எச்சரிக்கை - ஒரு பக்கக் கதை - ஆவூரான்-

.
               
வானதியும் கிரிஜாவும் நல்ல நண்பிகள்.இருவரும் ஒரே பாடசாலையில் தான் ஆசிரியராகக் கடமை பார்க்கிறார்கள். வானதி விஞ்ஞானப் பாடம் கற்பிப்பதால்  தனக்கு நிறைய வாசிக்க வேண்டும் என்று சொல்லி கிரிஜாவின்  காரிலேயே காலையில் பாடசாலைக்குப் போவதும், மாலை வீடு திரும்புவதுமாக காலம் போய்க் கொண்டு இருந்தது.
அன்றும் கிரிஜா  கார் ஓடி வர வானதி விஞ்ஞானப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தாள்
இஞ்சபார் வானதி வாகனம் ஓடிக்கொண்டு டிவைசைப் பாவிக்கிறது லயிற் சிக்கினல் விழுந்ததும் தெரியாமல் சற் பண்ணிக் கொண்டு நிற்கிற ஆட்களைக் கண்டால் வெறுப்பு வெறுப்பாக வருகுதுதடி.”
ஓமடி கிரிஜா இப்படியான ஆட்களுக்கு டிவைஸ்யே தொடாத மாதிரி பயங்கரமான எச்சரிக்கை கொடுத்து கூடுதல் (F)பயின் அடிக்க வேணும்
இருவரும் கதைத்து கொண்டு வந்ததில் வீடு வந்து விட்டது. கிரிஜா காரை நிறுத்தியதும்.
கிரிஜா உள்ள வாவன் நேற்று பலூடா செய்து பிறிச்சுக்குள்ள வைச்சனான் ஒரு கிளாஸ் குடிப்பம்
வீட்டினுள்ளே போய் வானதி கொடுத்த பலூடாவை குடிக்கும் போது வானதியின் கணவர்  பிள்ளைகளை முற்றத்தில் இறக்கி விட்டு விட்டு தபால் பெட்டியில் இருந்த கடிதங்களை கைய்ல் எடுத்துக் கொண்டு உள்ளே வந்தவர்
வானதி உமக்கு…”என்று ஒரு கடித உறைய அவளிடம் நீட்டினான்
எனக்கா..” அலட்சியமாக கடிதத்தை வாங்கி உடைத்தவள் அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.
மூன்று வாரங்களுக்கு முன் சனிக்கிழமை ஸ்ப்பிறிங் வேல் றோட்டில் புத்தகம் வாசித்துக் கொண்டு கார் ஒடியதற்காக  கைவேப் பொலிசாரின் கமராவில் பிடி பட்டிருப்பதாக  பொலிசார் $900.00 டொலர்கள்(F) பயின் அனுப்பியிருக்கிறார்கள் .
பலூடா குடித்துக் கொண்டிருந்த கிரிஜா சத்தமில்லாம்  வெளியேறினாள்.