மட்டக்களப்பில் முருகபூபதியின் நூல்கள் அறிமுகம்


படைப்பிலக்கியவதியும்  ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி எழுதிய சொல்லவேண்டிய கதைகள் மற்றும் சொல்லத்தவறிய கதைகள் ஆகிய நூல்களின் அறிமுகவிழாவை மட்டக்களப்பில்  எதிர்வரும் 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  மாலை 4.00 மணிக்கு  “கா “  இலக்கிய வட்டமும்  “அரங்கம்  வார இதழும் இணைந்து  நடத்துகின்றன.
மட்டக்களப்பு -  பார் வீதியில் 227 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள அரங்கம்  கேட்போர் கூடத்தில்  அரங்கம் ஆசிரியர் திரு. பூபாலரத்தினம் சீவகன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழா, திருமதி ம. விஜயேஸ்வரியின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும்.
மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்துகொள்ளும் இவ்விழாவில் தகைமைசார் பேராசிரியர் செ. யேகராசா,  சமூக கலை இலக்கிய வெளியில் முருகபூபதி  “ என்ற தலைப்பில்  உரையாற்றுவார்.
கிழக்கு பல்கலைக்கழக மாணவி செல்வி டிலோஷினி மற்றும் திரு. வி. கௌரிபாலன், செல்வி நிலாந்தி சசிக்குமார் ஆகியோர் நூல் மதிப்பீட்டுரைகளை நிகழ்த்துவர்.
நூல்களின்  ஆசிரியர் முருகபூபதி ஏற்புரையும் திரு. சொ. பிரசாத் நன்றியுரையும் நிகழ்த்துவர்.
கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.


-->
No comments: