.
சர்வதேச இளம் பெளத்த துறவிகள் மாநாட்டின் ஆரம்ப விழா (29) கண்டி பல்லேகலையில் இடம் பெற்றது. இதில் கலந்துகொண்ட யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனுக்கு சர்வதேச இளம் பெளத்த துறவிகள் உயர் விருது வழங்கி கெளரவித்தனர். அருகில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்கவும் காணப்படுகிறார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் ஆகியோரை உலக பௌத்த இளையோர் சங்கச் சபை மதிப்புறுத்தியது.
நியாயத்தை நிலைநாட்டு வதற்காக ஆற்றிய சேவையைப் பாராட்டி உலக பௌத்த இளையோர் சங்கச் சபையினால் இவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
கண்டி பல்லேகலயில் உள்ள மத்திய மாகாண சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இளையோர் சங்க சபாவின் 14ஆவது வருடாந்த மாநாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நீதிபதிகளுக்கு விருதும் வழங்கப்பட்டுள்ளது.
அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் இதனை வழங்கி வைத்தார். 56 நாடுகளின் மஹாநாயக்கர்கள், பிக்குகள், பௌத்த தூதுவர்கள் உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் இந்த மாநாடு நடைபெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment