தமிழ் சினிமா - அயோக்யா திரைவிமர்சனம்


தெலுங்கில் சூப்பர்ஹிட் ஆன டெம்பர் படத்தினை தமிழில் ரீமேக் செய்து அயோக்கியா என்கிற பெயரில் தற்போது வெளிவந்துள்ளது. படம் எப்படி இருக்கு? வாருங்கள் பார்ப்போம்.
கதை:
சென்னையில் சட்டவிரோதமாக பல தொழில்கள் செய்து வரும் காளிராஜன் (பார்த்திபன்), தனக்கு இடைஞ்சலாக எந்த போலீசும் வரக்கூடாது என்பதற்காக மோசமான ஒரு இன்ஸ்பெக்டரை கொண்டுவரும்படி மினிஸ்டரிடம் கேட்கிறார். அவரும் கர்ணன் (விஷால்) தூத்துக்குடியில் இருந்து சென்னை நீலாங்கரைக்கு ட்ரான்ஸ்பர் செய்கிறார்.
பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையில் இருப்பவர் விஷால். முதலில் பணம் வாங்கிக்கொண்டு பார்திபனுக்கு உதவினாலும், ஒரு சமயத்தில் விஷால் பார்திபனின் 4 தம்பிகள் சேர்ந்து ஒரு பெண்னுக்கு செய்த கொடூரம் பற்றி தெரிந்து கொதித்தெழுகிறார்.
அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி ஆதாரம் திரட்டி அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா என்பது தான் மீதி படம்.
படத்தை பற்றிய அலசல்:
தினம்தோறும் பெண்கள் மீது நடக்கும் குற்றங்கள் பற்றி செய்திகள் வந்தவண்ணம் இருந்தாலும் அதை தடுக்க மிக கடுமையான தண்டனை மட்டுமே ஒரே வழி என்பதை வலியுறுத்தியுள்ளது படம்.
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் டெம்பர் படம் பார்த்தவர்களுக்கு விஷாலை அந்த ரோலில் பொறுத்தி பார்க்க சற்று சிரமம் இருக்கலாம். இருந்தாலும் விஷாலின் நடிப்பு முதல் பாகத்தில் நெருடலாக இருந்தாலும், இரண்டாவது பாகத்தில் பாராட்டும் அளவுக்கு உள்ளது.
தெலுங்கு படத்தை அப்படியே செராக்ஸ் காபி எடுத்திருந்தாலும், கிளைமாக்ஸில் பெரிய மாற்றத்தை செய்துள்ளனர். வசனங்களும் கிட்டத்தட்ட தெலுங்கில் இருந்து எடுத்தது தான் என்றாலும் பல வசனங்கள் படம் பார்ப்பவர்களை நிச்சயம் யோசிக்கவைக்கும்.
ஹீரோயின் ராஷி கண்ணாவுக்கு படத்தில் பெரிய வேலை இல்லை. விஷாலின் போலீஸ் ஸ்டேஷனில் நேர்மையான ஏட்டாக இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் ஈர்த்துள்ளார். நடிகர் பார்த்திபனின் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
கிளாப்ஸ்:
- தற்போது சமூகத்திற்கு தேவையான கதை. கதை தான் இந்த படத்தின் முதல் ஹீரோ.
- கிளைமாக்ஸ் ட்விஸ்ட்
- குறை சொல்ல முடியாத அளவுக்கு இருந்த ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை.
- விஷால் நடிப்பு
பல்ப்ஸ்:
- பரபரப்பே இல்லாமல் செல்லும் முதல் பாதி படம் என்பதை தவிர குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு படத்தில் பெரிய மைனஸ் எதுவும் இல்லை.
மொத்தத்தில் அயோக்யா தற்போதைய சமூகத்திற்கு சொல்லப்படவேண்டிய முக்கிய கதை.
நன்றி CineUlagam











No comments: