06/08/2018 இந்தோனேசியாவின் லொம்பொக் தீவுகளை தாக்கிய பூகம்பம் காரணமாக 80 ற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதுடன்  பலர் காயமடைந்துள்ளனர்.
பலர் காயமடைந்துள்ளர் வீடுகள் பல முற்றாக அழிந்து போயுள்ளன இதன் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பூகம்பத்தை தொடர்ந்து இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகள் காரணமாகவே பெருமளவு மக்கள் பலியாகியுள்ளனர்.
லம்பக்கின் முக்கிய நகரான மட்டராமில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்கள் பாரிய அதிர்வுகள் காரணமாக தாங்கள் வீட்டை விட்டு ஓடியதாக தெரிவித்துள்ளனர்.
அனைவரும் பதட்;டமடைந்தோம்  அனைவரும் வீட்டை விட்டு ஓடினோம் என இனான் என்பவர் தெரிவித்துள்ளார்;
மட்டரம் நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலை காணப்படுகின்றது.
இதேவேளை முக்கிய மருத்துவமனைகளில் காணப்பட்ட நோயாளிகள் பூகம்பத்தின் பின்னர் வீதிக்கு கொண்டு செல்லப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில் சிறிய அதிர்வுகள் காணப்பட்டன பின்னர் அவை பலத்த அதிர்வுகளாக மாறின மக்க்ள அதனை உணர்ந்து பூகம்பம் என அலறியபடி வீதிக்கு வந்தனர் என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்
லொம்பேர்க் மற்றும் பாலி நகரங்களில் இடிபாடுகள் காணப்படுவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.  ;நன்றி வீரகேசரி 











கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி 

08/08/2018 மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுதத்தியுள்ளார்.
இன்று காலை 10 20 மணியளவில் சென்னை சென்ற மோடியை சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்லையில் சென்னை ராஜாஜி மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி சுமார் 10.45 மணியளவில் அஞசலி செலுத்தினார்.
அவர்களை தொடர்ந்து பகல் 12.35 மணிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 12.45 மணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் அஞ்சலி செலுத்த செல்லவுள்ளனர்..
காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி ஆகியோர் 12.40 மணிக்கும் அஞ்சலி செலுத்துகின்றனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மதியம் 2:20க்கு சென்னை செல்கிறார்..
கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் சென்னிதாலா ஆகியோர் 1.30 மணிக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










கருணாநிதிக்கு இறுதி மரியாதை

08/08/2018 மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா சதுக்கத்தை வந்தடைந்துள்ள நிலையில், அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட உள்ளது. 
இன்று 4 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் ஏற்றப்பட்டு தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், பொலிஸார், பொதுமக்கள் என அனைவருக்கும் மத்தியில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. 
இந்த ஊர்வலம் சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தை வந்தடைந்தது. அங்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர், அண்ணா சமாதிக்கு பின்புறம் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.  நன்றி வீரகேசரி 









யேமனில் விமானதாக்குதலில் பல சிறுவர்கள் பலி

09/08/2018 யேமனில் அமெரிக்க ஆதரவு சவுதி அரேபிய கூட்டணியினர் மேற்கொண்ட விமானதாக்குதல்கள் காரணமாக பல சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
யேமனில் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுவர்களை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த பஸ்மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவை குழு இதனை உறுதிசெய்துள்ளது.மருத்துவமனைக்கு பல உடல்களும் காயம்மடைந்தவர்களும் வந்துள்ளனர் என செஞ்சிலுவை குழு தெரிவித்துள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் கீழ் சிறுவர்களை பாதுகாப்பது அவசியம் என ஐசிஆர்சி தெரிவித்துள்ளது.
பலர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் இவர்களில் பலர் பத்துவயதிற்கு உட்பட்டவர்கள் என ஐசிஆர்சி தெரிவித்துள்ளது.
இதேவேளை குறிப்பிட்ட பகுதியில் உள்ள கிளர்ச்சிக்காரர்கள் 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர் 60 பேர் காயமடைந்துள்ளனர் அனேகமானவர்கள் குழந்தைகள் என தெரிவித்துள்ளனர்.
குரான் கற்பதற்காக சென்றுகொண்டிருந்த சிறுவர்களே கொல்லப்பட்டுள்ளனர் என கிளர்ச்சிக்காரர்களின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட தொலைக்காட்சி இது தொடர்பில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளது.வீடியோக்களில் இறந்து நிலையில் பல சிறுவர்களை காணமுடிகின்றது.
மேலும் மூவரின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதையும் இரத்தம் வழிந்தோடுவதையும் அந்த வீடியோக்களில் காணமுடிகின்றது.  நன்றி வீரகேசரி 










இந்தோனேஷியா நிலநடுக்கத்தினால் இதுவரை 347 பேர் பலி

09/08/2018 இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இதுவரை 347 பேர் பலியாகியுள்ளதாவும் 1447 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 
இந்தோனேஷியா நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 7.0 ரிச்டர் என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இனறு காலையும் குறித்த பகுதியில் 6.2 ரிச்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில், அங்குள்ள லெம்பெக் தீவு கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் அருகில் உள்ள ஜிலி, பாலி, சும்பாவா, கிழக்கு ஜாவா ஆகிய பகுதிகளிலும் நில நடுக்கத்தின் பாதிப்பு நிகழ்ந்தது. லெம்பெக் தீவில் கிட்டத்திட்ட 80 சதவீத கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அதே போல் ஜிலி தீவிலும் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் நிலநடுக்கப் பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதுவரை நிலநடுக்கத்தினால் கடந்த மூன்று நாட்களில் 347 பேர் பலியாகியுள்ளதாகவும், 1447 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் அந்த நாட்டு செய்தி நிறுவனமான அண்டரா அறிவித்துள்ளது.
1 இலட்சத்து 60 ஆயிரம் பேர் சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும். ஹயான்கான் என்ற பகுதியிலேயே உயிர்ழந்தோர் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல பகுதிகளில் இடிபாடுகளை அகற்றவில்லை. அங்கும் பலர் சிக்கி கிடக்கிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஜிலி தீவில் ஏராளமான வெளிநாட்டினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தனர். அவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய அரசு தெரிவித்துள்ளது  நன்றி வீரகேசரி 










ராஜீவ்காந்தி கொலை- ஏழு பேரையும் விடுதலை செய்ய முடியாது- மத்திய அரசு

10/08/2018 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் எழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை இந்திய மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்திய மத்திய அரசாங்கத்தின் சார்பில் நீதிமன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந் இதனை தெரிவித்துள்ளார்.
மாநில அரசாங்கத்தின் பரிந்துரை தொடர்பில் மத்திய அரசாங்கம் தீர்மானமொன்றை எடுத்துள்ளது என தெரிவித்துள்ள அவர் அந்த தீர்மானத்தை தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் என தெரிவித்துள்ள மத்திய அரசாங்கம் இந்த வழக்கை பல நீதிமன்றங்கள் ஆராய்ந்துள்ளன இவர்கள் சிறைக்கைதிகளை விடுதலை செய்யதேவையில்லை என குறிப்பிட்டுள்ளனர் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை என்பது மிகமோசமான ஈவிரக்கமற்ற செயலாகும்,இந்த ஈவிரக்கமற்ற செயல் காரணமாக இந்திய ஜனநாயகத்தின் நடவடிக்கைகள் முடக்கப்படும் நிலை உருவானது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 











இந்தோனேசியா நிலநடுக்கம் ; 400 பேர் பலி, பூகோள அமைப்பிலும் மாற்றம்

12/08/2018 இந்தோனேசியாவின் லெம்பொக் தீவில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ள நிலையில், தீவின் பூகோள அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 
இந்தோனேசியாவில் லெம்பொக் தீவில் சமீபத்தில் 2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 2 வது நில நடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் பதிவானது.
இதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. ஆயிரக் கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகிய நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் அவ்வப்போது உருவாகி மக்களை அச்சுறுத்தின. இதனால் அஞ்சிய மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். இடிபாடுகளை அகற்றி இறந்தவர் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இடிபாடுகளை அகற்றும் போது தொடர்ந்து உடல்கள் மீட்கப்படுவதாக நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 400 ஐ நெருங்கியுள்ளது.
லெம்பொக் தீவில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால் அந்த தீவு வழக்கத்தை விட 25 செ.மீ. அதாவது 10 இஞ்ச் உயர்ந்துள்ளது. இந்த தகவலை இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நாசா மற்றும் கலிபோர்னியா தொழில் நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் ஆய்வு நடத்தி இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி