப்பாடுக்கு வருவாள். ஜேசனும் பெரும்பாலும் இரவில்தான் வீட்டுக்கு வருவான்.  இப்போ எதுக்கு சமையல்?. ஒரு முடிவுக்கு வந்தவராக  மக் டொனல்ட்ஸ் பக்கம் காரை செலுத்தினார்.
கார் பார்க்கில் இடம் பிடிக்க சில நிமிடங்களாகியது. உள்ளே நெரிசலான கூட்டம். ஓடர் கொடுப்பதற்கு பெரிய வரிசை காத்திருந்தது.  அவர்  முறை வரும்  வரையில்  மேலே டிவி திரையில் ஓடிக்கொண்டிருந்த பலவகை உணவுகளையும் விலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
தவநாயகத்துக்கு  முன்னால்  நின்ற பெண் ஓடர் கொடுத்து விட்டு விலகிப் போக 
"ஐயா உங்களுக்கு எப்படி உதவி செய்யலாம்”  என்ற பரிச்சசயமாக குரல் பவ்வியமாக கேட்டது.
அது வேறு யாருடையதுமில்லை.  கேட்டது  அவரது தவப் புதல்வன்தான்.  அங்குதான் ஜேசன் பகுதி நேர வேலை செய்கிறான்.   அவர் வரிசையில் பின்னால் நின்றதை எதிர் பார்த்திருக்க மாட்டான்.  ஆனால் அவருக்கு ஏற்பட்டது ஒரு அற்ப திருப்தி.
"ஒரு பிக் மக் மீல் " என்று பையனிடம் சுடச்சுட  ஓடர் போட்டார் தவநாயகம்.  

அது சனிக்கிழமை. காலை பத்து மணி.
கடகடத்து ஓய்ந்த வோஷிங் மெஷினில் பிழிந்த உடுப்புகளை பிளாஸ்டிக் கூடைக்குள் குவித்து ஜேசனின் அறை  வாசல் வரை தூக்க முடியாமல்  அதை  இழுத்து வந்தார் தவநாயகம்.
“இந்தா  தோய்த்த உடுப்புகளைக் கொண்டு போய் காய விடு.”
“ “
பூட்டியிருந்த அறைக்குள் எந்த சத்தமுமில்லாததால்  சுட்டு விரலால் கதவில் தட்டினார். இரவு வேலையால் பிந்தி வந்தவன் இன்னும் நித்திரை கொள்கிறானா ? ஒருவேளை காதுக்குள் ஹெட் போனைப் போட்டுக் கொண்டு பாட்டுக் கேட்கிறானா?
ஒரு நாள் போட்ட  உடுப்புகளை கூட கொண்டு வந்து சத்தம் போடாமல் வோஷிங் மெஷினுக்குள் போட்டு விடுகிறான்.  அதை விட  கிரிக்கட் ஆடிவிட்டு வந்து போட்டிருக்கும் சேறு அப்பிய வெள்ளை உடுப்புகள் வேறு.  ஜெயராணி  ஏழு  மணிக்கு வேலைக்குப் போகுமுன்னே  அதை அதை பிரித்து வேறு கூடைக்குள் போட்டு விட்டு வோஷிங் மெஷினைப்  போட்டு விடும்படி தவநாயகத்திடம்  சொல்லி விட்டுப் போனாள்.  அவள் வேலை பார்ப்பது முதியோர் பராமரிப்பு நிலையமொன்றில். இந்த நீண்ட  வார விடுமுறையில் பலர் லீவில் நிற்பதால் அவளுக்கு வேலை அதிகம் என்று இரவெல்லாம் அவரிடம் கால் வலி,  முதுகு வலி  என்று வேறு  சொல்லிக்கொண்டிருந்தாள்.
தவநாயகத்துக்கும், ஜெயராணிக்கும்  நீண்ட காலம் பிள்ளைகளில்லாது பிறகு  பிறந்த ஏக புத்திரன் ஜேசன்.
அறைக்கு வெளியில் நின்றவாறே
"உடுப்புகளை காய போடாமல் வெளியே போய் விடாதே. நல்ல வெயில் எறிக்குது " என்று உரத்துக் கத்தினார்..
"  "
சற்றுப் பொறுத்து மீண்டும் கதவைத் தட்டினார் தவநாயகம். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை தோழன். அதட்டிப் பேச முடியாது. தோளில் தட்டித்தான் சொல்ல வேண்டும். அதுவும் முடிந்தால்தானே. கதவில்தான் தட்டிச் சொல்ல முடிகிறது அவரால்.
அதுக்கும்  ஒரு காரணம் இருந்தது. அன்றொரு நாள் திடீரென்று போய் அதிரடியாய் அவர் கதவைத் திறக்க ஜேசன் சீறி விழுந்தது  அவருக்கு இன்னும் நினைவில் நிற்பதுதான் காரணம்.
கொஞ்சம் தொனியை மாற்றி கதைப்போமென எண்ணிய தவநாயகம் 
"எல்லாம் உன்னுடைய உடுப்புதான் இதிலை கூடவாக இருக்கு.  தவறாமல் காய போட்டிடு என்ன ?. "
 
மூன்று முறையும் மௌனமே பதிலானது.
இந்த நேரத்தில் போனொன்று வந்தது. அதை எடுத்தால் வழமையாக வரும் டெலிபோன் கொம்பனி  ஒன்றின் தலையிடி. ஓரிரு பொய்களை சொல்லி அதிலிருந்து தப்பி விட்டு நிமிர்த்து பார்த்தால்  இப்போது ஜேசன் கதவு அரைவாசி திறந்திருந்தது. உள்ளே எட்டிப் பார்க்க  படுத்திருந்த படி தலையணையை கட்டில் சட்டத்தில் வைத்துக் தலையை உயர்த்தி கொண்டு மடிக் கணினியில் ஆழ்ந்தபடி காதில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான்.
இதுதான் தருணமென அவர் பேசத் தொடங்கு முன்னே
"நோ ஐ  ஆம்  பிஸி அப்பா" என்றான்.
இவ்வளவு நேரமும் அவர் கத்தியது கேட்டதா இல்லையா என்று ஆய்வு செய்வதிலும் பார்க்க இப்பவாவது பதில் வந்ததே என்று திருப்திப்படவேண்டியதுதான்.
‘நாளைக்கு மழை வந்தால் உடுப்பு காயாது. பிறகு உனக்குப் போடவும் உடுப்பிராது.”
குரலை  சற்று உயர்த்தி சொல்லி விட்டு உடுப்புக் கூடையை ஜேசனின் கதவை மறித்தாற்  போல் வைத்துவிட்டு தோட்டத்துக்கு போனார்.
பொதுவாக தோட்டத்தில் ரிலாக்சாக வேலை செய்யும் தவநாயகம் அன்று கொஞ்சம்   ஓவராகத்தான் நடந்து கொண்டார்.    மரக்கறி போட்டிருந்த சின்ன பாத்தியில் பூசிணியொன்று ஆக்கிரமித்து படர வெளிக்கிட்டத்தை கண்டு ஈவிரக்கமின்றி அதை  பிடுங்கியெறிந்தார்.  நின்ற ஓரிரு  கத்தரிக்  கன்றுகளின் இலைகளை அரித்திருந்த  நத்தைகளை  கொல்வதற்கான நஞ்சு மருந்தினை   கொஞ்சம் அதிகமாகவே   விசிறினார்.
இப்போ காரொன்று புறப்படும் சத்தம் கேட்டது. வேலியோரமாக நடந்து வீட்டுக்கு முன் பக்கம் வர ஜேசன் காரிலேறிப் புறப்பட்டு விட்டது தெரிந்தது. 
கையில் ஒட்டியிருந்த  மண்ணை வெளியிலிருந்த பைப்பில் கழுவிவிட்டு உள்ளே ஜேசனின் அறைக்குப் போய் பார்த்தார்.
கூடை  கதவுக்கு ஓரமாக தள்ளப் பட்டிருந்தது. உடுப்புகள் அப்படியே கிடந்தன. ஜெயராணி வந்தால் அப்பாவும், மகனும் வீட்டிலை இருந்தும்  என்ன பயன் என்று சொல்லாமல் விடமாட்டாள். தவநாயகம் ஒருகணம்  ஊழ்வினைப்பயனை  நொந்தபடி கூடையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு உடுப்புக் காயும் கொடியை நோக்கிப் பயணமானார்.

No comments: