.
அன்பாலயத்தின் இளம் தென்றல் 2019, 6ம் திகதி சனிக்கிழமை சிட்னி பஹாய் சென்டரில் மாலை 6 மணிக்கு ஆரம்பமானது. தமிழ் வாழ்த்தையும் தேசிய கீதத்தையும் ஈஸ்ட்வுட் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் பாடினார்கள்.
அபராஜிதன் தனது கணீரென்ற குரலில் நிகழ்வை தொகுத்து வழங்கியது மிக நன்றாக இருந்தது இளைஞர்களுக்கு இப்படியான சந்தர்ப்பங்களை வழங்கிய அன்பாலயத்திற்கு பாராட்டுக்கள்.
தொடர்ந்து இடம்பெற்ற டாக்டர் சிவரதி கேதீஸ்வரனின் மாணவர்களின் கானாமிர்தம் அருமையான சங்கீத இசை நிகழ்வும் வீணை இசையும், வயலின் இசையும் சேர்ந்து சபையோரை மகிழ்வித்தது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற டாக்டர் ஜசோதராபாரதி சிங்கராஜர் அவர்களின் மாணவர்களின் கண்கவர் நடனம் இடம்பெற்றது .
அத்தோடு சக்தி இசைக்குழுவின் இசை நிகழ்வில் அருமையான உள்ளூர் பாடகர்கள் பாடி சபையோரை கொள்ளை கொண்டார்கள். இந்தியாவில் இருந்து வருகைதரும் முழுநேர பாடகர்களுக்கு நாம் சளைத்தவர்கள் அல்ல என மிக அருமையான பாடல்களை இனிமையாக பாடினார்கள்.
புதுமையாக விளம்பர தாரர்களையும் அனுசரையாளர்களையும் நாடக பாணியில் நடிகையர் திலகம் மதுரா மகாதேவும் திரு ரவிசங்கரும் இணைந்து கொடுத்தது புதுமையாகவும் நகைச் சுவையாகவும் இருந்ததோடு மட்டுமல்லாது ஆதரவு கொடுக்கத் தவறிய ஏனைய சமூக அமைப்புக்களை தூண்டக் கூடிய வகையிலும் இருந்தது.
அன்பாலயம் தாயகத்தில் செய்கின்ற பல விடயங்களை வீடியோ காட்சியாக காட்டி எப்படி உதவலாம் என்பதையும் அழகாக காட்டினார்கள்.
மண்டபம் நிறைந்த மக்கள் வருகை தந்து அமைதியாக இருந்து நிகழ்ச்சிகளை ரசித்தது அன்பாலயத்தின் சிறப்பினை எடுத்துக் காட்டியது. அன்பாலயத்தின் சேவை தொடர்ந்து பல்கிப் பெருக வாழ்த்துக்கள் .
No comments:
Post a Comment