இலங்கைச் செய்திகள்


ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட காணியிழந்த மக்கள்

ஜேர்மனியில் சபாநாயகர் கரு தலைமையில் சம்பந்தன், ஹக்கீம், அநுரகுமார,கயந்த, அமுனுகம

வடக்கு ஆளுநர், முதல்வரை  சந்தித்தார் இந்திய உயர் ஸ்தானிகர்


யாழ்.பல்கலைக்கழககத்தின் கிளிநொச்சி பீடங்களின் கட்டிடத் தொகுதிகள் திறந்து வைப்பு

நாட்டின் இனங்கள் யாவும் ஒன்றுபட்ட சமுகமாக வாழ அரசியல் தீர்வு முக்கியம் ; யாழ் .புனித பத்திரிசியார் கல்லூரியில் கர்தினால் மல்கம் றஞ்சித்

சுவிற்சர்லாந்து மாபியா குழுவின் ஒப்பந்தத்துக்கு இணங்கவே வித்தியாவை வன்புணர்ந்து கொன்றோம்

ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட காணியிழந்த மக்கள்

27/06/2017 வடக்கைச் சேர்ந்த மக்கள் தென்னிலங்கையிலுள்ள சிங்கள அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து கொழும்பு, கோட்டையில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்தனர்.
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தி  வைக்கப்பட்டுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் தொடர் போராட்டங்களை வடக்கில் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வடக்கினை சேர்ந்த மக்கள் இவ்வாறு தென்னிலங்கை சிங்கள அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து ஒரு போராட்டமொன்றினை முன்னெடுத்தனர்.
இந்த பேராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஒரு பஸ்ஸிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து மற்றுமொறு பஸ்ஸிலுமாக மக்கள் வந்து  கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்கள் வடக்கு, கிழக்கில் பறிக்கப்பட்ட காணிகளை உடனே வழங்குமாறும், முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்களிடம் அபகரித்த காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இதையடுத்து ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்காக ஜனாதிபதி மாளிகை நோக்கி நகர்ந்தனர். இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட மக்களில் 8 பேரை மாத்திரம் தெரிவுசெய்து பொலிஸார் ஜனாதிபதியை சந்திப்பதற்காக அழைத்துச்சென்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 
ஜேர்மனியில் சபாநாயகர் கரு தலைமையில் சம்பந்தன், ஹக்கீம், அநுரகுமார,கயந்த, அமுனுகம

26/06/2017 சபா­நா­யகர் கரு ஜய சூரிய தலை­மை­யி­லான முக்­கி­யஸ்­தர்கள் அடங்­கிய குழு­வொன்று ஜேர்மன் நோக்கி நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை பய­ணித்­துள்­ளது.
இக்­குழுவில் எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமி ழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் அமைச்­சர்­க­ளான ரவுப் ஹக்கீம், சரத் அமு­னு­கம, கயந்த கரு­ணா­தி­லக, மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்சி பிரதம கொர­டா­வு­மான பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  அனுர குமா­ர­தி­ச­நா­யக்க ஆகியோர் இடம்­பெற்­றுள்­ளனர். 
எதிர்­வரும் ஐந்து தினங்கள் ஜேர்­மனில் தங்­கி­யி­ருக்கும் இக்­கு­ழு­வினர் அந்­நாட்டு அர­சி­ய­ல­மைப்பு உட்­பட பல்­வேறு விட­யங்கள் குறித்து ஆராய்ந்­த­றி­ய­வுள்­ளனர். 
அண்­மையில் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த  ஜேர்மன் சபா­நா­யகர் இலங்­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதை கருத்திற் கொண்டு சுபீட்­ச­மான ஐக்­கிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்பும் நோக்­கத்­தினை அடைந்து கொள்­வ­தற்­கான தமது முழ­மை­யான  ஒத்­து­ழைப்­புக்­களை நல்­கு­வ­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.
இதற்­காக தமது நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தொடர்­பான அனு­ப­வத்­தினை பகிர்ந்து கொள்­வ­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார். ஆதற்­கி­ணங்க சபா­நா­யகர் கரு­ஜெ­ய­சூ­ரிய தலை­மையில் பாரா­ளு­மன்ற அர­சியல் கட்சி தலை­வர்­களை தமது நாட்­டிற்கு வருகை தரு­மாறும் அழைப்பை விடுத்­தி­ருந்தார். 
இந்­நி­லையில் "அர­சி­யல்­பார்வை" என்ற தலைப்பில் மேற்­படி விஜ­யத்­தினை மேற்­கொண்­டுள்ள இலங்கைக்கு குழுவினர் ஜேர்மனில் காணப்படும் அரசியலமைப்பு உட்பட ஏனைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு அரச உயர்மட்டத்தினரையும் துறைசார் நிபுணர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்   நன்றி வீரகேசரி வடக்கு ஆளுநர், முதல்வரை  சந்தித்தார் இந்திய உயர் ஸ்தானிகர்


29/06/2017 யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சத்து இன்று காலை 11.20 மணியளவில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். 
இந்த சந்திப்பில் யாழ்.இந்திய துணைத்தூதர் என்.நடராஜனும் உடனிருந்தார். 
இதன் பின்னர் மதியம் 12.20 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவை அவரது அலுவலகத்திலும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். 
இந்த கலந்துரையாடல்களில் வடக்கு மாகாண பொருளாதார மற்றும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.  நன்றி வீரகேசரி யாழ்.பல்கலைக்கழககத்தின் கிளிநொச்சி பீடங்களின் கட்டிடத் தொகுதிகள் திறந்து வைப்ப


01/07/2017 யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீடம் மற்றும் விவசாய பீடங்களின் புதிய  கட்டிடத்தொகுதிகள் நேற்று வெள்ளிக்கிழமை  திறந்து வைக்கப்படடுள்ளன.

உயா் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, இந்திய தூதுவா் தரன்ஜித் சிங் சத்து, வட மாகாண  ஆளுநர் றெஜினோல்ட் குரே ஆகியுார் கலந்துகொண்டு  உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனா்.
இந்திய அரசின்  600 மில்லியன் ரூபா நிதியுதவியில்  பொறியியல் பீடத்திற்கான இயந்திரவியல், உற்பத்தி அலகு, செயல் முறை அலகு ஆகிய கட்டிட தொகுதிகளும், விவசாய பீடத்தில் விளையாட்டு, கணிணி, மற்றும் நூலக கட்டிட தொகுதிகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இரண்டு  பீடங்களுக்கும் தலா 300 மில்லியன் ரூபா  இந்திய  அரசின் உதவியின் மூலமே இக்கட்டிடத் தொகுதிகள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
விடுதலைப்புலிகளினால் அனைத்துலக தமிழ் பல்கலைகழகமாக கட்டப்பட்டு முடிவுறாத நிலையில் காணப்பட்ட சில கட்டங்களை கொண்டிருந்த அறிவியல் நகா் பிரதேசம் 2009 யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னா்  இராணுவ முகாமாக காணப்பட்டது. பின்னா் அது மிகப்பெரும்  இராணுவப் பயிற்சி முகாமாக மாற்றப்படவிருந்த நிலையில் சில அரசியல் வாதிகளின்  முயற்சியின் காரணமாக  இராணுவத்திடம் மீட்கப்பட்டு  யாழ் பல்கலைக்கழகத்திடம் கையளி்க்கப்பட்டது. 
இந்த நிகழ்வில்  உயா் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, இந்திய தூதுவா் தரன்ஜித் சிங் சத்து, வட மாகாண  ஆளுநர் றெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினா்களான சிறிதரன், அங்கஜன் இராமநாதன்,  யாழ் இந்திய துணைத்தூதுவா் நடராஜன் , பல்கலைகழக துணைவேந்தர்  விக்கினேஸ்வரன், மற்றும் பீடாதிபதிகள், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபா், திணைக்களங்களின் தலைவா்கள் மாணவா்கள்  ஆகியோா் கலந்துகொண்டனர்.   நன்றி வீரகேசரி

நாட்டின் இனங்கள் யாவும் ஒன்றுபட்ட சமுகமாக வாழ அரசியல் தீர்வு முக்கியம் ; யாழ் .புனித பத்திரிசியார் கல்லூரியில் கர்தினால் மல்கம் றஞ்சித்

29/06/2017 அமைதியை நிலைநாட்டும் நாட்டுப் பிரஜைகளை உருவாக்குவதில் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு முக்கிய பங்குண்டு எனவும், இப்பணியை இக்கல்லூரி நிறைவேற்றிவருகிறது என்றும் இக்கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்த கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம்  றஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நாட்டின் இனப்பிரச்சினைக்கு 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் அடிப்படையாக அமைந்தது என சுட்டிக்காட்டிய பேராயர், இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது அரசியல் திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 
இதேவேளை, எம்மக்களின் அமைதியான வாழ்விற்காக நாம் சேர்ந்து உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
புனித பத்திரிசியார் கல்லூரி கடந்த காலங்களில் மிகச்சிறந்த கல்விமான்களையும் சமய, அரசியல் தலைவர்களையும் உருவாக்கியுள்ளது. தொடர்ந்தும் கல்வியானது மன்னிக்கும் மாண்புள்ள மனிதர்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்ற வேண்டும் என வலியுறுத்திக் கூறினார்.
நன்றி வீரகேசரி
சுவிற்சர்லாந்து மாபியா குழுவின் ஒப்பந்தத்துக்கு இணங்கவே வித்தியாவை வன்புணர்ந்து கொன்றோம்

01/07/2017 சுவிற்சர்லாந்தில் மாபியா குழுவைச் சேர்ந்தவர்கள் இளம் பெண் ஒருவரை கொடூரமாக வன்புணர்வு செய்து கொலைசெய்யும் வீடியோ ஒன்றை தயார் செய்து தரவேண்டும் என தன்னிடம் ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்ததற்கு அமையவே வித்தியாவை கடத்தி கூட்டு வன்புணர்வு செய்து கொலை செய்த தாக சுவிஸ்குமார் என்னிடம் கூறினார். 
அத்துடன்  பெரிய அரசியல்வாதி ஒருவரு டைய சகோதரரினதும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரினதும் உதவியோடே யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து கொழும்புக்கு தான் தப்பிச் சென்றதாகவும் அவர் என்னிடம் கூறினார் என புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டு பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் 6 வது சாட்சியான முகமது இப்லார் மூன்று தமிழ்மொழிபேசும் மேல்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட் பார் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். 
குறித்த மாணவியின் கூட்டு பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கானது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள  தமிழ் மொழி பேசும் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசவர் இளஞ்செழியன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட் பார்  நீதிமன்றில் தொடர் விசாரணையாக இடம்பெற்று வருகின்றது.
நேற்றைய தினம் தொடர் வழக்கு விசாரணையின் மூன்றாவது நாளாக சாட்சிப் பதிவிற்காக மன்று கூடியிருந்தபோது இவ் வழக்கில் 6ஆவது சாட்சியான முகமது இப்லார் என்பவரது சாட்சிப் பதிவுகள் ஆரம்பமாகியிருந்தது. இவரது சாட்சியத்தை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்துடனும் ஏனைய அரச சட்டவாதிகள் குழுவினருடனும்  பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார் ரட்ணம் நெறிப்படுத்தினார். 
இங்கு சாட்சி மேலும் தெரிவிக்கையில், 
சுவிட்சர்லாந்திலுள்ள மாபியா குழுவொன்றின் மூலம் கிடைத்த ஒப்பந்தத்துக்கிணங்கவே ஓர் இளம்பெண்ணை கொடூரமாக வன்புணர்ந்து கொலை செய்வது போல் வீடியோ தேவைப்பட்டமையினால் வித்தியாவை கடத்தி கூட்டு வன்புணர்வு செய்து கொலைசெய்ததாக சுவிஸ் குமார் என்னிடம் கூறினார். அங்குள்ள மாபியா குழு ஒன்றின் மூலமாக இந்த ஒப்பந்தம் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார். 
இதற்கிணங்க சிறிலங்காவில் இருந்தவர்களிடம் இதற்கு ஏற்பாடு செய்ததாகவும் அதன் பின் தான் சுவிட்சர்லாந்திருந்து வந்ததகவும் சம்பவம் நடந்த அன்று தானும் இன்னும் 3 பேரும் கொழும்பில் இருந்ததாகவும் கொழும்பில் இருந்ததற்கு ஆதாரமாக சிசிரிவி கமராவில் பதியப்படும்  வகையிலான இடங்களில் இருந்ததாகவும் சுவிஸ்குமார் என்னிடம் கூறினார். 
வித்தியாவை வன்புணர்வு செய்யும்போது அந்த இடத்தில் தான் இருந்திருந்ததால் தானே முதலில் அவளை வன்புணர்ந்திருப்பேன் என்றும் கூறியதுடன் அதுபோலவே எனது மனைவிக்கும் நடக்கும் என்று கூறி என்னை எச்சரித்தார்.
இந்த வன்புணர்வு வீடியோவை கூகுள் ட்ரைவ் மூலம் சுவிசுக்கு அனுப்பியதாகவும் வித்தியாவை கொலை செய்த இடத்துக்கு அண்மையில் கடற்படை முகாமொன்று இருப்பதனாலேயே அதற்கு அண்மையாக வித்தியாவை வன்புணர்வு செய்து கொலை செய்து போட்டதாகவும் இதனூடாக கடற்படையினர் பக்கம் இதனைத் திசை திருப்ப முயற்சித்ததாகவும் சுவிஸ்குமார் கூறினார் என்றும் சாட்சி தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி

No comments: