தமிழ் சினிமா


தி ஜங்கிள் புக் (The Jungle Book)




பிரபல எழுத்தாளர் Rudyard Kipling'ன் நாவலை மையமாக வைத்து இன்றைய கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பிரமாண்டமாக வெளிவந்துள்ளது "தி ஜங்கிள் புக்".

கதை:

காட்டு விலங்குகளுக்கு மத்தியில் வளரும் ஒரு 10 வயது சிறுவன் "மோக்லி"தான் இந்த படத்தின் ஹீரோ. அடர்ந்த காட்டில் அனாதையாக இருக்கும் சிறுவனை பகீரா என்ற கரும்சிறுத்தை கண்டெடுத்து ஒரு ஓநாயிடம் கொடுத்து வளர்த்து வருகிறது.
ஓநாய் கூடத்தில் வளர்ந்து வரும் மோக்லிக்கு 'ஷேர்கான்' உருவில் ஒரு பெரிய பிரச்சனை வருகிறது. காட்டில் மனிதர்கள் இருப்பதை விரும்பாத வேட்டை ராஜாவான ஷேர்கான் என்ற புலி, மோக்லியை கொல்ல துடிக்கிறது. இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக காட்டை விட்டு வெளியேறி மனிதர்களோடு இணைய நினைக்கும் இந்த சிறுவனுக்கு பல தடைகள் வருகிறது.
சிறுவன் தப்பிவிட்டதால் கோபமான ஷேர்கான், ஓநாய் கூட்டத்தின் தலைவியை கொல்கிறது, இந்த செய்தியை கேட்ட மோக்லி, மீண்டும் திரும்பி வந்து எவ்வாறு பழிவாங்குகிறான் என்பது தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்:

12 வயதே ஆன நீல் சேதி நடிப்பில் குறை காண முடியாத அளவிற்கு நடித்துள்ளார். உலகத்தை பற்றி ஒன்றும் அறியாத சிறுவனாக மனதை கவர்கிறார்.
மோக்லிக்கு அடுத்து, பார்ப்பவர்களை கவரும் கதாபாத்திரம் என்றால் அது கரடி 'பாலு'தான். கொடிய பாம்பிடமிருந்து மோக்லியை காப்பாற்றும் பாலு, அதற்கு நன்றிகடனாக அவனை கொஞ்சம் வேலைவாங்குவது முதல், அவனுக்கு ஆபத்து என தெரிந்து 'நீ எனக்கு நண்பனுமில்லை, உன் உதவி எனக்கு தேவையுமில்லை.. நீ உடனே இங்கிருந்து சென்றுவிடு!' என கூறிவிட்டு கிளைமாக்ஸில் புலியுடன் சண்டை போடுவது வரை, படம் பார்ப்பவர்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறது இந்த கதாபாத்திரம்.
ஒரே ஒரு நடிகரை மட்டும் வைத்து கொண்டு மற்ற அனைத்து கதாபாத்திரங்களையும் தத்ரூபமாக சிஜியில் உருவாக்கி ஆச்சர்யப்பட வைத்துள்ளார் இயக்குனர் Jon Favreau. அயன் மேன் படங்களை இயக்கி புகழ் பெற்ற Favreau, தன்னால் இயற்கையான சூழ்நிலையில் ஒரு படத்தை உருவாக்கமுடியும் என நிரூபித்துள்ளார்.
அவதார், லைப் ஆப் பை போன்ற படங்களை போல் இந்த படத்தையும் முழுக்க முழுக்க கிரீன் மேட்டில் படமாக்கியுள்ளனர்.
சிறுவயதில் படித்த, டிவியில் பார்த்த ஒரு கார்ட்டூன் கதையை இப்போது பெரிய திரையில் பிரமாண்டமாக பார்க்கும் போது கண்டிப்பாக அனைவருக்கும் புல்லரிக்கும். மெதுவாக செல்லும் படம் சற்று பொறுமையை சோதித்தாலும், 3Dயில் பிரமாண்ட காட்சிகளுக்காக கண்டிப்பாக பார்க்கலாம்.
படம் பார்த்து முடித்த பிறகு ஒரு நிஜ காட்டிற்கே சென்று வந்த அனுபவம். மொத்தத்தில் The Jungle Book - குழந்தைகளை நிச்சயம் கவரும்.

Rating: 3.75/5.0   நன்றி  cineulagam