தமிழ் சினிமா - மிஸ்டர் சந்திரமௌலி திரைவிமர்சனம்

சினிமாவில் சில நடிகர்களுக்காகவே படங்கள் எதிர்பார்ப்பை பெறும். அந்த வகையில் அண்மையில் அடல்ட் படங்கள் மூலம் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தவர் கௌதம் கார்த்திக். அவரின் நடிப்பில் தற்போது மிஸ்டர் சந்திரமௌலிபடம் வெளியாகியுள்ளது. மௌலி என்ன சொல்கிறார் என பார்க்கலாமா?  

கதைக்களம்

கார்ப்பரேட் உலகில் இன்று போட்டிகள் அதிகரித்துவிட்டன. அதே வேளையில் குற்றங்களும் பெருகி வருகிறது. இந்நிலையில் இரு நிறுவனங்களுக்கான போட்டியில் இறங்குகிறார்கள். இவர்களால் பொது மக்களுக்கு எதிர்பாராத அசம்பாவிதங்கள் அடுத்தடுத்து நடைபெறுகிறது.

இதற்கிடையில் படத்தில் கார்த்திக் தன் மகன் மகனுடன் தனியே வாழ்கிறார். அவருக்கு காரும், மகனும் தான் உலகம். சின்ன விபத்தில் ஹீரோயின் ரெஜினாவை அவர் சந்திக்கிறார்.
ஒருபக்கம் தன் மகனுக்கு ஹீரோயினுடன் காதல் ஏற்படுகிறது. கௌதம் பாக்ஸிங் வீரர். அவருக்கு சதீஷ் தான் உற்ற நண்பர். ஒரு நாள் நள்ளிரவில் அப்பாவின் ஆசைக்காக அவருடன் அதே பழைய காரில் பயணம் செய்கிறார்.
எதிர்பாராத விதமாக கோர விபத்து நடந்தேறுகிறது. இதில் கார்த்தி பிழைத்தாரா? கௌதம் என்ன ஆனார்? அடுத்தடுத்த அசம்பாவிதங்களின் பின்னணி என்ன என்பது தான் படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல்

படத்தின் ஹீரோவாக நடிகர் கௌதம். இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. ஏற்கனவே ஹர ஹர மஹா தேவகி, இருட்டறையில் முரட்டு குத்து படங்களின் மூலம் முன்னணி ஹீரோவாக காட்டிவிட்டார்.
ஆனால் அவருக்கு சில நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது. இதனால் படங்களில் தவறான அர்த்தமுள்ள வார்த்தைகள் பேசுவதை தவிர்த்திருந்தார். அடல்ட் ஹீரோ அதிலிருந்து மாறி தற்போது சகஜமான ஸ்டோரியை கையில் எடுத்துள்ளார்.
அவரின் அப்பாவாக கார்த்திக். ரியல் லைஃபிலும் இவர்களுக்குள்ளான உறவு இப்படிதான் இருக்குமா என சில இடங்களில் கேட்வைக்கிறது. ஆனாலும் ஏதோ மிஸ் ஆனது போல ஒரு ஃபீல்.
கௌதமுக்கு ஜோடியாக ரெஜினா. இருவரும் திடீரென அறிமுகமாகிறார்கள். இவரை பார்த்ததுமே ஹீரோவுக்கு காதல். கெமிஸ்ட்ரி நன்றாக தான் இருந்தது. ஆனால் இருவருக்கிடையேயான முழுமையான லவ் ஸ்டோரி இல்லாமல் போய்விட்டதோ என தோன்றவைக்கிறது.
விபத்தால் கௌதமுக்கு பெரிய ஒரு குறை ஏற்பட்டிருந்தாலும் பின்னணியை கண்டுபிடிக்க இவர்கள் கையாளும் டெக்னிக் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங். ஆனாலும் ஒரு இடத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்து நம்மை யோசிக்க வைக்கிறார்கள். இதனால் கதை கொஞ்சம் வேறு கோணத்தில் நம்மை அழைத்து செல்லும்.
காமெடியான நடிகர் சதீஷ் இருந்தாலும் லேசான தூவல் தான் இப்படத்திலும். ஒரு முழுமையான காமெடி மசாலா இல்லை. ஒரு காட்சியில் இன்னொரு காமெடியன் ஜெகன் வந்துபோகிறார். அவர் அவருடைய ஸ்டைலில் கவுண்டர் அடிக்கிறார். அவர் சொல்லும் ஆன்மீக அரசியல் காமெடி கொஞ்சம் ஸ்பார்க் போல தான்.
இதில் இயக்குனர் மகேந்திரனுக்கு ஒரு முக்கிய ரோல். ஒரு விசயத்தால் பலரின் எண்ணமும் இவரை நோக்கி தான் ஓடும். அவருக்கு உதவியாளராக மைம் கோபி. கிட்டத்தட்ட இவர் வில்லன் போல தான்.
நடிகை வரலட்சுமி, கார்த்திக்குக்கு திடீரென அறிமுகமாகிறார். இருவரும் நட்பாகிறார்கள். ஆனால் அவருக்கு வந்த சோதனை? என்ன சொல்வது? முதல் பாதி ஒரு அனைத்தும் கலந்த மசாலா காம்போ.
இரண்டாம் பாதி கொஞ்சம் சீரியஸ். ஆமாம் எல்லாம் சொன்னீங்க. யார் இந்த மிஸ்டர் சந்திரமௌலி? னு நீங்க கேட்கலாம். ஒரே விடை போய் படத்தில் பாருங்க..”

கிளாப்ஸ்

கார்த்திக் வயதானாலும் அந்த ஸ்டைல், காமெடி சென்ஸ் குறையவில்லை.
சாம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அலட்டல் இல்லாத மென்மையான பின்னணி இசை.
லவ், ரொமான்ஸ் இருந்தாலும் முக்கிய விசயத்தை இயக்குனர் பகிர்ந்த விதம் நன்று.

பல்ப்ஸ்

கார்த்திக் உடனான வரலட்சுமியின் காட்சிகள் முழுமை பெறவில்லையோ என கேள்வி வருகிறது.
காமெடியன்கள் இருந்தும் முக்கியத்துவம் இல்லாதது போல இருந்தது.
மொத்தத்தில் மிஸ்டர் சந்திரமௌலி பார்ப்பவர்கள் தன்னை ரசிக்கும் படி செய்வான்.. நன்றி CineUlagam No comments: