யாழ்.நல்லூர்க் கந்தசுவாமிக் கோவில் திருவிழாவும் இலங்கைப் பொருளாதாரமும்


05/08/2019 உலகில் ஒவ்வொரு நாடும் தனது பொருளாதார மற்றும்நாட்டு மக்களின் நன்மைகளினை கருத்திற்கொண்டு பல்வேறு செயற்பாடுகளினை தொடர்தேர்ச்சியாக செய்துவருவதனை நாம் பார்த்து வருகின்றோம்.
உதாரணமாக, உலகக் கிண்ண கிரிக்கெட், உலகக் கிண்ண கால்பந்தாட்டம் மற்றும் ஒலிம்பிக் போன்ற பெரிய அளவிலான நிகழ்வினை ஒவ்வொரு நாடும் தனது நாட்டினில் நடத்துவதற்கு போட்டி போட்டுக்கொன்று முன்வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அதற்கு மிகமுக்கியக்காரணமாக இருப்பது அவ்வாறு நடாத்தும் எந்தவொரு நாட்டிக்கும் ஏற்படும் நேரடியான மற்றும் மறைமுகமான பல்வேறு பொருளாதார நன்மைகள் சொல்லிலடங்கா. 
அதேபோல ஒரு சந்தர்ப்பத்தினை ஒவ்வொரு வருடமும் எமது சிறிய மற்றும் அழகிய இலங்கை நாட்டிற்கும் மக்களுக்கும் கடவுளாகவே அருள்பாலித்து கொடுத்திருக்கும் ஓர்சிறந்த வாய்ப்பே நல்லூர்கந்தசுவாமி கோவில் திருவிழா ஆகும். இதுவே முதலிடத்தினை பெறுகின்றது.
நாம் ஒவ்வொருவரும் கடந்த பல தசாப்தங்களாக ஏதோ ஒருவகையில் பல்வேறுபட்ட துன்பங்களினை அனுபவித்துவந்தே உள்ளோம். அப்படிப்பட்ட எங்களெல்லோரையும் தட்டிகொடுப்பதற்காகவே இந்த நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா அமைகின்றது. இப்படிப்பட்ட ஒரு மிகச்சிறந்த அருமையான சந்தர்ப்பத்தினை நாம் ஒவ்வொருவரும் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதன்வாயிலாக பல்வேறுபட்ட நன்மைகளினை நாம் நிச்சயமாகபெற்றுக்கொள்ளமுடியும்.
நல்லூர் கந்தனுக்கு திருவிழா நடைபெறும்போது நாம் இவ்வாறு அதனை ஒரு சிறந்த திருவிழாவாக எமக்கு அமைத்துக் கொள்ளமுடியும் என்பதனை இப்போது பார்ப்போம்.

Good Number of Days
நல்லூர்கந்தனுக்கு திருவிழாவானது தொடர்ச்சியாக 25 நாட்கள் நடைபெறுகின்றன, இதற்கு முன்னும் பின்னுமாக 10 நாட்கள் சேர்த்துகொண்டோமாயின் 45நாட்கள் அடங்கலாக ஒன்றரை  மாதம் வருகின்றது. இந்த கால அளவானது மிகவும் முக்கியமான, பயன்பாடான, அனுகூலமான காலமாக அமைகின்றது.
Able to Participate by many People
இந்த நல்லூர்கந்தன் திருவிழாநிகழும் காலமானது மிகவும் சிறந்த மற்றும்எல்லோரும் பங்குபெறக்கூடிய சிறந்த காலமாகஅமைகின்றது. ஏனெனில் ஆவணி மாதம் 2 ஆம்  தவணைக்கான பாடசாலை விடுமுறை காலமாகவும், தரம் 5 மற்றும் (க.பொ.த). உயர்தர பரீட்சை முடிவடைத்து மாணவர்களும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் சந்தோஷமாக வெளிவரும் ஒரு சிறந்தம் இது. 
Excellent Climate
அதுமட்டுமல்லாது நல்லூர் கந்தன் திருவிழாநடைபெறும் காலங்களில் சிறந்த காலநிலையும் அந்த கந்தன் அருளால் அமைந்து விடுகின்றது. அதிகவெயிலோ மழையோ இல்லாமல், மக்களின் இயல்பு வாழ்விற்கு ஏற்றதாக அமையும் ஒரு சிறந்த காலமாக இருப்பதனையும் நாம் காலாகாலம் கவனித்துள்ளோம்.
Occasion After and Before Nallur Festival
நல்லூர்கந்தன் திருவிழா நடைபெறுவதற்கு முன்னைய மற்றும் பின்னைய காலத்தினை ஒட்டியே ஏனைய பல கோவில்களின் திருவிழாக்களும் வருகின்றது. உதாரணமாக நயினை நாகபூஷணி அம்மன் திருவிழா, மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திருவிழா மற்றும் சன்னதி முருகன் ஆலய திருவிழா, வல்லிபுர ஆழ்வார் கோவில் திருவிழா என்றுகூறிக்கொண்டே போகலாம்.
Foreigners too able to participate
நல்லூர் கந்தன் திருவிழா நடைபெறும் இதேகாலத்தில் பல வெளிநாடுகளில் பாடசாலை விடுமுறை காலமாகவும், காலநிலை காரணமாக அங்கு வசிக்கும் நம்மவர்களும் மற்றும் அந்நிய நாட்டு பிரஜைகளும் வரக்கூடிய காலமாகவும் அமைந்துள்ளது. இது ஒரு மிகச்சிறந்த சந்தர்ப்பமாகும். ஏனெனில் புதிய வெளிமாவட்ட, வெளிநாட்டு வரவுகள் மிகவும் முக்கியமாக இருப்பதேயாகும்.மற்றும் இந்த காலங்களில் இலங்கையில் Off Season ஆக இருப்பதுடன், இலங்கை வந்து செல்லக்கூடிய விமானக் கட்டணகளும் மலிவாகக் காணப்படுவதும் (Air fares are comparably Cheap) நல்லதொரு வரப்பிரசாதமாக இருக்கின்றது.
கலை –கலாசாரம் – விழுமியம் வெளிகொண்டுவரும் மற்றும் பயிலும் நிகழ்வுவாக அமைகின்றது.
நல்லூர்கந்தன் திருவிழா போன்ற பிரம்மாண்டமான தமிழ் மற்றும் சைவ நிகழ்வுகள் வாயிலாக தமிழ்கலை –கலாசாரம் – விழுமியம்போன்ற எமது பண்பாட்டு வாழ்வுமுறைகளினை எமது வருங்கால சந்ததியினர்களிற்கும், ஏனைய உலக நாடுகளுக்கும் தெரியப்படுத்தும் ஒரு மிகச்சிறந்த நிகழ்வாகவே தெய்வாதீனமாக அமைகின்றது.
மேற்கூறிய சாதக நிலையினை இலங்கை நாடும்நாட்டுமக்களும் நல்லமுறையினில் பயன்படுத்துவோமாயின் எண்ணிலடங்கா நன்மைகளினை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
உதாரணத்திற்கு- வியாபாரம் செய்கின்றவர்களுக்கு நல்ல சந்தைவாய்ப்பு, புதிய கேள்வி(Demand/ New Orders), புதிய சந்தை (New Opportunity) போன்ற நேரடி நன்மைகளினை பெற்றுக்கொள்ளமுடியும். புதிய தொழில் தொடங்குனர்களுக்கு சிறந்த சந்தைவாய்ப்பாகவும் ஏற்கனவே தொழில் செய்கின்றவர்களுக்கு தொழில் வளர்ச்சிக்கும் பேருதவியாக அமையும். அத்துடன் Hotel மற்றும் Stay Home போன்றதுறையினருக்கு நல்ல போக்கினை (Seasonal Demand) பெற்றுக்கொள்ள முடியும். பண்ட வியாபரத்திற்கு மட்டுமல்லாது சேவை வழங்கும் நிறுவனங்களும் நல்ல பலனை பெற்றுக்கொள்ள முடியும், உதாணரமாக வைத்தியத்துறை,உணவு, சுகாதாரம், நிர்மானத்துறை (கடை, பந்தல் சேவை). போக்குவரத்து (Vehicle Services & Hiring Business) போன்றவைஅவற்றில்சிலவாகும். அதுமட்டுமல்லாது உள்ளூர் உற்பத்திகளுக்கு நல்ல சந்தைவாய்ப்பு ஏற்படுகின்றன. உதாரணமாக பனை உற்பத்தி பொருட்கள், உள்ளூர் விவசாய பொருட்கள் போன்றவற்றினை குறிப்பிடலாம்.
இவ்வாறானதொரு சாதகமானநிலை, முழு இலங்கை வியாபாரத்திற்கும் ஏதோவொருவகையில் அனுகூலமாகவே இருப்பதனால் இந்த அரிய வாய்ப்பினை நாம் அனைவரும் நிச்சயமாக பார்வையாளராக இல்லது பங்காளியாக செயற்படுவதன் வாயிலாக எமதுதனிப்பட்ட வளர்ச்சியுடன், எமது  ஒவ்வொருவரினதும் ஊர், மாவட்டம், மாகாணமாக முழு நாட்டினையுமே சிறந்ததொரு வெற்றிப்பாதையினை நோக்கி கொண்டுசெலக்கூடியதாக ஒரு சிறந்த வாய்ப்பாக நல்லூர்கந்தன் திருவிழா அமைகின்றது.
நாம் செய்ய வேண்டியவை......
· எம்மை உடல், உள ரீதியாக தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
· போதிய நிதிநிலைமையினை துல்லியமாக கணிப்பிட்டு தேவைக்கேற்ப பெற்றுக்கொள்ளும் நிலையினை உருவாக்கிக்கொள்ளல் வேண்டும்.
· தேவையான மனிதவலு (Human Resources) இருக்கக்கூடியதாக பார்த்துக்கொள்ளல் வேண்டும்.
· எதிர்பாராத நிகழ்வுகளினை (Unexpected Events) முகம்கொடுக்கும் சாமர்த்தியத்தினை வளர்த்துகொள்ள வேண்டும்.
· ஏனைய காலகட்டங்களில் அதிகமாக கிடைக்கக்கூடிய பொருட்களினை சேமித்து அதிலிருந்து பயன்பெற்றுகொள்ளும் செயத்திட்டத்தினை முறையாக அமுல்படுத்தவேண்டும்.
· எக்காரணம் கொண்டும் பொருட்களினதும் சேவைகளினதும் தரம் குறையாவண்ணம் பார்த்துக்கொள்ளல் வேண்டும். (Quality First)
· பயன்படுத்தாமல் இருக்கும் நிலங்களை இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் குறிகியகால குத்தகைக்கு அல்லது வாடகைக்கு கொடுத்து மேலதிக வருமானத்தினை பெற்றுக்கொள்ளமுடியும்.
· தொழிலின்றி இருப்போர் தமக்கு முடியுமானதும் தெரிந்ததுமான முயற்சியில் ஈடுபடக்கூடிய பல்வேறு சந்தர்ப்பத்தினை பெறக்கொடியதாக இருக்கும். எனவே இந்த மாதிரியான அரிய வாய்ப்பினை நழுவவிடக்கூடாது.
· அன்றாடம் வேலைசெய்யும் நேரம் தவிர்ந்து மிகுதியாக நேரமிருப்பின் அதனை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
· “மக்கள் சேவையே மகேஸ்வரரின் சேவை” என்கின்ற வாக்கிற்கிணங்க சேவை செய்ய விரும்புவோர்கள் லட்சோபலட்சம் கலந்து சிறப்பிக்கின்ற இவ்வாறானதொரு புனித தருணத்தில் இலவசமாக தம்மால் முடிந்த சேவையினை வழங்கிமற்ற மனிதர்களுக்கு முன்னுதாரணமாக திகழமுடியும்.
எனவே சந்தர்ப்பங்களினை நல்லமுறையிலும் எமக்கு சாதகமான முறையிலும் பயன்படுத்துவதன் மூலமாக இலங்கையிலுள்ள ஒவ்வொருவரும் தனிநபர் வருமானத்தினை உயர்த்த முடிவதுடன் முழு இலங்கை நாட்டினையும் சிறந்த தன்நிறைவு பெற்ற செல்வந்த நாடாக வளர்ச்சி பெற நல்லூர்கந்தன் திருவிழா ஒரு சிறந்த வாய்ப்பாக இருப்பதனால் நீங்கள் எல்லோரும் பயன்பெற வேண்டுகின்றேன்.
A.G.S. சுவாமிநாதன் சர்மா நன்றி வீரகேசரி 


No comments: