கந்தனை நினைத்தால் நெஞ்சில்
கவலைகள் பறந்தே போகும்
வழியிலே மறைந்தே போகும்
அந்தமில் இன்பம் வந்து
ஆனந்தம் தந்தே நிற்கும்
கந்தவேள் பாதம் தன்னை
கட்டியே அணைத்து நிற்போம் !
சூரர்கள் போல எம்மை
சூழ்ந்திடும் பகைமை எல்லாம்
வேலவன் பெயரைக் கேட்டால்
விரைவிலே ஒழிந்து போகும்
வாழ்விலே வசந்தம் வீச
வள்ளியின் மணாளன் தன்னை
நாளெலாம் தொழுது நிற்போம்
நம்வாழ்வு உய்யும் அன்றோ !
சேவலாய் மயிலும் ஆக்கி
சிந்தையை திருத்த வைத்த
வேலவன் முகத்தைக் கண்டால்
விரைவிலே திருத்தம் காண்போம்
காலனும் நாட மாட்டான்
கடுநோயும் அணுக மாட்டா
சீலமாம் கந்தன் பாதம்
சிக்கெனப் பிடிப்போம் வாரீர் !
No comments:
Post a Comment