அவுஸ்திரேலியாவின் நவீன சிற்பி என்று வர்ணிக்கப்படும் பொப் ஹேய்க் (Bob Hawke) மறைந்தார்



அவுஸ்திரேலியாவின் 23 ஆவது பிரதமராக 1983 முதல் 1991 ஆம் ஆண்டு வரை செயலாற்றிய தொழிற் கட்சித் தலைவர் பொப் ஹேய்க் தனது 89 வது வயதில் நேற்று காலமானார்.

இவரது ஆட்சிக் காலத்தில் உலகப் பொருளாதார சமூகத்துடன் அவுஸ்திரேலியாவை இணைத்து இதன் வழி திறந்த பொருளாதார அமைப்பின் அடுத்த நிலைக்கு இட்டுச் சென்றதோடு, Medicare என்னும் அரச மருத்துவக் காப்பீட்டு முறைமையை அமுலாக்கி இந்த நாட்டின் குடிமக்களின் பெருவாரியான அபிமானத்தைப் பெற்றுக் கொண்டவர். சுற்றுச் சூழல் மீதான இவரின் கரிசனையும் அதன் வழியான செயற்பாடுகளும் குறிப்பிடத்தக்கவை.


“the most influential economic decisions of the 1980s were the floating of the Australian dollar and the deregulation of the financial system” என்று இவரை போல் கெல்லி என்னும் பொருளாதார வல்லுநர் மெச்சுகிறார்.

பொப் ஹேய்க் பிரதமராக இருந்த போது அரச கட்டுப்பாட்டில் இருந்த பெரும் நிறுவனங்களான Commonwealth Bank of Australia, Aussat , Qantas, CSL Limited ஆகிய நிறுவனங்களைத் தனியார் மயமாக்கியவர். அவுஸ்திரேலியாவின் இறக்குமதி வரி முறைமையில் சீர்திருத்தம் கொண்டு வந்ததோடு Fringe benefits tax, மற்றும் Capital gains Tax ஆகிய வரி முறைமைகளையும் அமலாக்கியவர். 

நான்கு தடவை பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்டதோடு, தொழிற்கட்சியின் சார்பில் நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். அவுஸ்திரேலியாவின் பிரதமராக அதிக காலம் இயங்கியவர் என்ற வகையில் மூன்றாவது நிலையில் இருப்பவர்.

டிசெம்பர் 9, 1929 ஆம் ஆண்டு Bordertown என்ற தெற்கு அவுஸ்திரேலிய நகரில் பிறந்த பொப் ஹேய்க் இற்கு நான்கு பிள்ளைகள் உண்டு. தனது இரண்டாவது துணையான Blanche d'Alpuget உடன் இறுதிக் காலத்தைக் கழித்தார்.

The things which are most important don't always scream the loudest. என்பது பொப் ஹெய்க் இன் பிரபல வாசகம்

செய்தித் தயாரிப்பு : கானா பிரபா

இலங்கையில் 83ஆம் ஆண்டுக்கலவரத்தில்பாதிக்கப்பட்டதமிழர்களுக்குப்புகலிடம்கொடுக்கவெனவிசேடவிசாவைஅறிமுகப்படுத்தியவர்அவுஸ்திரேலியாவில்இதற்குமுன்இதேமாதிரயானவிசேடவிசாபிரிவுஇரண்டுமுறையேவழங்கப்பட்டிருப்பது (2ஆம் உலகப்போரின் போது யூதர்களுக்கும்சிம்பாபேநாட்டின்வெள்ளையினத்தவருக்கும்குறிப்பிடத்தக்கது.


No comments: