தமிழ் சினிமா - Aquaman திரை விமர்சனம்


ஹாலிவுட் திரையுலகின் விஜய்-அஜித் என்றால் மார்வல்-டிசி தான். எப்போதும் இவர்களுக்குள் ஒரு போட்டி இருந்துக்கொண்டே இருக்கும், ஹாலிவுட் ரசிகர்களும் நாம் இங்கு தமிழ் கெட்ட வார்த்தைகளில் திட்டுவது போல், அவர்கள் ஆங்கில கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை பாடுவார்கள்.
ஆனால், எப்போதும் மார்வல் கையே அங்கு ஓங்கியிருக்கும், பேட்மேன் சீரியஸ் தவிர்த்து டிசி காமிக்ஸ் அதளபாதாளம் தான், ஒரே அடியில் டிசியை உச்சத்திற்கு கொண்டு வர கான்ஜிரிங் இயக்குனர் ஜேம்ஸ் வார்னுடன் டிசி அமைத்த கூட்டணியே இந்த அகுவா மேன். இவை ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

அட்லாண்டா(கடலுக்கடியில்) உலகில் இருந்து ஒரு ராணி கரை ஒதுங்குகின்றார். அவரை கலங்கரை விளக்கத்தில் வேலை செய்பவர் ஒருவர் தூக்கி காப்பாற்றுகின்றார். பின் ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையே காதல் மலர, அவர்களுக்கு ஆர்தர் என்ற மகன் பிறக்கின்றான்.
ஆனால், அந்த ராணி அட்லாண்டா அரசனை திருமணம் செய்யாமல் ஓடி வந்தது பிறகு தான் தெரிகின்றது, அங்கிருந்து ராணியை பிடிக்க, ஆட்களை அனுப்ப, நம்மால் நம் கணவர், குழந்தைக்கு ஒன்றும் ஆக கூடாது என ராணி திரும்புகின்றார்.
அதே நேரத்தில் ஆர்த்தர் வளர, அவனுக்கு இயல்பாகவே தன் தாயை போல் அனைத்து சக்திகளும் இருக்கின்றது, இதற்கிடையில் அட்லாண்டா திரும்பிய ராணி வலுக்கட்டாயமாக அரசனுக்கு திருமணம் செய்ய அவர்களுக்கும் ஒரு குழந்தை பிறக்கின்றது.
அவனோ கடலுக்கடியில் இருக்கும் ராஜ்ஜியங்களை ஒன்றினைத்து கடலுக்கு வெளியே(நம் உலகம்) வாழ்பவர்களை அழித்து ராஜாவாக முயற்சி செய்ய, அதை ஆர்த்தர் எப்படி முறியடிக்கின்றான் என்பதே கதை.

படத்தை பற்றிய அலசல்

நாம் முன்பே சொன்னது போல் டிசி-க்கு பேட் மேனுக்கு பிறகு கிடைத்த பொக்கிஷம் தான் இந்த அகுவா மேன். மார்வல் எப்போதும் 6லிருந்து 60வரை உள்ள ரசிகர்களை குறிவைக்கும், ஆனால், டிசி காமிக்ஸோ ஏதோ தங்களை அதிபுத்திசாலியாக காட்டிக்கொள்ள ஏதேதோ யோசித்து பல்பு வாங்குவார்கள்.
அதில் நோலன் இயக்கிய பேட் மேன் சீரியஸ் மட்டுமே தப்பித்தது, அதை தொடர்ந்து ஜாக் ஸ்னைடர் இயக்கிய பல சூப்பர் ஹீரோ படங்கள் சொந்த காசில் சூனியம் தான், இந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் ஜேம்ஸ் வார்னின் அகுவா மேன் தீர்வு சொல்கின்றான்.
டிசி என்றாலே இருட்டாக இருக்கும் படம் என்பது மாறி படம் முழுவதும் கலர்புல் விஷ்வல் ட்ரீட் தான். அதிலும் கடலுக்கடியில் இருக்கும் காட்சிகளை 3டி கண்ணாடியில் பார்ப்பது புல் மீல்ஸ் விருந்து சாப்பிட்டது போல் உள்ளது, ஜேம்ஸ் கேமரூன் கஷ்டப்பட்டு அவதார்-2விற்கு கடலுக்கடியில் பிரமாண்ட காட்சிகளை எடுத்து வருகின்றார் என்ற செய்தி கசிந்து வர, அதற்கு முன்னோட்டம் தான் இந்த அகுவா மேன்.
படத்தின் கதை என்னமோ அண்ணன், தம்பி ராஜா இடத்திற்கான பழைய கதை. ஆனால், அதை காட்சிப்படுத்திய விதம், குறிப்பாக இரண்டாம் பாதியில் ட்ரைடனை தேடி செல்ல, அதற்கு காட்டப்படும் வழிகள் எல்லாம் அடுத்து என்ன, அடுத்து என்ன என்று கண்களுக்கு விஷ்வல் விருந்து வைத்துள்ளனர்.

க்ளாப்ஸ்

படத்தின் விஷ்வல் காட்சிகள், அதிலும் 3டியில் மட்டும் பார்ப்பது நல்லது.
இரண்டாம் பாதியில் வரும் சண்டைக்காட்சிகள், அதை எடுத்த விதம்.
சூப்பர் ஹீரோ படம் என்றால் அடிதடி மட்டுமில்லாமல் கொஞ்சம் எமோஷ்னலுடன் சொன்ன விதம்.

பல்ப்ஸ்

படத்தின் கதை, இதே கதையில் சுமார் 1000 படமாவது வந்திருக்கும்.
ட்ரைடனை ஆர்த்தர் எடுக்கும் காட்சி செம்ம பில்டப் கொடுத்து அவர் அசால்ட்டாக அதை எடுப்பது அட போங்கப்பா மொமண்ட்.
மொத்தத்தில் பாக்ஸ் ஆபிஸிலும் சரி, ரசிகர்கள் மனதிலும் சரி வீழ்ந்து இருந்த டிசி-யை கைத்தூக்கி உயர்த்தியுள்ளான் இந்த அகுவா மேன்.

No comments: