1. மெல்பேணில் நிகழ்ந்த தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2018
தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 மெல்பேணில் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது. மே மாதம் 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குப் பொதுச் சுடரேற்றலோடு தொடங்கிய நிகழ்வு இரவு 8.20 மணியளிவில் நிறைவுற்றது.
சென்ற். ஜூட் மண்டபத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தாயகத்தில் இறுதி நேர அவலத்திலிருந்து மீண்ட சஞ்சீவ் பரராஜசிங்கம் அவர்கள் ஏற்றி வைக்க, தமிழர் இனவழிப்பு நாளுக்கென சிறப்பாக உருவாக்கப்பட்ட இசைத்துணுக்கு ஒலிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசிக்கொடியைதாயகத்தில் இறுதி நேர அவலத்திலிருந்து இங்கு இடம்பெயர்ந்த ஜெகதீஸ் அமிர்தலிங்கம் அவர்களும் தமிழீழத் தேசியக்கொடியை மாமனிதர் ஞானகுணாளன் மாஸ்டர் அவர்களின் புதல்வன் ஹரிதாஸ் அவர்களும் ஏற்றிவைத்தனர். ஈகைச்சுடரை மூத்த செயற்பாட்டாளர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து நிகழ்வின் தலைமையுரையை திரு. ரகு அவர்கள் நிகழ்த்தினார். தமிழர் இனவழிப்பு நினைவுநாளின் முக்கியத்துவம், ஈழத்தமிழரின் இன்றைய நிலை, தாயகத்தின் இன்றைய நிலை என்பவற்றை வெளிப்படுத்திய அவரது பேச்சு, தமிழர்களின் அரசியற் பங்களிப்பின் தேவையையும் தொடர்ந்தும் நீதிவேண்டிய போராட்டத்தில் அனைவரினதும் ஒத்துழைப்பைக் கோரியும் இருந்தது.
அதைத் தொடர்ந்து நடனாலயா பள்ளி மாணவி ருக்சிகா அவர்களின் வணக்க நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஒன்றியத் தலைவர் திருமதி லீலாவதி அவர்களின் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் செய்தி காணொலியாக இடம்பெற்றது.
தொடர்ந்து, தமிழ் ஏதிலிகள் கழகத்தினரோடும் பல்வேறு வழிகளிலும் தமிழ்த் தேசியப் போராட்டத்துக்காகவும் ஏதிலிகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் Red Flag பத்திரிகையின் ஆசிரியர், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் Ben Hillier அவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றினார். கடந்த நவம்பர் மாதம் தமிழர் தாகயத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தில் கண்டவைகள், மாவீரர் மேலும் விடுதலைப் புலிகள் மீதும் தாயகத்து மக்கள் கொண்டிருக்கின்ற அபிமானம்,அங்குள்ள மக்கள் இப்போதும் இராணுவ அடக்குமுறைக்குள்ளும் தவித்துக்கொண்டிருக்கும் நிலைமை என்பவற்றைப் பேசினார். அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கும்வரை விடுதலைப் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் என்பதற்கு ஈழமும் பலஸ்தீனமும் தற்கால எடுத்துக்காட்டுக்கள் என்பதை முன்வைத்ததோடு, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்தவர்களை மேற்குநாடுகள் கையாளும்முறை தொடர்பாகவும், உண்மையான புகலிடக்கோரிக்கையாளர்கள் அவர்களே என்பதை வலியுறுத்தினார்.
அவரின் உரையைத்தொடர்ந்து தாயகத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த நிகழ்வின் தொகுப்பும், அதற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்களின் உந்துருளிப் பணயங்கள் அடங்கிய காணொலியும் காண்பிக்கப்பட்டது. அடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் செயற்பாட்டாளர் செல்வன் அவர்கள் முள்ளிவாய்க்கால் ஒரு முடிவல்ல என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழகத்து மக்களின் துயர்பகிர்வையும் வெளிப்படுத்தியதோடு, இன்று தமிழகமும் இனவழிப்பு அடக்குமுறையைப் பல்வேறு வழிகளிலும் எதிர்கொண்டிருப்பதைச் சுட்டி, இதுவோர் தொடர் போராட்டம், அனைத்து தமிழரும் இணைந்து எம்மின இருப்புக்காக உழைப்போமென்ற கருத்தோடு தனதுரையை நிறைவுசெய்தார்.
அதன்பின் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 தொடர்பாக உருவாக்கப்பட்ட இரண்டு காணொலிகளின் காட்சிப்படுத்தலின்பின்னர் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதியுரையுடன் நிகழ்வுகள் இரவு 8.20 மணியளிவில் நிறைவடைந்தன.
2. சிட்னியில் நிகழ்ந்த தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2018
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் த மிழர் இனவழிப்பு நினைவுநாள் நி கழ்வானது, உணர்வெழுச்சியுடன் சி றப்பாகநினைவுகூரப்பட்டது. நேற் று வெள்ளிக்கிழமை (18 – 05 – 2018) மாலை ஏழு மணிக்கு வென்வேத்வில் றெட்கம் மண்டபத்தி ல் தொடங்கிய இந்நிகழ்வில் பெருமளவி லான மக்கள் கலந்து கொண்டனர்.
பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமான நி கழ்வில் சுடரேற்றலின்போது, தமி ழர் இனவழிப்பு நினைவுநாள் நினை வேந்தல் இசைபின்னனியில் இசைக் கப்பட்டது. தொடர்ந்து அவுஸ்திரே லிய மற்றும் தமிழீழ தேசிய கொடி கள் ஏற்றப்பட்டு அகவணக்கம்செலு த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுநாள் பொதுப்பீடத்திற்கு, ஈகச்சுடரேற்றி மலர்வணக்கம் செலு த்தும் நிகழ்வு ஒரு மணிநேரமா கநடைபெற்றது.
தொடர்ந்து நினைவுரையை, முள்ளிவா ய்க்காலில் மருத்துவராக கடமையா ற்றி நான்கு ஆண்டுகளாக சிறிலங் காதடுப்புமுகாமில் தடுத்துவைக் கப்பட்டு விடுவிக்கப்பட்ட அரு ணகிரிநாதன் அவர்கள் வழங்கினார். அவர் தனதுரையில், இனவழிப்பு என் பது தனியே கொலைகள் மட்டுமல்ல என வும் ஒரு இனத்தை பகுதியாகவோமுழு மையாகவோ பல்வேறு வழிகளில் அதன் சுதந்திரத்தை மறுத்து அதன் மீது அழுத்தங்களை மேற்கொண்டு விரட் டுவதுஉட்பட இனவழிப்பு தான் எனவு ம் அத்தகைய பாரிய இனவழிப்பை மு ள்ளிவாய்க்காலில் எவ்வாறு எதிர் கொண்டோம் என்பதைநினைவுகூர்ந்தா ர். மேலும் உணவுக்கு வழியின்றி கஞ்சிக்காக வரிசையில் நின்ற மக் கள் கொல்லப்பட்டதையும், காயப் பட்டவர்களைஏற்றிச்சென்று பொன் னம்பலம் வைத்தியசாலையில் விடப் பட்ட நிலையில், அங்கு விமானதாக் குதல் மூலம் திட்டமிட்டுகொல்லப் பட்டதையும் கொத்துக்குண்டுகள் எ வ்வாறு பயன்படுத்தப்பட்டு மக் கள் கொல்லப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.
ஆங்கிலத்தில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு தொ டர்பான சிறுஉரையை அபிசா யோகன் வ ழங்கி, அதில்தான் ஐந்து வயதிலி ருந்து தனது குடும்பத்துடன் தமி ழ் மக்களுக்கான நீதிக்கான போரா ட்டங்களில் பங்குகொண்டுவந்தபோது ம்,அதன் உண்மையான பக்கங்களை இப் போதுதான் புரிந்துகொண்டுள்ளதா கவும், தமிழர்களுக்கு எதிரான இன வழிப்பில்அனைவரும் ஒற்றுமையாக இ ணைந்து குரல்கொடுக்கவேண்டும் என வும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து “முள்ளிவாய்க்கால் - உறுதியின் முகவரி” என்ற காணொளி அகன்ற திரையில் திரையிடப்பட்டது. அதில் தமிழ் மக்களுக்கான நீதிக்கான அரசியல்போராட்டத்தையும் மிகவும் பாதிக் கப்பட்ட கிராமங்களுக்கான வாழ்வா தாரஉதவித்திட்டங்களையும் சமாந் தரமாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் வி ளக்கப்பட்டது.
தொடர்ந்து இளையோர்களால் உலகளாவி ய ரீதியில் சமூகவலைத்தளங்கள் ஊடா க முன்னெடுக்கப்பட்டுவரும் நீதி க்கானபோராட்டம் பற்றிய விளக்கத் தை இளையோர் அமைப்பைச் சேர்ந்த ஜெ னனி வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து நினைவுநாள் உணர் வுகளை சுமந்த மூன்று பாடல்களை மு றையே பைரவி பாவலன் மற்றும் ரமே ஸ்ஆகியோர் பாடினர். உணர்வுமிக் கதான அப்பாடல்கள் அனைவரின் நெஞ் சங்களையும் தொட்டது. அதனைத்தொ டர்ந்து “ஓலம் கேட்பதோ …” என்ற பாடலுக்கு நடன நிகழ்வை இளையோர் கள் வழங்கினர்.
நினைவுநாளின் சிறப்புரையாற்றிய மருத்துவரும் சமூகசெயற்பாட்டா ளருமான மனமோகன் அவர்கள், தாயகத் தில் வாழும்ஆதே எண்ணிக்கையான தமி ழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்துவருவதாகவும் சரியான மு றையில் ஒருங்கிணைப்பைமேற்கொண்டா ல் தாயகத்தில் உரிய முன்னேற்றத் தை காணமுடியும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தாயக மக்களின் வாழ்வாதாரத்தை மே ம்படுத்துல் மற்றும் தகைமை மேம் படுத்தல் என்பவற்றில் கவனம் செ லுத்துவதோடு,நேர்வழி தவறும் அரசி யல் கட்சிகளின் செயற்பாடுகளை சு ட்டிக்காட்டி நேர்ப்படுத்துவற் கான அழுத்தத்தையும்பிரயோகிக்கவே ண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் .
நிறைவாக தேசியக்கொடிகள் இறக்கப் பட்டு உறுதியுரையுடன் நிகழ்வு நி றைவுபெற்றது.
3. மேற்கு அவுஸ்திரேலிய (பேர்த்) தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்று (18-05-2018) அனுஷ்ட்டிக்கப்பட்டது. மாலை 7.15 மணிக்கு திரு நிமல் தலமையில் அவுஸ்திரேலியா கொடியேற்றத்துடன் நினைவேந்தல் ஆரம்பமாகியது. அவுஸ்திரேலியா தேசிய கொடியினைபிரீமென்டல் நகரசபை உருப்பினர் திரு சாம் ஏற்றிவைத்தார், தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியை திரு கொற்றவன் ஏற்றிவைத்தார். கொடியேற்றத்தை தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது பொதுச்சுடரை திரு இளையவன்னியன் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் சோக கீதங்கள் இசைக்க மக்கள் மனதுருகி தம் உறவுகளுக்காக மலரஞ்சலி செய்து தீபமேற்றினர்.
முள்ளிவாய்க்கால் நினைவுரையினை மெல்பேர்ண் நகரில் இருந்து வருகை தந்த ஈழப்போரில் இறுதிவரை களமாடிய போராளியான திரு கொற்றவன் நிகழ்த்தினார். சிறப்புரையினை பிரீமென்டல் நகரசபை உறுப்பினர் திரு சாம் நிகழ்த்தினார்.
நிறைவாக இருநாட்டு தேசிய கொடிகளின் இறக்கங்களுடன் நினைவேந்தல் நிகழ்வு நிறைவுற்றது.
------------------------------ ------------------------------ -----
இதேபோன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வுகளானது, தெற்கு அவுஸ்திரேலியா, கன்பரா, பிறிஸ்பேன்,ஹோபார்ட், நகரங்களிலும் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நினைவு கூரப்பட்டது
No comments:
Post a Comment