பரத நாட்டியத்தில் உலக சாதனை

.


24 உலக நாடுகளில் ஒரே தரத்தில் ஒரே நேரத்தில் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட நாட்டிய மணிகள் பரத நாட்டியமாடி உலக சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தினைத் தளமாகக் கொண்டு செயல்படும் Hiddenidol என்ற அமைப்பு இசை, நடனத் திறன் ஆதியனவற்றினை வெளி உலகின் அவதானத்துக்குக் கொண்டு வரும் நோக்குடன் செயலாற்றி வருகின்றது. இந் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியாக செயல்பட்டுவரும் Shri N. Balakumar  ன் முன்னெடுப்பினால் முதன் முறையாக உலக நாட்டிய சாதனை என்ற தலைப்பில் 2017 ம் டிசம்பர் மாதம் 31 திகதி இந்திய நேரப்படி பிறபகல் 4 மணிக்கு 11 ஆயிரம் பரத நாட்டிய கலைஞர்கள் உழவர்களுக்கு கௌரவம் வழங்கும் வகையில் நாட்டியமாடிச் சாதனை படைத்துள்ளனர். இச் சாதனை உலகில் முதன்முறையாக இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் இச் சதானை படைக்கும் நாட்டிய நிகழ்வு பென்டில் கில்லில் உள்ள Yazl function centre ல் 2017 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 திகதி இரவு 9:30 மணிக்கு (இந்திய நேரம் பிற்பகல் 4 மணி) நடைபெற்றது. இந் நிகழ்வில் திருமதி சுகந்தி தயாசீலனின் சிட்னி கலாபவனம் நாட்டியப் பள்ளி மாணவர்கள் 35 பேர் கலந்து நடனமாடியுள்ளனர்.

சிட்னியின் அமைப்பாளராகச் செயல்படும் சுகந்தி தயாசீலன் சிட்னியில் “சிட்னி கலாபவனம்” நாட்டிய பள்ளியினை நிர்மானித்து கலைப்பணி ஆற்றி வருகின்றார்.இவ் நாட்டிய நிகழ்விற்கு தஞ்சாவூர் பல்கலைக் கழக முன்னை நாள் இசைத்துறைப் பேராசியர் திருமதி Gnana Kulendran. B.A (Hons); Dip-Ed; MA; Ph.D  முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்துள்ளார். நாட்டியமாடிய கலைஞர்களுக்கு "நாட்டிய மணி" என்ற பட்டமும் , சிட்னி கலாபவனம் நிறுவனரும் நாட்டிய ஆசிரியருமான திருமதி சுகந்தி தயாசீலன்  அவர்களுக்கு " நாட்டிய ஆச்சாரியா" என்ற பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

2017 ம் ஆண்டில் பெற்ற இச் சாதனை படைத்த வெற்றியினைத் தொடர்ந்து 2018 ம் ஆண்டில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் பங்கு பெறும்  நிகழ்வினை நடாத்தி புதிய சாதனை படைக்க Hiddenidol  அமைப்பு திட்டமிட்டுள்ளது.
No comments: