தமிழ் சினிமா - திமிரு புடிச்சவன் திரை விமர்சனம்   போலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்காத நடிகர்கள் இருக்க முடியாது. பல கதாபாத்திரங்களை தேடி ஹீரோக்கள் நடித்தாலும் போலிஸ் கதாபாத்திரம் எப்போதும் பேர் சொல்லும் விதமாக இருந்துவரும் ஒன்று. அந்த வகையில் போலிஸாக இப்போது வந்துள்ள விஜய் ஆண்டனி சாதாரண போலிஸா இல்லை திமிரு புடிச்ச போலிஸா என பார்க்கலாம்.

கதைக்களம்

விஜய் ஆண்டனி ஊரில் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து போலிஸாக பணியில் சேர்கிறார். அவருக்கு ஒரு தம்பி. அவ்வளவு தான் அவரின் குடும்பம். தம்பியின் மேல் அதிக அக்கறை இருந்தாலும் தவறுகளை தட்டி கேட்பதில் ஒரு போலிஸ் தான்.
திடீரென அவரின் தம்பி காணாமல் போக வருடங்கள் கடந்தோட ஒரு நாள் பணியில் அமர்த்தப்பட்டு புதிய ஊருக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராத ஒரு கொலை சம்பவம். இதை கண்டு அவர் அதிர்ச்சியுற கதை சூடுபிடிக்கிறது.
எதிர்பாராத ஒரு திருப்புமுனையாக அவர் மீது சக போலிஸான ஹீரோயின் நிவேதாவுக்கு காதல் வருகிறது. அடுத்தடுத்து சில அசம்பாவிதங்கள் நடக்க இதன் பின்னணியில் பெரும் ரவுடியாக சாய் தீனா இருக்கிறார். கொலைகளின் காரணம் என்ன, காணாமல் போன அவரின் தம்பி என்ன ஆனார்? என்பதே கதை.

படத்தை பற்றிய அலசல்

விஜய் ஆண்டனியின் படங்கள் என்றாலே அதற்கென ஒரு ரசிகர்கள் வட்டாரம் உண்டு. குறிப்பாக குடும்பத்துடன் பார்க்கலாம் என பலரும் இருப்பார்கள். தியேட்டர்களில் அவர்களை காணலாம். அவரும் அதைப்போல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்த முறையும் அவரின் படத்தில் செண்டிமெண்ட்ஸ், எமோஸனல் கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும் கடந்த படத்தை விட இந்த படம் ஓகே ரகம் தான் என்ன சொல்லவைத்திருக்கிறார். நல்ல திறமையுள்ள அவரை ஆக்‌ஷன் ரொமான்ஸ் படங்களில் எப்போது பார்க்கலாம் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும். அவர் நன்றாக நடிப்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஹீரோயின் நிவேதா பெத்து ராஜ் குறும்பான நடிப்பால் ஹீரோவை முந்துகிறார். அங்கங்கே காமெடிகளை இறக்கிவிடுகிறார். தியேட்டர்களில் பலரும் சிரிக்க தான் செய்தார்கள். இதனால் சில இடங்களில் கூடுதலாக ஸ்கோர் செய்கிறார்.
ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்லோமோசனாக தெரிந்தாலும் படத்தில் ஆங்காங்கே சிரிப்பை வரவைக்கும் காட்சிகள் இருந்ததால் அது பெரிதாக தெரியவில்லை.
சாய் தீனா வழக்கம் போல் வில்லனாக நன்றாக நடிப்பாரே. இந்த படத்திலும் அப்படித்தான். ஆனால் என்ன இன்னும் அவருக்கு பலம் கூட்டும் படியாக கதையில் இருந்திருந்தால் ஷார்ப்பாக இருந்திருக்கும்.
விஜய் ஆண்டனியின் தம்பி நண்பர்களாக வந்த மூன்று பேரும் நன்றாக நடித்திருந்தார்கள். கதையை பொருத்தவரை இயக்குனர் கணேசா காவல் துறை மீது மக்களுக்கு இருக்கும் சில நெகட்டிவ் எண்ணங்களை போக்குகிறார்.
ஆனால் என்ன திமிரு புடிச்சவன் என டைட்டில் வைத்துவிட்டு மிகவும் சாந்தமாக இருப்பது போல விஜய் ஆண்டனியை காட்டியிருக்கிறார். அவருக்காக பல விசயங்களை சேர்த்திருக்கிறார்.
மேலும் திருநங்கைகள் முன்னேற்றம், சிறார் குற்றங்கள், அதன் சட்டங்களை என சமூக விழிப்புணர்வு விசயங்களையும் பதிவு செய்துள்ளார்.
விஜய் ஆண்டனியே படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல நாட்கள் கழித்து அவரின் இசையை கேட்ட ஒரு திருப்தி இங்கேயும் உள்ளது. பின்னணி இசை, பாடல் என அவரின் ஸ்டைலை காண முடிந்தது.
ஊழியம் என்ற பெயரில் அட்டூழியம் செய்யும் சில மத விற்பனையாளர்களை கிண்டல் செய்து கலாய்த்த லொல்லு சபா சுவாமி நாதன் தன் ஜெபத்தால் பலரையும் தியேட்டர்களில் சிரிக்க வைத்துவிட்டார்.

கிளாப்ஸ்

நிவேதாவின் குறும்பான நடிப்பு, இயல்பான காமெடி ஸ்மார்ட்.
திருநங்கைகள் சமுதாயத்தில் சாதித்தவர்களை ஹைலைட் செய்தது வரவேற்கத்தக்கது.
புண்பட்ட போலிஸ்காரர்களின் மனங்களை குளிரவைத்தது யூனிபார்ம் போட்டவர்களுக்கு கூல் செக்மெண்ட்.

பல்ப்ஸ்

கதையோடு டைட்டில் செட்டானதா என்ற கேள்வி எழுகிறது.
கூடுதலான எமோசன்ஸ் அண்ட் சென்டிமெண்ட்ஸ் கொஞ்சம் போர்.
மொத்தத்தில் திமிரு புடிச்சவன் கொஞ்சம் வித்தியாசமானவன். குடும்பத்துடன் பார்க்கலாம்.
நன்றி  


No comments: