.
எனக்கு கிரைஸ்ற்சேர்ச்சில் உள்ள University of
Canterbury இல் முதுமாணிப் பட்டப்படிப்பு படிக்க 80 களில் வாய்ப்பு கிடைத்தது. அது South Island இல் உள்ள ஒரு அழகிய நகரம். South Island இல்தான் உலகிலேயே அழகான இயற்கை எழில் கொண்ட இடங்கள் உள்ளன என்பது உலகம் முழுவதும் தெரிந்த விடயம்.
நெடுஞ்சாலையில் காரில் போகும்போது தூரத்தே தெரியும் செம்மறி ஆடுகளின் அழகே தனி. அடிக்கடி பூமி நடுக்கம் வருவதுண்டு. Auckland ,
Wellington போல் இல்லாமல் அங்கு மக்கள் தொகை மிகக்குறைவு. இங்குள்ள white kiwis மற்ற இனத்தவர்களுடன் சினேகிதமாக பழகுவார்கள்.
என்னுடன் படித்தவர்களில் ஒருவர் Mark. எப்போதும் நகைச்சுவையாக பேசுவார். ஒருதடவை என்னிடம் "உமக்குத் தெரியுமா நான் இனவாதி இல்லை ?" என்றார். அவர் பகிடியாக சொல்கிறர் என்று முதலில் புரியவில்லலை. பின்புதான் புரிந்தது அவருடைய surname என்பது Blackmore என்று.
இப்படி அமைதியாக இருந்த இடத்தில் அவுஸ்திரேலிய வலது சாரி பயங்கரவாதியின் கொடூரச்செயலால் பல முஸ்லீம் மக்கள் படு கொலை பட்டுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கோணர் அமைதியை விரும்பினாலும் தனி ஒருவனால் மட்டும் சமாதானத்தையும் சகவாழ்வையும் குலைக்கமுடியும் என்பதை ஜீரணிக்க முடியாமல் உள்ளது.
எனது
நண்பரொருவர்அண்மையில் கிரைஸ்ற்சேர்ச்சில் இடம் பெற்ற படுகொலைகளை கேள்விப்பட்டு “நாங்கள் வாழ்வது கலியுகம். மனிதனை மனிதன் கொல்வது சாதாரணமாகி விட்டது.” என்று ஒரு பதிவு பண்ணி இருந்தார்.
முன்னொரு காலத்தில் cannibalism (நரமாமிசம் உண்ணும் பழக்கம்) சில சமூகங்களிடையே இருந்து வந்தது.
குறிப்பாக தென்பசுபிக்கில் உள்ள பிஜி தீவுகளில் 18ம் நூற்றாண்டு வரை நரமாமிசம் உண்ணும் பழக்கம் இருந்து வந்ததற்க்கான ஆதாரங்கள் உள்ளன. இந்தப் பழக்கம் அந்நாட்டு மக்களின் சமூக மற்று சமய வழிபாடுகளுடன் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அம்சமாகவே இருந்து வந்தது.
பிஜியில் இருந்து வந்த நரமாமிசம் உண்ணும் பழக்கம் என்பது உணவுப்பற்றாக்குறையால் ஏற்பட்ட பழக்கம் என்று கூறமுடியாது.
மாறாக ஒரு தனிநபருக்கு (அல்லது ஒரு சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு) எதிராக கட்டவிழ்த்து விடப்படும் உச்சக்கட்டமானதும் கொடூரமானதுமான பழிவாங்கும் செயல் என கூறப்ப டுகிறது.
ராத்து
உந்ரே உந்ரே என்பவர் (Ratu Udre Udre -d sounds like ‘nd’ in
Fijian) Rakiraki என்ற நகரத்தில் 1800 களில் வாழ்ந்த ஒரு Fijian Chief.
Ratu என்றால் பிஜியில் உயர் சாதியில் (noble rank) உள்ளவர்களுக்கு வழங்கப்படும் கௌரவப் பெயர். அந்நாட்களில் இவர் ஒரு பயங்கரமான நரமாமிச உண்ணி. இவர் ஒருவரை சாப்பிட்டபின் ஒரு கல்லை ஒரு மரத்தடியில் வைப்பாராம். அவரது வாழ்வுக் காலத்தில், கற்களின் எண்ணிக்கையின் படி, அவர் சுமார் 999 (தொளாயிரத்து தொண்ணூற்றி ஒன்பது) பேரை சாப்பிட்டுள்ளார். இவரின் ஞாபகார்த்தமாக Rakiraki யில்
ஒரு
நினைவு தூபி அமைக்கப் பட்டுள்ளது.
ராத்து
உந்ரே உந்ரேயின் “உலக சாதனை” க்காக இவரின் பெயர் Guinness World Records இல்
Most Prolific Cannibal என்று பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரைப் பற்றி மேலும் அறிய இங்கே அழுத்தவும்:
No comments:
Post a Comment