08/02/2018   சிரியாவின் கோதா நகரில், ரஷ்ய உதவியுடனான சிரிய இராணுவம் நேற்று (7) நடத்திய வான்வழித் தாக்குதலில், பன்னிரண்டு குழந்தைகள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 60 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள அப்பிரதேசத்தில் மூன்றாவது நாளாகவும் சிரிய அரச படை தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு முன், நேற்று முன்தினம் (6) நடத்தப்பட்ட இதேபோன்றதொரு வான்வழித் தாக்குதலில், பத்தொன்பது குழந்தைகள் மற்றும் 20 பெண்கள் உட்பட சுமார் எண்பது பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பகுதியை கடந்த நான்கு வருடங்களாக சிரிய அரசு சுற்றி வளைத்திருக்கும் நிலையிலும் அப்பிரதேசத்தை முழுமையாகத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையே காணப்படுகிறது.   நன்றி வீரகேசரி